நடிகர் சுரேஷ் கோபி எம்பியாக தேர்வானதற்கு பின்னணியில் உருக்கமான காரணம் தெரியுமா?
சென்னை: மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது தெரியுமா? பெயர், புகழைத் தாண்டி நல்ல மனசுதான் அவரை வெற்றி பெற வைத்திருக்கிறது. அதிலும் கேரளாவில் ஒரே ஒரு பாஜக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுரேஷ்கோபி பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங்கிற்காக டெல்லி சென்றிருந்தார். அங்கு அவரை டெல்லியின் பல தெருக்களில் ஓட ஓடி விரட்டிக் கொல்வார்கள். அந்த கூலிப்படை கும்பலுக்கு தலைவன் நம்ம தியாகராஜன் தான். அன்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

இந்த டெல்லி தெருக்களில் நியூடெல்லி பட ஷூட்டுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் இதே டெல்லியில் "நான் சுரேஷ்கோபி...கடவுள் மீது ஆணையாக...." என்று நாட்டின் பிரதிநிதியாக சத்ய வாக்குமூலம் எடுப்பேன் என்று.... நினைத்திருக்க மாட்டார். ரதீஷ் என்று ஒரு நடிகர்... 80களில் மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ.. பின்னாளில் அவர் வில்லனாக வந்தார்..
வில்லனாக சுரேஷ் கோபியோடு அவர் நடித்த கமிஷனர் மிகப்பெரிய ஹிட்.. கேரளம் முழுக்க சுரேஷ் கோபியோடு, வில்லன் மோகன் தோமசும் பேசப்பட்ட படம்.. மோகன் தோமஸாய் ஹைடெக் அரசியலை மாற்றும் வில்லன் ரதீஷ் தான்.. ரதீஷ் மனைவி டயானா. ரதீஷின் மாமனார் முன்னாள் எம்.பி.ஹேமச்சந்திரன்... ரதீஷுக்கு ஆண் இருவர். பெண் இருவர்னு நான்கு குழந்தைகள்...
திடீர்னு 2002ல் ரதீஷ் ஹார்ட் அட்டாக்கில் மறைந்து விட்டார். அவர் வாங்கி வைத்த கடனுக்காக அவர் குடும்பத்தை ஒரு ஃபைனான்சியர் பிடித்து வைக்க சுரேஷ்கோபியே சினிமா நாயகனைப் போல் அங்கு போய் கடனை கொடுத்து அதிரடியாக மீட்டு வருகிறார். அதோடு விடவில்லை. அந்த நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்தார்
இவருக்கு நடிகை மேனகாவின் கணவர் சுரேஷும் உதவ படிப்பு நடக்கிறது. தந்தையை இழந்த சோகத்தில் உள்ள நான்கு குழந்தைகளுக்கும் மீண்டும் சோகம். தாய் டயானா 2014ல் கேன்சரில் இறந்துவிட உறுதுணையாய் இரண்டு சுரேஷ்களும் இருக்கின்றனர். இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.
சுரேஷ் கோபி நூறு சவரன் தங்கம் கொடுத்து.....நன்றாக கேளுங்கள்...நூறு சவரன்.... அந்த பெண்ணை துபாயில் பாங்க் வேலையிலுள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்..
சினிமாவால் கெட்டுப்போகிறது எனக் கூவும் இடத்தில் அவரும் ஒரு கட்சிக்காரர் தான்.. இன்னும் வெளியே சொல்லாமல் பல உதவிகள் ஆதிவாசிகளுக்கு செய்தவர் சுரேஷ்கோபி.
ரதீஷின் மாமனார் ஒரு எம்.பியாக இருந்தவர். அவரின் பேத்திக்கு செய்த காலத்தால் அழியாத உதவி சுரேஷ்கோபியை அதே எம்.பியாக்கி இருக்கிறது. அன்று டெல்லித் தெருக்களில் ஓடிய அதே சுரேஷ்கோபி இன்று சைரன் வைத்த காரில்...
எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் புகழ், பணம் போன்றவை சொல்லப்பட்டாலும் நல்ல குணங்களும், நல்ல மனசும்.... அது தான் சார் கடவுள்.... அது எதுவும் செய்யும்... என தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications