சரோஜா தேவியை பிடித்து கதறிய ஜெமினி கணேசன்! முகத்தை பார்க்க விரும்பாத சிவாஜி! மறுமணம் செய்ய வந்த நபர்
சென்னை: தன்னுடைய கணவரை உயிருக்கு உயிராக நேசித்தவர் நடிகை சரோஜாதேவி.. கணவரை பறிகொடுத்துவிட்டு, கண்ணீர் முழுவதும் வற்றிப்போய், கண்களையே திறக்க முடியாத அளவுக்கு அழுது அழுது சோர்ந்து போனவர்.. எத்தனையோ தலைவர்கள் அழைத்தும்கூட, அரசியலுக்கு செல்ல முடியாமல் போனதற்கு, தன்னுடைய கணவர் மீதிருந்த அழுத்தமான காதலும், முக்கிய காரணமாக இருந்திருக்கிறது..
சரோஜாதேவியின் கணவர் பெயர் ஸ்ரீஹர்ஷா.. மாப்பிள்ளை வீட்டில் பெண்ணை வந்து பார்ப்பதற்கு பதிலாக. மாப்பிள்ளையே நேரில் சென்று பார்த்தவர் சரோஜா தேவி.. இவர்களுக்கு 1967ல் வெகு சிறப்பாக திருமணம் நடந்தது.. ஹர்ஷா அந்த காலத்திலேயே BE பட்டம் பெற்ற என்ஜினீயர்..

மீண்டும் நடிக்க வந்தார்
ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ஹர்ஷாவை சந்தித்த பிரபல திலீப்குமார், ""சரோஜா போல திறமையான நடிகை கிடைப்பது அரிது.. அவரை நடிக்க வேண்டாம் என்று சொல்லிடாதீங்க" என்றாராம்.. திலீப்குமார் இப்படி சொன்னதுமே ஆச்சரியப்பட்ட ஹர்ஷா, அப்போது முதலே சரோஜாதேவியிடம், உன் திறமையை வேஸ்ட் பண்ணாதே என்று சொல்லி மீண்டும் நடிக்க சொன்னாராம்.. அந்தவகையில் திருமணத்துக்குபிறகு நடிக்க வந்தார் சரோஜாதேவி. அதற்கு பிறகுதான் பல சவாலான கேரக்டர்களில் நடித்து விருதுகளையும் பெற்றர்.
கடந்த 1986 ஏப்ரல் 21-ந் தேதி ஹர்ஷா மாரடைப்பால் உயிரிழந்தார்.. சரோஜாதேவியின் கணவர் இறந்த அதே நாளில்தான் நடிகை வைஜெயந்திமாலாவின் கணவரும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து விட்டார். ஒரே நாளில் 2 நடிகைகளின் கணவர்களும் இறந்தது அவரவர் ரசிகர்களை அந்த நேரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
ஹர்ஷா மரணம் கேள்விப்பட்டதுமே, எம்ஜிஆர், ஜானகி அம்மாளுடன் பெங்களூர் விரைந்து சென்று சரோஜாதேவியை சமாதானம் செய்தார்..
கதறிய ஜெமினி கணேசன்
கணவர் இறந்த செய்தி கேள்விப்பட்டதுமே, ஜெமினி கணேசன் தன்னுடைய மகள்களுடன் விரைந்து வந்தார். சரோஜாதேவியை கட்டிப்பிடித்து, ஓவென்று அழுது விட்டார்.. "ஆடிப்பெருக்கு படம் போலவே ஆயிடுச்சே சரோஜா" என்று கதறியிருக்கிறார்.. கடைசியில் ஜெமினியை, சரோஜாதேவிதான் சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஹர்ஷாவின் உடல் கொடி கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள சரோஜாதேவிக்கு சொந்தமான தோட்டத்தில் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு கண்ணீர் கடலிலேயே மூழ்கிவிட்டார் சரோஜாதேவி.. பூ வைக்காமல், பொட்டுவைக்காமல், இயல்பு வாழ்வை தெலைத்தார்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அந்த நேரத்தில் சரோஜாதேவியை பார்க்க சிவாஜி கணேசன் மறுத்துவிட்டாராம்.. சரோஜாவை பார்த்துவிட்டு வரலாம், வாங்க" என்று கமலாம்மா சொன்னாராம்..
அதற்கு நடிகர் திலகம், "அவள் நெத்தியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. இப்படிப்பட்ட, சரோஜாவை நான் பார்க்க விரும்பவில்லை. அவ பழைய, சரோஜாதேவியாய் ஆகிற வரைக்கும் நான் பார்க்க விரும்பலைன்னு சொல்லிடு" என்று சொல்லிவிட்டாராம். கணவர் இறந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் வரை, சிவாஜி சரோஜாதேவியை பார்க்கவே இல்லையாம்..
சரோஜா தேவி
சரோஜாதேவிக்கு உலக நாடுகளில் வாழும் பல்வேறு மக்கள், அனுதாப செய்திகளை அனுப்பி கொண்டே இருந்தார்களாம்.. அதில் பலரும், "சின்ன வயசுலேயே கணவரை இழந்துட்டீங்க.. இன்னொரு கல்யாணம் செய்துக்குங்க" என்று ஆறுதலும், ஆலோசனையும் கலந்து கண்ணீர் வடித்து கடிதம் எழுதினார்களாம்.
இதில் சில தொழில் அதிபர்கள், சரோஜாதேவியை மறுமணம் செய்து கொள்ளவும் முன்வந்துள்ளனர்.. "கோடி கணக்கில் எனக்கு சொத்து, எஸ்டேட் உள்ளது.. பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், தனிமை கொடூரமானது.. என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்: என்று அன்பை கொட்டி பலரும் கடிதம் எழுதினார்களாம்.
ஆனால், தன்னுடைய கணவர் மீது, அபரிமிதமாக அன்பையும் பாசத்தையும் வைத்திருந்த சரோஜாதேவி, கடைசிவரை மறுமணத்தை பற்றி சரோஜாதேவி நினைக்கவேயில்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications