மது, சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகளாகிவிட்டது.. திடீரென மயங்கியது ஏன்? விஷால் கொடுத்த விளக்கம்
சென்னை: குடிப்பழக்கத்தை கைவிட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டதாக நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். பார்ட்டிக்கு கூட செல்வதில்லை என்று கூறியுள்ள விஷால், நல்ல உடல்நிலையோடு மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, மதகஜராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் சங்கச் செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கைநடுக்கத்துடன் விஷால்
இதனிடையே விஷாலின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வருவது ரசிகர்களிடையே விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால் மதகஜராஜா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால், கைகள் நடுங்க, வாய் குளறி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது விஷால் பார்ப்பதற்கும் பரிதாபமாக காட்சி அளித்ததால், அவரின் உடல்நிலைக்கு என்ன ஆனது என்றும் பலரும் கேள்வி எழுப்பினர்.
ப்ரமோஷன் யுக்தி
அப்போது விஷாலுக்கு, காய்ச்சல் இருந்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஷால் நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டார். இதனால் விஷால், படத்தின் ப்ரமோஷனுக்காகவே அப்படி நடித்தார் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
மயங்கி விழுந்த விஷால்
இந்த நிலையில், விஷால் 2 நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தில் கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது விஷால், திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் காரில் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விடப்பட்டார்.
காரணம் என்ன?
இதனால் மீண்டும் விஷாலின் உடல்நிலை குறித்த பேச்சுகள் அதிகரித்தது. இதனால் விஷாலின் கெட்டப் பழக்கங்கள் காரணமாக இதுபோன்ற பிரச்சனைகள் வருவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஷாலின் மயக்கத்திற்கு, அவர் காலையில் இருந்து சாப்பிடாமல் வெறும் ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விஷால் விளக்கம்
இதன் காரணமாகவே விஷாலுக்கு மயக்கம் வந்தது. அவர் நேரத்திற்கு சாப்பிட்டு, ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து விஷால் பேசுகையில், மது, சிகரெட் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை கைவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. மதுவை மறந்து 2 ஆண்டுகளாகிவிட்டது. சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டது.
கவலையில்லை
இப்போதெல்லாம் பார்ட்டிக்கு கூட போவதில்லை. கடைசியாக சுந்தர் சி சாரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு மட்டுமே சென்றேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி எந்த கவலையும் இல்லை. சிலர் அவர்கள் கற்பனைகளுக்கு சென்று என்ன வேண்டுமானாலும் பேசிவிடுகிறார்கள். அது என்னை ஒருநாளும் பாதிக்காது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications