சக்தின்னு நினைச்சு சொல்றாரா... நான் ஜனனிங்க...உருகுதே மருகுதே.. உதிருதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் பார்க்க ரொம்ப பொறுமை தேவைங்க. காட்சிகள் அவ்ளோ மெதுவா நகருது.

கதை என்னவோ நல்ல கதைதான்.. இதில் சந்தோஷின் மனைவி ஜனனியா நடிக்கற பொண்ணு ரொம்ப அழகா இருக்கு.

சந்தோஷ் சக்தியை காதலிக்கறான். ஆனா, கல்யாணம் என்னவோ ஜனனிகூட நடந்துருது. ஜனனியும் சந்தோஷுடன் படிச்ச பொண்ணுதான்.

காதல்

காதல்

சந்தோஷ் சக்தியை காதலிச்ச விஷயம் ஜனனிக்கு தெரியும்..சோ, ரெண்டு பேரும் பேசி டைவர்ஸ் செய்துக்க முடிவு பண்றாங்க. காலப்போக்கில் சந்தோஷுக்கு ஜனனி மேல ஒரு ஆசை உருவாகுது.

மோதிரம்

மோதிரம்

அன்னிக்கு ஆஸ்ரமத்துல ஜனனியோட மெட்டியை காணோம்னு சந்தோஷ் தன் விரல் மோதிரத்தை ஜனனிக்கு மெட்டியா போட்டுவிட்டான். அதற்கு பதிலாக ஒரு மோதிரம் வாங்கி தூங்கிக் கொண்டு இருக்கும் சந்தோஷின் விரலில் ஜனனி போட்டு விடறா.

மோதிரம்

மோதிரம்

சந்தோஷ் தூங்கி எழுந்திரிச்சு, முகம் கழுவும்போது பார்க்கறான். ஓ.. ஜனனி மோதிரம் போட்டிருக்காங்களான்னு நினைச்சுகிட்டு வர்றான்.அங்கெ ஜனனி தனக்குத் தானே மோதிரம் போட்டுவிட்டேன்.. இன்னுமா பார்க்காம இருப்பாருன்னு பேசிக்கறா.

மெட்டியா

மெட்டியா

என்னங்க தனியா பேசிகிட்டு இருக்கீங்கன்னு கேட்க. இவ ஒன்னும் இல்லேன்னு சொல்றா. ஓ.. நான் என் மோதிரத்தை உங்களுக்கு மெட்டியா போட்டுவிட்டேன். பதிலுக்கு நீங்க எனக்கு மோதிரம் கிஃப்ட் பண்றீங்களான்னு கேட்கறான்.

தன் கையை

தன் கையை

ஏன் நான் வாங்கித் தர கூடாதான்னு கேட்கறா ஜனனி. யார் சொன்னது.. வாங்கித் தரலாமேன்னு சொன்ன சந்தோஷ், ஜனனி திரை மணிகளை பிடிச்சுக்கிட்டு நிக்கறா. அவ கை மேல தன் கையை வச்சு பிடிச்சுக்கறான்.

அர்த்தம்

அர்த்தம்

ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு மோதிரம் போட்டுவிட்டா என்ன அர்த்தம் தெரியுமான்னு கேட்கறான். அவள் பேசாமல் இருக்க, மறுபடியும் கேட்கறான்.அவள் வெட்கத்தில் தலை குனிந்து நிற்க, சடாரென கையை விட்டுடறான் சந்தோஷ்.ஜனனியின் முகத்தில் ஏமாற்றம்..

ஜனனி பொண்டாட்டி

ஜனனி பொண்டாட்டி

இரவு நேரம் சந்தோஷ் குடிச்சுட்டு, மனசாட்சியியோட பேசிகிட்டு இருக்கான். எனக்கு சக்தி காதலி மட்டும்தான்.. ஆனா, ஜனனி என் பொண்டாட்டி, அம்மா மாதிரி... எனக்கு ஜனனியை ரொம்ப புடிக்கும்னு சொல்லிக்கறான்.

ரூமுக்கு

ரூமுக்கு

வீட்டுக்கு வரும்போது தள்ளாடிக்கிட்டு வர்றான். கதவைத் திறந்த ஜனனியிடம், சத்தம் போடாதீங்க நான் குடிச்சுட்டு வந்திருக்கேன்.. அப்படியே ரூமுக்கு போலாம் வாங்கன்னு சொல்லி அழைச்சுக்கிட்டு வர்றான்.

போக மாட்டேல்ல

போக மாட்டேல்ல

என்னை விட்டுட்டு போக மாட்டேல்லன்னு ஜனனியை அருகில் உட்கார வச்சு கேட்கறான்.கையை பிடிச்சு கண்ணுல ஒத்திக்கறான். சொல்லு என்னைறாறேன்.

போக சொன்னாலும்

போக சொன்னாலும்

ஜனனி மாட்டேன்ன்னு சொல்ல.. நானே போக சொன்னாலும் போ கூடாதுன்னு சொல்றான்.. சரிங்கன்னு சொல்றா ஜனனி. என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது.. நீதான் எனக்கு எல்லாமேன்னு சொல்லி ஜனனி மடியில படுத்துக்கறான்.

சக்தியா

சக்தியா

திடீர்னு ஜனனிக்கு சந்தேகம், நம்மை சக்தின்னு நினைச்சு அப்படி பேசி இருப்பானோன்னு. அதுல ஜனனிக்கு அழகை வருது. பார்த்தா என்னை விட்டு போகாத ஜனனின்னு முனகிகிட்டே இருக்கான். இதைக் கேட்ட ஜனனிக்கு ஆனந்த கண்ணீர் பொத்துகிட்டு வருது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+