உள்ளங்கையோடு உள்ளங்கையை வைச்சு.. அடடா கட்டிப்பிடி வைத்தியம் மாதிரியே இருக்கேப்பா!
சென்னை: விஜய் டிவியில நாம் இருவர் நமக்கு இருவர்னு ஒரு சீரியல்.சரவணன் மீனாட்சி செந்தில் ரெட்டை வேஷத்துல ட்வின்சா நடிக்கறார்.ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிருச்சு.
ஒருத்தர் டாக்டர், இன்னொருத்தர் சும்மா இருக்கறவன். இவங்களோட அப்பாவுக்கு ரொம்ப சீரியசான நோய் வந்திருக்கு. இதை அறிஞ்சுகிட்ட டாக்டர், ரொம்ப மனசு வருத்தத்துல இருக்கார்.
யாருகிட்டயும் சொல்ல முடியாம,ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவம் பார்க்கறார். இதுல ஒரு பியூட்டி என்னன்னா படிச்ச டாக்டரும் இன்னும் மனைவியுடன் ஒண்ணு சேரலை. படிக்காத பையனும் இன்னும் மனைவியுடன் சேரலை.

மனைவி
சும்மா ஊர் சுத்திகிட்டு திரியும் புள்ளையை அப்பாவுக்கு பிடிக்கலைன்னாலும் புள்ளைக்கு அப்பா பாசம் இருக்கம்தானே.. பொண்டாட்டிகிட்ட அழறான். அவன் பொண்டாட்டி நல்லா படிச்சவ.. மாமனாரை பார்த்துட்டு, அவருக்கு நம்பிக்கை கொடுக்கணும்னு பசிச்சா வெறும் இட்லி சட்னின்னு கொடுக்காதீங்க.. அவருக்கு எலும்புக்கறி புடிக்கும் வாங்கி குடுங்க... காரசாரமா சாப்பிடட்டும்.. உடம்பு தன்னால சரியாய் போகும்னு நம்பிக்கை குடுக்க அப்படி சொல்லிட்டு போறா.

மனைவி
டாக்டர் புள்ளையின் மனைவி அமைதியான குணவதி. அவ்வளவா படிக்காதவ. புருஷனிடம் அதிர்ந்து பேச கூட தயங்கறவ. புருஷன் ஆஸ்பத்திரியிலேர்ந்து வந்ததிலிருந்து குட்டிப் போட்ட பூனை மாதிரி தவிக்கறானேன்னு அவளும் தவிக்கறா. அவன் கூடவே நடக்கறா..

இப்போ ஏன்?
இரு இரு.. ஏன் இப்போ என்கூட கூட நடக்கறே.. உனக்கு என்னாச்சின்னு கேட்கறேன். இல்ல.. நீங்க டென்ஷனா இருந்தீங்க... உங்க டென்ஷனை நான் வாங்கிக்கலாமேன்னுதான்.. உங்க கூட பேசறதுக்காக நடக்கறேன்னு சொல்றா..

நீ வாங்கிக்கறியா?
என்னது என் டென்ஷனை நீ வாங்கிக்க போறியா.. என்ன கமல் சார் சொன்ன மாதிரி கட்டிப்பிடி வைத்தியம் பண்ண போறியான்னு சிரிச்சுகிட்டே கேட்கறான். இல்லைங்க.. இது ஒரு விதமானது.. இதை செய்தா உங்க டென்ஷன் குறையும், நான் வாங்கிக்கிட்ட மாதிரி தெரியும்னு சொல்றா.

கண்ணை மூடுங்க
எங்கே என்ன செய்ய போறே.. சொல்லு பார்ப்போம்னு அவனும் கேட்கறான். இப்படி சம்மணம் போட்டு உட்காருங்கன்னு சொல்றா. அவன் உட்கார, இவளும் அவன் எதிரே சம்மணம் போட்டு உட்கார்றா. உள்ளங்கை தெரியற மாதிரி ரெண்டு கையையும் நீட்டி, கண்களை மூடுங்கன்னு சொல்றா இவனும் மூடறான்.

கை வச்சு
புருஷன் உள்ளங்கையோடு தனது உள்ளங்கையை வச்சு மெதுவாக இதமாக தடவி தடவி எடுக்கறா. இவனுக்கு சுகமா இருக்கு. ஒவ்வொரு விரலின் நுனி முதல் அடிவரை அழுத்தம் கொடுத்து கொடுத்து. பின்னர் இதமா தடவறா. அவன் ஆழ்ந்த சுகத்துக்கு சென்று நல்லாத்தாண்டி இருக்குன்னு சொல்றான்.
அதுக்குள்ளே அப்பாவுக்கு ரொம்ப முடியலைன்னு போன் வந்துருச்சுங்க... அவன் பாவம் டாக்டராச்சே.. நோயாளியைத்தானே முதலில் பார்க்கணும்.. அதுவும் பெத்த அப்பா, உடனே ஓடிட்டான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications