சாய்பல்லவி சீதையாக நடித்த ராமாயணம் ட்ரைலர் எப்படி இருக்கு? பிரம்மாண்டம் ஓகே, ஆனால் இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமாயணம் என்ற காவியத்தை புத்தகத்தில் படித்திருந்தாலும் அதை விசுவலாக திரையில் பார்ப்பது என்றுமே ரசிகர்களுக்கு பிடித்தது தான். அதனால் தான் ராமாயணத்தை புதிய கதையாக எடுக்கப் போகிறோம் என்று அறிவித்த நாளிலிருந்து படத்தின் மீது எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது. அதிலும் ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதையாக, யாஷ் ராவணனாக நடிக்கிறார் என்றதும் இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த காத்திருப்புக்கு இன்று முதல் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

அந்த ட்ரெய்லரை பார்த்ததும் முதலில் வரும் பீலிங் என்ன தெரியுமா? கண்ணுக்கு ரொம்ப அழகா இருக்கு ஆனா மனசுக்குள்ள ஏதோ ஒரு வெற்றிடம் இருக்கே என்பதுதான்.

ராமாயணம் ட்ரெய்லர்

வழக்கமாக ராமாயணம் என்றால் ராமரை காட்டித்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த ட்ரெய்லரில் முதல் சில வினாடிகளிலேயே இராவணனின் உலகத்தை காட்டுகிறார்கள். லங்கா, அரண்மனை, புஷ்பக விமானம், பிரம்மாண்ட செட்டுகள், யாஷ் (ராவணன்) கம்பீர தோற்றம் என இந்த எல்லா காட்சிகளும் ஹாலிவுட் ஸ்டைல் பீல் கொடுக்கிறது. யாஷ் ஸ்கிரீனில் வரும் ஒவ்வொரு பிரேமிலும் ஒரு கம்பீரம் இருக்கிறது. அதனால் தான் இந்த ட்ரெய்லரை பார்த்ததும் ரசிகர்கள் ட்ரெய்லர்ல ராமரை விட இராவணன் தான் அதிகமாக மனதில் நிற்கிறார் என்று கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Ramayana Sai Pallavi Ranbir Kapoor Yash

அதே நேரத்தில் ரன்பீர் கபீரின் லுக்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் ட்ரெய்லர் முழுவதும் பார்த்தால் அவருக்கு பெரிய அளவில் எமோஷனல் காட்சிகளோ, மாஸ் தருணங்களோ காட்டப்படவில்லை. குதிரையில் வருவது வில்லுடன் நிற்பது, சீதையுடன் சில காட்சிகள் அவ்வளவுதான் அவர் தெரிகிறார். அதனால் ராமராக அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை டிரைலரை வைத்து முழுமையாக சொல்ல முடியவில்லை.

சாய் பல்லவியின் நடிப்பு

அதுபோல சாய்பல்லவி கொஞ்சம் காட்சிகளிலே கவனம் ஈர்த்து வருகிறார். இந்த ட்ரைலரில் அவர் அதிகமான நேரம் வரவில்லை ஆனால் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான முக பாவனையுடன் மேக்கப் அதிகம் இல்லாத தோற்றமும் நன்றாகவே இருக்கிறது. அதனால் அவரைப் பார்த்த ரசிகர்கள் சீதையாக சாய்பல்லவி சரியான தேர்வு என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இசை

அதுபோல இந்த படத்திற்கு ஏஆர் ரகுமானும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசை அமத்திருக்கிறார்கள். அதனால் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் ட்ரெய்லரின் இசை நன்றாக இருந்தாலும் கூஸ் பம்ப்ஸ் வரலையே என்று சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

பலம் இதுதான்

இந்த ட்ரெய்லரில் மிகப்பெரிய பலம் என்னவென்றால் விஷுவல் எபெக்ட் தான். ஒவ்வொரு பிரேமும் ஓவியம் போல இருக்கிறது. லங்கா, காடு, அரண்மனை, போர்க்களம், எல்லாமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிக அதிக செலவிலான படங்களில் இதுவும் ஒன்று என்பதற்கு ட்ரெய்லரே சாட்சி. ஆனால் இதுதான் ரசிகர்கள் குறையாகவும் இருக்கிறது.

Ramayana Sai Pallavi Ranbir Kapoor Yash

அதாவது இந்த ட்ரெய்லர் வெளியானதும் சிலர் இதுதான் இந்திய சினிமாவின் அடுத்த பிரமாண்டம் என்று பாராட்டுகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலர் இந்த ட்ரெய்லர் பார்க்க கார்ட்டூன் மாதிரி VFX இருக்கு. சில காட்சிகள் டிவி சீரியல் பீல் கொடுக்குது. எமோஷனல் இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம். ராஜமௌலி படங்களை பார்த்த பிறகு எதிர்பார்ப்பு வேற லெவலில் போயிருச்சு என்று விமர்சித்து வருகின்றனர்.

உண்மைய சொல்லனும்னா இன்று இந்தியாவில் எந்த பிரமாண்ட படம் வந்தாலும் அதை பாகுபலி, RRR படங்களுடன் ஒப்பிடாமல் ரசிகர்கள் விட மாட்டார்கள் போல. அதனால் தான் இந்த ட்ரெய்லருக்கும் அந்த ஒப்பீடு வந்துவிட்டது. ஆனால் இது வெறும் 4 நிமிட ட்ரெய்லர் மட்டுமே. முழு படம் எப்படி இருக்கும் என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.

Ramayana Sai Pallavi Ranbir Kapoor Yash

படத்தின் குறை

ட்ரைலரை பார்த்த பிறகு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது பணம் செலவு பண்ணி இருக்காங்க, உழைப்பும் தெரிகிறது. ஆனால் அட.. இதுதான் ராமாயணம் என்று உடம்பே சிலிர்க்கும் அளவிற்கு ஒரு உணர்வு ட்ரைலரில் கிடைக்கிறதா என்றால் அந்த உணர்வு முழுமையாக வரவில்லை. யாஷின் இராவணன், சாய்பல்லவி சீதை விசுவல் ஆகியவை பெரிய பிளஸ். ஆனால் ரன்வீர் கபூரின் ராமர் கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங்காக காட்டி இருக்கலாம்.

பொய் செய்தியால் உடைந்து விட்டேன்.. அந்த சம்பவம் ரொம்ப பாதித்துவிட்டது! நடிகை சாய் பல்லவி உருக்கம்
எமோஷனலான காட்சிகளும் இதில் கொடுத்திருந்தால் ட்ரைலர் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் "கண்ணுக்கு பிரம்மாண்டம்... மனசுக்கு இன்னும் கொஞ்சம் எமோஷனல் தேவை"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+