Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thirumanam Serial: அவன் தூக்கிக்கறான்... இவள் அவன் நெற்றி வியர்வையை...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கோயில் படி ஏற முடியலையாம் ஜனனிக்கு. அவளுக்கு வேற உடம்பு சரியில்லையா.. அதான் சந்தோஷ் தூக்கிக்கிறான்னு நினைச்சாலும், எந்த புருஷனுக்கு பொண்டாட்டியைத் தூக்கிக்க ஆசை இருக்காது?!

அதேதான் இவனும் ஆசைப்பட்டு ஜனனி கோயில் படி எற முடியலைன்னு சொன்ன உடனே லபக்கென்று தூக்கிக்கறான். கை கால் முளைச்ச கனவா நீ... என்று அவன் பாடலை... பார்க்கறவங்களை பாட வச்சு, மஞ்சள் காட்டு மைனா போல மஞ்சள் புடவையில் இருந்த ஜனனியை தூக்கிகிட்டு படி ஏறுகிறான்.

படியில் ஜனனியைத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஆசை கணவன் சந்தோஷுக்கு வியர்க்கிறது என்று அவனின் நெற்றி வியர்வையை தனது முந்தானையால் துடைத்து விடுகிறாள் ஜனனி. இந்த காதல் உலகத்தில் இருவர் மட்டுமே லயித்து பயணிக்கிறார்கள்.

திருமணம் இருமனம்

திருமணம் இருமனம்

திருமணம் சீரியலில் மனதுக்கு ஒப்பாமல், காதலியை மறக்க முடியாமல் இரு மனமாக ஜனனியைத் திருமணம் செய்துக் கொள்கிறான் சந்தோஷ். ஜனனியிடம் அவன் மனது ஒட்டவே இல்லை. இருவரும் விவாகரத்து செய்துக்கலாம் என்று சந்தோஷ் கூறுகையில் மவுனமாக ஆமோத்தித்து அதற்கும் சம்மதம் தெரிவிக்கிறாள் ஜனனி.

காதலி விலகல்

காதலி விலகல்

சந்தோஷ் சந்தோஷ் என்று அவனையே நினைச்சுகிட்டு இருந்த காதலி, ஜனனியுடன் ஒப்பிடுகையில் முரட்டுத் தனமாக நடந்துக்கொள்ள, அவள் மீது இருந்த காதல் சட்டென்று மறைந்துவிடுகிறது. சந்தோஷை மாயாவுடன் சேர்ந்து கடத்தி அது இது என்று இந்த காதல் காணாமல் போக பல கதைகளை சொன்னார்கள். கடைசியில் சீரியல் கதையை எதிர்பார்த்தபடி காதலி விலகிக்கொள்ள சந்தோஷுக்கு ஜனனி மீது காதல் வருவது போல கதையை கொண்டு வந்துவிட்டார்கள்.

ஜனனி காணாமல் போக

ஜனனி காணாமல் போக

ஜனனி சந்தோஷை துடிக்க வைத்துவிட்டு காணாமல் போக, அவளை ஒரு வழியாக கண்டுபிடிக்கும்போதுதான் இருவர் மனமும் ஓர் புள்ளியில் இணைந்து காதலில் ஐக்கியமாகிறது. ஒரு வழியாக வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கையில்தான் ஜனனிக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு நாட் வைத்துள்ளார்கள். உடம்பு சரி இல்லாத ஜனனிக்கு சந்தோஷ் செய்யும் பணிவிடைகள் காதல் விரும்பிகளுக்கு ரொமான்ஸ் காட்சிகள்.

இவன் தூக்கிக்க அவள் துடைக்க

இவன் தூக்கிக்க அவள் துடைக்க

இப்போதாங்க...என் ஜோடி மஞ்ச குருவின்னு ஜனனி மஞ்சள் நிற புடவையில் தேவதையாக ஜொலிக்க, அவன் அந்த தேவதையை கை நோகலை என்று பொய்யான வாதம் செய்து, காதலில் விழுந்தவனாக காதலை சுமந்த அவன் கைக்கு, ஜனனி சுமையாகத் தெரியாமல் பூவாய் நினைத்து அவளைத் தூக்கிக் கொண்டு கோயில் மலை படிகளில் அசால்ட்டாக ஏறி நடந்து போகிறான். தன்னை சுமந்து நடக்கும் கணவன் நெற்றி வியர்வையை தனது முந்தானையில் ஒத்தி ஒத்தி துடைத்து விடுகிறாள் ஜனனி. இதமான அவளின் புடவை ஸ்பரிசத்தில் கிறங்கிய சந்தோஷ் ஜனனியின் நெற்றியில் முத்தம் பதிக்கிறான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+