நாயகி கழுத்தில் ஃ .. அதை மட்டும் கண்டுபிடிச்சுட்டா போதும்... கடையை சாத்தி விடலாம்!
சென்னை: சன் டிவி சீரியலின் நாயகி இந்த வாரம் முடிஞ்சுருமா, இல்லை அடுத்த வாரமான்னு எதிர்பார்க்கற அளவுக்குதாங்க கதையின் போக்கு நகருது.
கதாநாயகியின் கழுத்தில் ஃ ..அதான் ஆயுத எழுத்து போல ஒரு மச்சம். அதை கண்டுபிடிச்சுட்டா அவதான் மொத்த சொத்துக்கும் வாரிசு. இப்போதைக்கு அது மட்டும்தான் சஸ்பென்ஸ்.
கதையில் முதலில் ஆனந்தி, திரு சாந்தி முகூர்த்தம் நடக்க முடியாம சதி. இங்க ஆனந்தி உயிர் தோழி கண்மணிக்கும், அவள் புருஷனுக்கும் இன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கலை.

தென்றல்
இயக்குநர் குமரனின் திருமதி செல்வம், தென்றல் போன்ற அளவுக்கு கதையில் வெயிட் இல்லை.சின்ன முடிச்சு வச்சுக்கிட்டு, பெரிய களத்துல குதிச்சு இருக்கார்.

அழிக்கும் என அஞ்சி
திருமுருகனுக்கும், ஆனந்திக்கு பிறக்கும் குழந்தை தம்மை அழைக்கும் என பயந்து, முதலிரவே நடக்க விடாமல் செய்கிறார் சொத்து ஆசை பிடித்த திருவின் தந்தை.கலிவரதன்.. இது என்ன கண்ணன் காலத்து கதையா?

இன்னும் காதல்
திருவின் மீது இன்னும் வெறிபிடித்த காதலில் இருக்கும் கலிவரதனின் பிசினெஸ் பார்ட்னர் ராஜசேகரின் பெண் அனன்யா. ஒரு பெண் இப்படியெல்லாம் சதித்திட்டம் போடுவாளா என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

வடிவேல்
இத்தனை சொத்துக்களுக்கும் வாரிசு ஆனந்திதான் என்று வடிவேலிடம் கேட்டு தெரிந்துகொண்ட அனன்யா, அதை தமது தந்தையின் பிசினெஸ் பார்டனர் கலிவரதனிடம் , கூட சொல்லாமல், ஒண்ணுமே சொல்லாம செத்துட்டான் அங்கிள்னு சொல்றது கொடூரத்தின் உச்சம்.

முயற்சியில்
ஆனந்தியை கொலை செய்துவிட வேண்டும் என்று அனன்யா. தந்தையையும், அங்கிளையும் தூண்டிவிடும் கட்டங்கள் இருக்கிறதே கொடூரம்.இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுவது என்ன அதிசயம்.அதுவும் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்பது போல

பேரம்
ஆனந்தியை கொலை செய்ய முயன்றபோது திரு வந்து மனைவிக்கு பதில் மாட்டிக்கொள்கிறான்.
திரு கலிவரதன் செல்வந்தரின் மகன் என்றாலும், தனது பிசினெஸ் பார்ட்னரின் பெண்ணுக்காக கணவனை விட்டுக் கொடுத்துவிடு, அவனை நாங்கள் அமெரிக்கா சென்று காப்பாத்தி விடுகிறோம் என்று, கலிவரதன் கூற திரு உயிர் பிழைத்தால் போதும் என்று கை எழுத்திடுகிறாள் ஆனந்தி.

காப்பாற்றுமா?
ஆனந்தியம், திருவும் எதற்கெடுத்தாலும் எங்கள் காதல் காப்பாத்தும், எங்கள் காதல் வாழ்ந்தால் போதும், நாங்க பிரிய முடிவெடுக்கலாம், ஆனால், எங்கள் காதல் அதுக்கு ஒத்துக்காதுன்னு சொல்றதெல்லாம் வெறும் லாஜிக்கா இருக்கு.சில சமயங்களில் இடம்,பொருள், ஏவல் தெரியாமல் சொல்லும்போது அருவருப்பாகவும் இருக்கிறது.

நாளைக்கா
குமரன் சார் நிலை நிறுத்திக்கோங்க..உங்க இடத்தை.. தெரியாமத்தான் கேட்கறேன்... சீரியல்னா சிக்கல், கஷ்டம், அழுகையாத்தான் இருக்கணுமா? இன்னிக்கு முடியுமா, நாளைக்கு முடியுமான்னு இருக்கு உங்க சீரியல்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications