Idli Kadai Review: தனுஷின் இட்லி கடை படம் கதையே இதுதாங்க! ஆனால் இந்த விஷயம் சூப்பர் தான்! ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் 'இட்லி கடை'. டைட்டில் கேட்கவே ஏதோ ஒரு சாப்பாடு கதைன்னு நினைச்சிருப்போம். ஆனா, இது வெறும் இட்லி கதை இல்லைங்க. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் பாசம், கடமைன்னு வர்ற போராட்டத்தைப் பத்திப் பேசுற படம். இந்தப் படத்தைப் பற்றி நம்ம புளூசட்டை மாறன் என்ன சொல்லியிருக்காருன்னு ஒரு எதார்த்தமான விமர்சனமாப் பார்க்கலாம்.

Idli Kadai Dhanush Blue Sattai Maran

இட்லி கடை பட கதை

படத்தோட கதை மேம்போக்கா பார்த்தா, ஹீரோ-வில்லன் சண்டைன்னு தோணும். ஆனா, உள்ளுக்குள்ள ஒரு நல்ல மெசேஜ் இருக்கு. கதை என்னன்னா, நம்ம ஹீரோ தனுஷ், வெளிநாட்டுல ஒரு பெரிய ஹோட்டல் கம்பெனியில முக்கியமான போஸ்டிங்ல இருக்காரு. அந்த கம்பெனி ஓனர் சத்யராஜ். சத்யராஜோட பையன் தான் அருண்விஜய். சத்யராஜோட பொண்ணு நம்ம தனுஷை லவ் பண்றாங்க. தனுஷ் நல்ல பையன்ங்கிறதால, சத்யராஜும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடறாரு. ஆனா, அருண்விஜய்க்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கல.

கல்யாண தேதி நெருங்கற நேரத்துல, தனுஷோட அப்பா இறந்துடுறாருன்னு செய்தி வருது. உடனே ஊருக்குக் கிளம்பிப் போறாரு. அங்க போன பிறகுதான் அவருக்குப் புரியுது, கடைசிக்காலத்துல நம்ம அப்பா அம்மா கூட இல்லாம போயிட்டோமேன்னு ரொம்ப ஃபீல் பண்றாரு.

அப்போ அவர் மனசு மாறி, அப்பா பாசமா நடத்திட்டு இருந்த இட்லி கடையை எடுத்து நடத்த ஆரம்பிக்கிறாரு. அந்தச் சமயத்துல ஒரு பெரிய பிரச்சனை வருது. இதனால, திரும்ப வெளிநாட்டுக்குப் போக முடியாத ஒரு இக்கட்டான சூழல். அங்க அருண்விஜய், கல்யாண தேதி நெருங்குது, உடனே கிளம்பி வான்னு கூப்பிட, தனுஷ் வர முடியாதுன்னு சொல்லிடறாரு. அதுக்கு அப்புறம் அருண்விஜய் நம்ம ஹீரோவைத் திரும்ப எப்படிப் பழி வாங்கினாருங்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்!

புளூசட்டை மாறனின் விமர்சனம்

புளூசட்டை மாறன் சொல்றது என்னன்னா, இது வெறும் பழிவாங்கல் கதை இல்லை. 'ஒரு பிள்ளைக்கு நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுத்தா அது எப்படி வளரும்? பாசத்தைக் காட்டுறங்கற பேர்ல நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்காம ஊதாரித்தனமா வளர்த்தா அது எப்படி வளரும்னு' ஒரு மெசேஜைச் சொல்ற படம். உண்மைக்கு நெருக்கமா எடுத்ததால, ஈஸியா நம்ம மனசுல கனெக்ட் ஆகுது.

படத்தில் பிடிச்ச விஷயங்கள்

இளவரசு, தனுஷோட பாட்டியை பார்க்க வர்ற சீன் சூப்பரா இருக்கு. பாசத்தைப் பத்தி ரொம்ப எமோஷனலா பேசி இருக்காரு. நித்யா மேனன், "இட்லி கடையை ஏன் வித்தே?"ன்னு சண்டை போடற சீன், ரொம்ப ஃபீலிங்கா இருந்தது. ராஜ்கிரண் இறந்த அன்னைக்கு, அவங்க வீட்ல மாடு கன்னுக்குட்டி போடும். அந்தக் கன்னுக்குட்டியை ராஜ்கிரணே மறுபடியும் பிறந்ததாகப் பேசும் காட்சி, ரொம்பவே நெகிழ்ச்சி! சத்யராஜ் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. வசனங்கள் எல்லாம் நல்லா இருந்தது. ராஜ்கிரண், தனுஷ் இடையிலான டயலாக்குகளும் சூப்பர்.

Idli Kadai Dhanush Blue Sattai Maran

படத்தின் குறை

மாறன் சொல்றதுல குழப்பமான கேரக்டர் நம்ம ஹீரோ தனுஷோடதுதான். அந்தக் கேரக்டர்ல நல்லவன்னு சொன்னா கூட, அவர் எடுக்கிற முடிவுகள் எல்லாம் சுயநலத்துக்காகவும், அந்தச் சூழலில் எடுக்குற முடிவாகத் தான் இருக்கு. மத்தவங்களைப் பத்திக் கவலைப்பட மாட்டேங்குறாரு. லவ் பண்ணிட்டு அப்படியே விட்டுட்டு வந்துடறாரு. இந்த விஷயம் மட்டும் கொஞ்சம் கவனமாப் பார்த்துருந்தா நல்லாருக்கும். அருண்விஜயின் வில்லத்தனம் கொஞ்சம் மூணாந்தரமாகத்தான் இருக்கு.

வசூல் நிலவரம் மற்றும் பிரபலங்களின் கருத்து

இந்த 'இட்லி கடை' படம், குடும்பப் பார்வையாளர்களைக் குறி வச்சதால, தியேட்டர்கள்ல மெதுவான தொடக்கத்தைத்தான் சந்திச்சிருக்கு. ஆனாலும், முதல் நாள் வசூல், படத்தின் டீசன்ட்டான ஓபனிங்கைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லைனாலும், தனுஷின் இந்தப் புது முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு 'ஓகே' ரேட்டிங் கிடைச்சிருக்கு.

நடிகர் தனுஷ் பேட்டியில், "இது என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு கதை. குடும்ப உறவுகளோட முக்கியத்துவத்தை இந்தக் கதை சொல்லும்"னு சொல்லியிருக்காரு. பல பிரபலங்களும், "தனுஷ்கிட்ட ஒரு முதிர்ச்சி தெரியுது, கதைக்காக வாழ்த்துக்கள்"னு பாராட்டி இருக்காங்க.

மொத்தத்துல, புளூசட்டை மாறன் சொல்றது மாதிரி, இந்தப் படத்துல சில குறைகள் இருந்தாலும், குடும்ப படமா தாராளமாப் பார்க்கலாம். யங்ஸ்டர்ஸ் மற்றும் ஜெனரல் ஆடியன்ஸ் பார்த்தாலும், "உசுருக்கு ஆபத்து இல்ல" அப்படிங்கற மாதிரி ஒரு ஓகே ரகமான படம் தான் இந்த 'இட்லி கடை'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+