2 முறை விபத்து.. அடேங்கப்பா! BMW முதல் Jaguar XF வரை மாதம்பட்டி ரங்கராஜ் கார் கலெக்ஷன் இவ்வளவா?
சென்னை: சமையல் கலைஞராகவும், நடிகராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னிடம் எத்தனை கார் இருக்கிறது என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தான் எதற்காக பல விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துகிறேன் என்பது பற்றியும் மாதம்பட்டி ரங்கராஜன் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அது வகையில் மாதம்பட்டி ரங்கராஜன் இணையத்தில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாவற்றிலும் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். சமையல் கலைஞராக தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் நடிகராகவும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜன் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கத்தில் சமையலிலும் தன்னுடைய திறமையை கண்டித்து வருகிறார். அதே நேரத்தில் இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தைச் சார்ந்தவர் தான்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் கலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு சமைப்பது அவ்வளவு பிடிக்குமாம். ஆனாலும் வீட்டில் பெற்றோரின் ஆசைக்காக பொறியியல் பட்டம் பெற்று இருக்கிறார். தன்னுடைய தந்தையை போலவே நானும் சமையல் கலைஞராக வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். முதல் முதலில் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கி இருக்கிறார்.
அதற்குப் பிறகு சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி இப்போது பிரபலங்கள் வீட்டு பங்க்ஷன் என்றால் அங்கு மாதம்பட்டி நாகராஜன் சமையல் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இத்தனை பிஸியான வேலைகளுக்கு நடுவே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் குக் வித் கோமாளி குரோஸி தான் இவரிடம் கேள்விகள் கேட்கிறார்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜனிடம் இப்போ உங்களிடம் கார் கலெக்ஷன் என்னவெல்லாம் இருக்கு என்று கேட்க அதற்கு அவர் டாட்டா இன்டிகா(Tata Indica), ஃபோர்ட் எண்டோவர் (Ford Endeavour), ஜாக்குவார் எக்ஸ்எப் (Jaguar Xf),பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3), வால்வோ வி 40 ,மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஜாகுவார் எக்ஸ்ஜே எல், போர்ஷ் மேக்கன், ரேஞ்ச் ரோவர் என்று சொல்லிக் கொண்டே இருக்க குரோஸி இதைக் கேட்டு ஆடி போய் இருக்கிறார்.
அதோடு நான் எவ்வளவு விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் என்னதான் வேலை வேலை என்று இருந்தாலும் எனக்கு கார் ஓட்டுவது ரொம்பவே பிடிக்கும். 10 ஆயிரம் கிலோமீட்டர் கூட தனியாக அப்படியே கார் ஓட்டிக் கொண்டு போவேன். காரில் போகும்போது எனக்கு இரண்டு முறை விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் பெரிய அளவில் எனக்கு அடிபடவில்லை.
அதற்கு காரணம் நான் இவ்வளவு விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியது தான். அதனாலேயே நான் கார்களை ஆசைப்பட்டு வாங்கிக் கொள்வேன். நாம கஷ்டப்பட்டு வேலை செய்வது எதற்காக? நாம சந்தோஷமா இருக்க வேண்டும் என்பதற்காக தானே? அதனால் எனக்கு பிடித்ததை நான் வாங்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு குரோஸி அப்போ நீங்க ஜெட் விமானம் வாங்க போறதா சொல்றாங்களே அது உண்மையா? என்று கேட்க,
அதுவும் உண்மைதான். அந்த ஐடியா இருக்கிறது. இப்போதைக்கு எங்கேயாவது போக வேண்டும் என்றால் வாடகைக்கு எடுத்துட்டு போறோம். பியூச்சரில் நமக்கு தேவைப்படும் என்பதற்காக கண்டிப்பா வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று மாதம்பட்டி ரங்கராஜன் கூலாகவே அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications