நடிகை மீனாவே சொல்லிட்டாரே.. நாட்டாமையின் சக்ஸஸ்.. சரத்குமார் பற்றி கேட்டதுமே ராதிகா சொல்றது பாருங்க
சென்னை: கே.எஸ்.ரவிக்குமாரின் "நாட்டாமை" படத்தில் தான் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்தும், நடிகர் சரத்குமாரின் குணநலன்கள் குறித்தும் நடிகை மீனா தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஜெயா டிவியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி சில வருடம் முன்பு நடத்தி வந்தார்.. அப்போது நடிகர் சரத்குமாரை நேர்காணல் செய்திருந்தார்.. இந்த நிகழ்ச்சிக்கு, நடிகை ராதிகா, மீனா உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாகவும் அழைத்திருந்தார்.

அப்போது மீனாவிடம், சரத்குமாருடன் அதிக படங்கள் நடித்துள்ளதால், அவரிடம் உள்ள சிறப்பியல்புகள் குறித்து கேள்வி எழுப்பினார் நடிகை சுஹாசினி.. இதற்கு மீனா சொல்லும்போது, "நான் அவருடன் நிறைய படங்களில் நடிச்சிருக்கேன். ஆனால், முதல் படமே அவருடன் ஹீரோயினாக நடிக்கவில்லை. இதய வாசல் என்ற படத்தில் சரத் சார் கேரக்டர் ரோல் செய்திருந்தார்..
இதற்கு பிறகு நாங்கள் முதல் முதலில் சேர்ந்து நடித்த படம் நாட்டாமை.. அந்த படத்தில் நான் நடிக்கும் எண்ணமே இல்லை. அப்போது தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருந்தேன். தமிழ் படங்களை, தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து கொண்டிருந்தேன்.
நாட்டாமை: அதுவும் இல்லாமல், நாட்டாமை படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொன்னார்கள். இதில் குஷ்புவும் நடிப்பதாக சொன்னார்கள். இத்தனை சீனியர்கள் இருக்கும்போது, நாம் எதுக்காக நாட்டாமை படத்தில் நடிக்க வேண்டும் என்று தயங்கினேன்.
பிறகு, என்னுடன் இருந்தவர்கள் நிறைய அட்வைஸ் தந்தார்கள். நாட்டாமை படத்தை மறுக்க வேண்டாம் என்றும், கேஎஸ் ரவிக்குமார், சார் சரியான திட்டமிடலுடன் படம் எடுப்பார்.. கால்ஷீட்களை வீணாக்க மாட்டார், எனவே, நாட்டாமையில் நடிக்க ஒப்புக்கொள்ளுமாறு சொன்னார்கள். அத்தனை பேர் ரெக்கமண்ட் செய்யவும்தான், அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், அதற்கு பிறகுதான் தெரிந்தது, அந்த படம் உண்மையிலேயே மிகப்பெரிய சூப்பர் படம். என் கேரியரில் மறக்க முடியாதது.
சரத்குமார்: இதற்கு பிறகு மாயி படம் நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். அந்த படத்தில் எனக்கு டயட் டிப்ஸ் நிறைய தந்தார்.. வெறும், சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு போன்ற டயட் உணவுகளை மட்டும்தான் சரத்குமார் எனக்கு சாப்பிட அட்வைஸ் செய்தார்.. நடிப்பில் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தார். பல ஷூட்டிங்குகளில் எனக்கு சமைத்து தந்திருக்கிறார்.
சரத் சாரிடம் ஹைலைட் என்னவென்றால், அவரது சிம்ப்ளிசிட்டிதான்.. எப்பவுமே கர்வம் என்பதே அவரிடம் இருக்காது.. எல்லாருக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார்.. திமிரும், பந்தாவும் இல்லாத நடிகர் என்பதே, அவரிடம் நான் பார்க்கும் ஸ்பெஷாலிட்டி" என்றெல்லாம் மீனா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராதிகா சரத்குமார்: இதைத்தொடர்ந்து ராதிகா பேசும்போது, முதன்முதலில் சரத்குமாரை பார்க்கும்போது, திமிர் பிடிச்ச நபர் என்றுதான் நினைத்தேன்.. நம்ம அண்ணாச்சி படம் ஷூட்டிங்கின்போதுதான், அவரை நிறைய புரிந்து கொண்டேன். அந்த படத்தில் தினம் தினம், ஷூட்டிங் முடிந்து இரவு 1 மணி ஆனாலும் சரி, தன்னை தேடி வந்த ரசிகர்களுடன் சிரித்துக் கொண்டும், பேசிக்கொண்டும், சலிக்காமல் போட்டோக்களை எடுத்துக் கொண்டும் பரபரப்பா இருந்தார். இதற்கு பிறகுதான், அவருடன் நிறைய பேச துவங்கினேன். அந்தவகையில், கல்யாணக்கு முன்புவரை, எனக்கு நல்ல நண்பராக இருந்தார் சரத்குமார்" என்றார்
இந்த பேட்டியை மீண்டும் ஜெயா டிவி ஒளிபரப்பு செய்துள்ளது. இந்த வீடியோதான் இணையத்தில் மறுபடியும் வைரலாகி கொண்டிருக்கிறது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications