4.50 கோடி கடன்..தலைகீழாக மாறிய நீலிமா ராணி வாழ்க்கை.. மீண்டு வந்தது இப்படி தானா?
சென்னை: சீரியல் நடிகை நீலிமா ராணி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் தயாரித்த திரைப்படத்தால் 4.50 கோடி கடன் வாழ்க்கையில் சிக்கி இருக்கிறார்.
தன்னைவிட பத்து வயது அதிகமானவரை திருமணம் செய்திருந்தாலும் தன்னுடைய காதலால் வாழ்க்கையில் ஜெயித்து வந்தது குறித்து சமீபத்தில் நீலிமா பேசியிருக்கிறேன்.
நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது தேவர்மகன் திரைப்படம் தான்.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நீலிமா பிறகு நடிகர் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி திரைப்படம் என ஹிட்டான பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16, 1947 எனும் திரைப்படத்திலும் கௌதம் கார்த்திக் அம்மாவாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் ஒரு சில சீன்களில் இவர் வந்திருந்தாலும் படம் முழுக்க இவருடைய தாக்கம் இருக்கும். அந்த அளவிற்கு கதாபாத்திரமாக இவர் மாறியிருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல இன்ப, துன்பங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில், நீலிமா தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போ சில காரணத்தால் அந்த சீரியலை கைவிட வேண்டியது ஆகிவிட்டதாம். இவரும் சரின்னு அந்த சீரியலில் இருந்து வெளியே வந்து விட்டாராம். ஆனா அதுக்கு காரணம் இயக்குனர் இசைவாணன் தானாம். அதனால தன்னால் தானே நீலிமா இந்த வாய்ப்பை விட்டு விலக வேண்டியது ஆகிவிட்டது என்று இசைவாணன் குற்ற உணர்ச்சியில் இருந்திருக்கிறார்.

பிறகு இருவருக்கும் நல்ல நட்பும் ஏற்பட்டிருக்கிறது. அப்போ நீலிமாவின் வயசு 19 தானாம். இசைவாணனுக்கு 29 வயது இருந்திருக்கிறது. இரண்டு வருடங்கள் இவர்கள் நட்பாகவே பேசிக்கொண்டு, பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்துக்குள்ள நீலிம் அப்பா இறந்து போயிட்டாங்களாம். அப்போ நீலிமா இசைவாணனிடம் சில வேண்டுகோள் வைத்திருந்தாராம்.
நாம இப்போ உடனடியா குழந்தை பெத்துக்க வேண்டாம். என்னோட தம்பி இப்பதான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருக்காரு. அதனால என் தம்பி படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போன பிறகு நாம குழந்தை எடுத்துக்கலாம்னு சொல்லி இருக்காங்க. அதற்கு இசைவாணனும் சரி என்று சொல்லிவிட்டாராம். பிறகு பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நீலிமா தொடர்ந்து நடிச்சிட்டு இருந்திருக்காங்க.
அந்த நேரத்தில் தான் நீலிமாவும் அவருடைய கணவரும் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து நியூசிலாந்தில் 55 நாள் படப்பிடிப்பிற்கு இங்கிருந்து 55 பேரை அழைத்துக் கொண்டு சுமார் நாலரை கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார். அதுவும் அதிகமான கடன் வாங்கித்தான் இந்த செலவை செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நண்பர்கள் முதுகில் குத்தியதால் இந்த திரைப்படத்தை இவர்களால் வெளியிட முடியாமல் போய்விட்டதாம்.
இதனால் கையில் இருந்த பணம், வீடு எல்லாமே பறிபோய்விட்டதாம். நீலிமாவின் வீடு பெரிய அளவில் கூட்டு குடும்பமாக இருந்திருக்கிறது. அவர்களோடு இருந்து நிலையில் இவர்கள் படம் பண்ண வேண்டும் என்று எடுத்த முயற்சி பெரிய அளவில் தோல்வி அடைந்ததால் இனி திருப்பி வீட்டுக்கு போனா நல்லா இருக்காது என்று நீலிமா சொல்லி இருக்காங்க. அப்போ வாடகைக்கு கூட வீடு எடுக்க முடியாத நிலைமையில் இசைவாணனின் நண்பர் வீட்டில் தான் தங்கி இருக்காங்க.
பிறகு கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சு வாடகைக்கு இருந்த வீட்டையே சொந்தமா வாங்கிட்டாங்களாம். கிட்டத்தட்ட இந்த தம்பதி நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு இப்போ முன்னுக்கு வந்திருக்காங்க. இத்தனைக்கும் காரணம் நீலிமாவை அவருடைய கணவர் புரிந்து வைத்திருக்கிறதாலும், நீலிமா அவருடைய கணவர் மீது வைத்திருக்கும் அன்பும் தான் என்று கூறியிருக்கிறார்.
10 வயது வித்தியாசத்தில் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை, 16 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் இவர்கள் இருவரும் புரிதலோடு இருந்து வருவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருடைய கணவரை பலர் தாத்தா என்று கிண்டல் செய்வதாக அதற்கு நீலிமா பதிலடியும் கொடுத்திருந்தார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications