போட்டுடைத்த பிரபலம்.. வளையல் கடையில் எட்டிபார்த்த பாண்டியன்.. மண்வாசனையில் சூப்பராக கணித்த பாரதிராஜா
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கணிப்பு ஒருபோதும் தவறியதில்லை என்று நெகிழ்ந்து சொல்லி உள்ளார் சித்ரா லட்சுமணன். அத்துடன், தன்னுடைய மண்வாசனை படத்துக்கு பாண்டியன் ஹீரோவானது குறித்தும் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், சினிமா தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், Dinamalar யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "மண்வாசனை" படத்துக்கு நடிகர் பாண்டியன் எப்படி தேர்வானார் என்பது குறித்தும், டைரக்டர் பாரதிராஜாவின் கணிப்பு குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

மண்வாசனை: "மண்வாசனை படத்துக்கு பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் எனக்கு அப்போது தந்துவிட்டது. மண்வாசனை படத்துக்காக ஏற்கனவே 80 பேர், ஷூட்டிங்கிற்கு தயாராக மதுரைக்கு வந்துவிட்டார்கள். நாளை மறுநாளே ஷூட்டிங் நடக்க போகுது. ஆனால் ஹீரோ இன்னும் கிடைக்கல.
அதனால், ஹீரோ தேவை என்பதால், 2, 3 கல்லூரிகளில் சென்று தேடினோம்.. கதாநாயகனாக யாருமே செட் ஆகவில்லை.. அதனால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என்று நானும், பாரதிராஜாவும் கிளம்பி சென்றோம். அப்போது டைரக்டர் பாரதிராஜா கோயிலுக்கு வந்திருப்பதை பார்த்து, கோயில் வாசலில் கூட்டம் சேர்ந்துவிட்டது. இந்த கூட்டத்திலிருந்து ஒரு பையன் (பாண்டியன்) எகிறி எகிறி குதித்து, டைரக்டரை பார்க்க முயல்கிறார்..
காரில் ஏத்திக்கோ: தன்னை யாரோ எட்டி எட்டி பார்க்க முயல்வதை பாரதிராஜாவும் பார்த்துவிட்டார். உடனே என்னிடம், "சித்ரா, அந்த பையனை காரில் ஏத்திக்கோ" என்றார். நானும், பாரதிராஜாவுக்கு தெரிந்த பையன் போல, அல்லது தேனியை சேர்ந்தவன் போல என்று நினைத்து, அவரை காரில் ஏற்றிக் கொண்டேன். நேராக ஓட்டல் ரூமுக்குள் சென்றதும் பாண்டியனிடம் "என்னை பார், என்னை பார்த்து சிரி, கொஞ்சம் நடந்து காட்டு" என்றெல்லாம் பாரதிராஜா சொன்னார்.
பாண்டியனும் பாரதிராஜா சொன்னதைபோலவே, பார்த்தார், சிரித்தார், குறுக்கும் நெடுக்குமாக நடந்து காட்டினார்.. இதை பார்த்ததும் பாரதிராஜா என்னிடம், "நல்லா இருக்கான்யா பையன்.. இவனையே ஹீரோவா போட்டுடலாம்' என்றார்.
குழம்பினேன்: எனக்கு தூக்கி வாரிப்போட்டது. தலையே சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. என் முதல் படம் வேற.. கேரியரையே காலி பண்ணிடுவார் போலயே.. ரோட்டுல வேடிக்கை பார்க்க வந்தவரை ஹீரோவாக்குறாரே? நம்ம கதி என்ன? என்று பயந்துபோய்விட்டேன். இந்த பையனை எப்படி ஹீரோவாக ஏற்பது என்று குழம்பி நின்றேனேன்.
வசனகர்த்தா கலைமணி இன்னொரு ரூமில் தங்கியிருந்தார். இந்த பையன் சரியில்லை என்று கலைமணி பாரதிராஜாவிடம் சொல்லிவிட்டால், நிச்சயம்வேறு ஹீரோவை தேடலாம் என்று நம்பினேன். அதனால் பாரதிராஜாவிடம், 'கலைமணியை அழைத்துச் சென்று ஹீரோவை காட்டிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, கலைமணியை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயில் சென்றேன்.. அங்கேதான் பாண்டியன் வளையல் கடை வைத்திருந்தார்.
டைரக்டர் செலக்ஷன்: கலைமணி பாண்டியனை பார்த்துவிட்டு, உடனே காரில் ஏறிவிட்டார். என்னிடம், "என்ன ஆச்சு டைரக்டருக்கு? இந்த பையனை எப்படி செலக்ட் செய்தார்?" என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது.
கலைமணியிடம், "ஆமா சார், பையன் கொஞ்சம் கம்மியா இருக்கிறான்.. வேற பையனை போட சொல்லி டைரக்டர்கிட்ட நீங்களே சொல்லுங்க" என்றேன்.. பிறகு நானும் கலைமணியும், பாரதிராஜா இருந்த ரூமுக்குள் வந்தோம். கலைமணியிடம் பாரதிராஜா, "கலைமணி, எப்படி நம்ம ஹீரோ?" என்று கேட்டார்.
சூப்பர் ஹீரோ: உடனே கலைமணி, "சூப்பரா இருக்கான் சார்" என்றார். எனக்கு ஒருநிமிஷம் அதிர்ச்சியாகிவிட்டது.. அந்த நேரத்தில், கலைமணி மேல எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.. அவரை தனியாக அழைத்து, "என்ன மனுஷன் நீ? அங்கே என்கிட்ட பையன் சரியில்லைன்னு சொல்லிட்டு, இங்கே பாரதிராஜாகிட்ட வந்து சூப்பர்னு சொல்றே? என் முதல் படத்துக்கு இப்படி உதவியதற்கு ரொம்ப நன்றி" என்று கோபித்து கொண்டேன்.
உடனே கலைமணி, "பையன் எப்படி ஓகேவா?ன்னு என்னை பாரதிராஜா கேட்டிருந்தால், என் கருத்தை சொல்லியிருப்பேன். ஆனால், நம்ம ஹீரோ எப்படின்னு கேட்கிறார்? அப்படின்னா, ஹீரோவாக பாரதிராஜா அவரை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அதை இப்போது மறுத்தால், நான்தான் இந்த படத்திலிருந்து விலகும்படி ஆகியிருக்கும் என்றார்.
கணிப்பு அபாரம்: எனக்கும் கலைமணி சொன்ன கருத்து நியாயமாக பட்டது.. அதுக்குப்புறம் மனசை தேத்திக்கிட்டு படப்பிடிப்பை தொடங்கினோம்.. ஆனால், டைரக்டர் பாரதிராஜாவின் கணிப்பு எவ்வளவு சரியென்பதை அந்த படத்தில் வெற்றி தீர்மானித்தது.. அதுக்குப்பிறகு 80 படம் பாண்டியன் நடித்துவிட்டார்.. 40 படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்" என்று பாண்டியனையும், பாரதிராஜாவையும் நெகிழ்ந்து சொன்னார் சித்ரா லட்சுமணன்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications