Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்கிரண் காலில் சலங்கை? மாவாட்டும் அருண் விஜய்.. ஆறிப்போன இட்லி கடையில் கஸ்டமர்ஸை காணோமே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் டைரக்ஷனில் 'இட்லி கடை' படம் வெளி வந்துள்ளது.. தனுஷ் நடிக்கும் 52வது படமாகும்.. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் போன்றோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது,. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தனுஷ் போன்ற பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் சரியாக போகாவிட்டால், டைரக்டர்தான் காரணம் என்பார்கள்.. ஆனால், இட்லி கடை படத்தை பொறுத்தவரை, தனுஷே தனுஷை வைத்து "செஞ்சு விட்டாரு"..

Idli Kadai Rajkiran Arun vijay

45 வருடங்களுக்கு முன்பிருந்த சென்டிமெண்ட்டை இப்போது வைத்திருக்கிறார்கள்.. எந்த இடத்திலும் கண்ணீர் விட்டு அழக்கூடிய சீன்கள் இல்லை..

தனுஷ் இட்லி கடை படம்

கிராமத்தில் இட்லி கடை வைத்திருப்பவரின் மகன் தனுஷ், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்..

அப்போது "நானும் இந்த கிராமத்துக்காரன்தான், என்னை ஏத்துக்கங்க" என்று ஊர்மக்களிடம் கேட்கிறார்.. அப்படியானால் வெளிநாட்டில் வேலைக்கு போனால், திரும்பி வருபவர்களை ஊர்க்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? எதனால் தனுஷ் அப்படி சொல்கிறார்? எதனால் ஊர்க்காரர்கள் தனுஷை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? என்பது தெரியவில்லை..

கஸ்டமர்கள் இல்லாத இட்லி கடை

அதிகபட்சம் அந்த இட்லி கடையில், இட்லி அவிக்கிறார்கள்.. அந்த இட்லி கடையில் கஸ்டமர்கள் யாருமே உட்கார்ந்து பார்க்கவில்லை.. ஒரெயொரு பெரியவர் மட்டும் வந்து 2 இட்லி சாப்பிட்டு போறாரு.. சமுத்திரகனியின் பரோட்டோ கடையிலும் எந்த கஸ்டமர்களையும் காணோம்.. பரோட்டோ மாஸ்டர் மட்டும்தான் கடையில் நிக்குறாரு.. இவர்களுக்குள் என்ன தொழில் போட்டி?

நாம்தான் இந்த குடிசையில் அடுப்பில வேக்காட்டில் நின்று கஷ்டப்படுகிறோம், நம்ம பிள்ளையாவது பெரிய வேலைக்கு போகணும் என்றுதான் எந்த பெற்றோரும் நினைப்பார்கள்.. ஆனால் ராஜ்கிரண் மட்டும், தன்னை போலவே தன் மகனும் இட்லி கடையை நடத்தணும் என்று வித்தியாசமாக ஆசைப்படுகிறார்.. இட்லி சுடுவது அவ்வளவு பெரிய தொழிலா?

மாவு அரைக்கும் அருண் விஜய்

இட்லி கடை படத்துக்கு முதல்நாள், முதல் காட்சி 30 சதவீதம்தான் தியேட்டர்களில் சீட் நிரம்பியிருந்தது.. நித்யாமேனன், தனுஷ் இருவருமே நல்ல நடிகர்கள்.. ஆனால், கதாபாத்திரத்தில் வலு இருந்தால்தானே அந்த நடிப்பை மக்கள் ஏற்பார்கள்?

அதிரிபுதிரி வில்லன் கேரக்டர் என்று நினைத்து அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார் போலும்.. அவருக்கு தண்டனையாக ஆட்டுக்கல்லில் மாவு அரைக்க விடுகிறார்கள்.. அதேபோல ஒரு கிராமம் என்றால், அங்கே ஊர் மக்களே இருக்க மாட்டார்களா? சமுத்திரகனி, ராஜ்கிரண், தனுஷ், நித்யா மேனன், தனுஷ் அப்பா மட்டுமே இருக்காங்க.. பார்ப்பதற்கு கிராமம் போலவே தெரியவில்லை.. செட் போட்டு எடுத்தது போல இருக்கு.

40 பேர் கூட இல்லாத ஊர்

அருண் விஜய், தனுஷை அடிப்பது போல காட்சியில் சுற்றி 20 பேர் நிற்கிறார்கள்.. ஆனால், எங்க ஊரு பையனை ஏன் அடிக்கிற? என்று ஒருத்தரும் அருண்விஜய்யை கேள்வி கேட்கவில்லை.

ஜிவி பிரகாஷ் இசையில் என்சாமி பாட்டு நல்லா இருக்கு.. ஆனால், அந்த பாட்டுக்கு கிராமத்திலுள்ள 4 ஆயிரம் பேர் ஆடறாங்க.. அதாவது 40 பேர் கூட இல்லாத ஊரில், இந்த பாட்டுக்கு மட்டும் 4 ஆயிரம் பேர் சேர்ந்து ஆடறாங்க.. இவர்கள் திடீர்னு எங்கிருந்து வந்தார்கள்?

குண்டு சட்டியில் குதிரை

"குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டாம்" என்று வசனம் பேசுகிறார் தனுஷ்.. அப்படியானால் யாரையுமே வெளியூருக்கெல்லாம் போகாமல் சொந்த கிராமத்திலேயே இருக்க சொல்கிறாரா? அப்பாக்கள் செய்த தொழிலையே மகன்களையும் செய்ய சொல்கிறாரா? பிள்ளைகள் எங்குமே நகர கூடாது என்று சொல்கிறாரா? இதெல்லாம் சரியாக தெரியவில்லை.

ராஜ்கிரண் எதுக்கு காலில் பெரிய சலங்கையை கட்டியிருக்கிறார்? அவர் அந்த ஊரில் சலங்கையாடியா? அந்த ஊரில் கூத்து கட்டுபவரா? ஏன் சலங்கை கட்டிக் கொள்ளணும்.. இறந்தவர் சாமியாக வருகிறார் என்றால், எதுக்காக சலங்கையை கட்டிக் கொண்டு வரணும்? இட்லி கடை பற்றி என்னை கருத்து கேட்டால், "2 இட்லிக்கு, எதுக்கு நாலு வகையான சட்னி?" என்று விமர்சித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+