நீங்க எப்படி சார் குக் வித் கோமாளிக்குனு? பிரியங்கா கேட்க! "சீக்ரெட்டை" சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர உங்களை எப்படி கன்வின்ஸ் செய்தார்கள் என பிரியங்கா தேஷ்பாண்டே கேட்டதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் அட்டகாசமான பதிலை அளித்துள்ளார்.
விஜய் டிவியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். 4 சீசன்களை கடந்து தற்போது 5ஆவது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த 4 சீசன்களிலும் செஃப் தாமுவும் வெங்கடேஷ் பட்டும் நடுவர்களாக இருந்தனர். தற்போது 5ஆவது சீசன் தொடக்கத்தில் தானும், தாமோதரனும் விலகுவதாக வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தாமோதரன் சீசன் 5 நிகழ்ச்சியில் நீடிக்கிறார். ஆனால் பட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் ஆரம்பிக்கலாமா என தனது சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளதை பார்த்தால் அவர் வேறு ஒரு நிகழ்ச்சியில் இணைகிறார் என தெரிகிறது. இந்த நிலையில் பட்டுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வருகிறார். மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த சீசன் நேற்று தொடங்கியது.
இதில் ஆங்கர்களாக ரக்ஷனும் மணிமேகலையும் உள்ளனர். சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்குகின்றனர். கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த நிலையில் குக், கோமாளிகளை பேரிங்க செய்யும் நிகழ்வின் போது வினோத்திற்கு யார் pair என தேர்வு செய்யப்படும் போது அவருக்கு மைக் வந்தது. அப்படியென்றால் பாட்டு பாடுபவர், பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், ஆங்கர் என யாராக இருக்கலாம் என்பதுதான் க்ளூ! அப்போது பிரியங்கா வந்தார். வாடி ராசாத்தி என்ற பாடலுடன் வந்தார்.
அவர் ஜட்ஜ்களுக்கு ஒரு அட்டென்டென்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். அவர் பேசுகையில் "எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் மிகவும் சந்தோஷம், இங்கு நான் மைக் பிடிக்க போவதில்லை, கரண்டியை பிடிக்க போகிறேன் என்றார். உடனே மாதம்பட்டி ரங்கராஜிடம், "சார் இந்த கோமாளிகளை எல்லாம் ஹேண்டில் செய்வது மிகவும் கடினம். நான் அந்த கஷ்டத்தை அனுபவித்திருக்கிறேன்.
உங்களை எப்படி சார் கன்வின்ஸ் செய்தார்கள்" என கேட்க அதற்கு ரங்கராஜோ, "நீங்கள் வர்றீங்கன்னு சொன்னாங்க, அதான் கன்வின்ஸ் ஆகிட்டேன்" என நகைச்சுவையாக சொன்னார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் கோவையை சேர்ந்தவர். அவர் மாதம்பட்டி பாகஷாலா என்ற கேட்டரிங் தொழிலை செய்து வருகிறார்.
அவருடைய சமையலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் ருசித்துள்ளனர். இவர் கடல் கடந்தும் கேட்டரிங் ஆர்டர்களை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் திருமண நிகழ்ச்சிகள் இல்லாத மாதங்களில் மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவரை எப்படி இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்கள் என்றுதான் ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications