Ayudha Ezhuthu Serial: உங்க வசதிக்கு கேரக்டரை தொலைச்சுடறீங்க எப்படி?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் காளி அம்மாவின் கணவர் கலெக்டர் இந்திராவுக்கு ஆதரவாக இருப்பது போல காண்பித்தார்கள், இப்போது அவர் ஆளையே காணோம்.
மாவட்ட சப் கலெக்டர் இந்திராவுக்கு தனக்கு எதிரியான காளி அம்மாவின் மகன்தான் சக்தி என்று தெரியாது. அவன் படிக்காதவன் என்றும் தெரியாது..
அவன் மீது காதலில் விழுகிறாள்.. இதற்கு துணையாக காளி அம்மாவுக்கு எதிராக இருக்கும் அவளது கணவர் சக்தியின் அப்பாவும் இருக்க கல்யாணமும் நடக்கிறது. அனால், கல்யாணம் நடந்த கையோடு அந்த கதாபாத்திரம் காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போகிறார்
கல்யாணம் முடிந்த கையோடு காளி அம்மாவின் பழி வாங்கும் படலம் ஆரம்பமாக அதுவரை பக்க பலமாக இருந்த சக்தியின் அப்பா கதாபாத்திரம் எங்கோ காணாமல் போகிறது. அப்புறம் என்ன காளி அம்மா இஷ்டத்துக்கு சப் கலெக்டர் இந்திராவை ஆட்டு ஆட்டு என்று ஆட்டி வைக்கிறார்.

வேலைக்காரி கணக்கா
வீட்டு வேலைக்காரி கணக்கா வேலை வாங்கறாங்க. சப் கலெக்டர் இந்திராவும் மாமியாருக்கு அடங்கிய மருமகளா எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வேலை பார்க்கறா. சாப்பிட பழைய சோறு போட்டு அதில் பச்சை மிளகாய் மிதக்க கொடுத்தாலும் அதை சாப்பிடும் அழகு இருக்கிறதே.. அடடா!

மருமகள் என்றால்
மருமகள் என்றால் படித்து மாவட்ட கலெக்டர் என்றாலும் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி மாமியார் கொடுமை என்றாலும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? நியாத்தை தட்டிக் கேட்க வேண்டாமா என்று படித்த பெண்கள் யோசிக்க வேண்டும் என்பது போல கதையை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

விஷம் வச்சுட்டதா
கையில் சூடு வைக்கறாங்க மாமியார். பாலில் விஷம் வச்சுட்டதா பழி போடறாங்க. இதெல்லாம் சகிச்சுக்கிட்டு அந்த மருமகள் அந்த வீட்டோடு இருக்கா. இல்லை பாலில் விஷம் கலக்கலைன்னு சொன்னால் அதை நிரூபிக்க பால் குடம் எடுன்னு சொல்றாங்க. அப்பப்பா.. முடியலை!

வாழ்க்கைக்கும் படிப்புக்கும்
உண்மையில் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? இங்கு சப் கலெக்டராக இருந்து கொண்டே மாமியார் கொடுமையை சகித்துக் கொண்டு இருக்கும் சக்தியை குணவதி என்று சொல்வதா இல்லை ஏமாந்த பெண் என்று சொல்வதா? இப்படி அடாவடி செய்யும் மாமியாரிடம் ஒரு பெண் இப்படித்தான் பொறுத்துக்க கொண்டு செல்ல வேண்டுமா?
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications