பணத்தை செலவு பண்ணினா உண்மையையே மாத்திடலாம்! இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உருக்கம்! யோசிக்க வைத்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பாடல் ஹிட்டாகிறதற்கு அதன் இசையும் வரிகளும், ரசிகர்களின் ரசனையும் மட்டும் தான் காரணமா? அல்லது அதை மக்களிடம் எவ்வளவு பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கிறோம் என்பதற்கு முக்கிய பங்கு இருக்கிறதா? இப்படி ஒரு கேள்வி எழுப்பும் வகையில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியிருக்கும் கருத்து கவனம் பெற்றுள்ளது.

சினிமாவில் ஒரு பாடல் வெளியாகும் போது ஆரம்பத்தில் அது எப்படி இருக்கிறது? என்பதை விட அடுத்த சில நாட்களில் அந்த பாடலை சுற்றி என்ன மாதிரியான பரபரப்பு உருவாகிறது என்பதுதான் முக்கியமாகி விடுகிறது. அதிகப்படியான ப்ரமோஷன் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து வரும் பதிவுகள், ட்ரோல்கள் என ஒரு பாடல் மக்களிடம் அதிகமாக கொண்டு செல்லப்பட்டால் அது மிகப்பெரிய ஹிட் என்ற மனநிலையும் உருவாகிவிடுகிறது.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேட்டி

இதைத்தான் சாம் சிஎஸ் ஒரு பேட்டியில் ஓபன் ஆகவே பேசி இருக்கிறார். ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் செலவு பண்ணீங்கன்னா அந்த பாட்டை பெருசாக்கிடலாம். 50 லட்சம் ரூபாய் செலவு பண்ணீங்கன்னா அதை அந்த வருடத்தோட பெஸ்ட் சாங் ஆக்கிடலாம். ஒரு கோடி ரூபாய் செலவு பண்ணுனீங்கன்னா... அதுதான் இந்த உலகத்தோட மிகச்சிறந்த பாடல் என்று கூட உங்களால் மாற்ற முடியும் என்று அவர் பேசியிருக்கிறார்.

Sam CS Sam CS Interview Sam CS Speech Sam CS Quotes Sam CS Latest News Tamil Music Director Tamil Cinema Kollywood

பணத்தின் மாற்றம்

சினிமாவில் ஒரு பாடலின் வெற்றியை உருவாக்குதில் பணமும், ப்ரோமோஷனும் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் பேசிய பிறகு விவாதம் கிளப்பி இருக்கிறது. இது பாடலுக்கு மட்டும் கிடையாது என்பதுதான் அவர் சொன்ன அடுத்த விஷயம். ஒரு நல்லவனை கெட்டவனாகவும், ஒரு கெட்டவனை ரொம்ப நல்லவனாகவும் பணத்தால் முடியும். ஒருவரை இந்த உலகத்தோடு புனிதனாகவே மாற்ற முடியும். இது ஒரு நெகட்டிவான உலகம் என்று அவர் பேசியிருக்கிறார்.

சினிமாவை தாண்டிய பேச்சு

இந்த இடத்தில்தான் அவருடைய பேச்சு சினிமாவை தாண்டி பொதுவான ஒரு விஷயமாக மாறுகிறது. ஒருவரை பற்றி வரும் தகவல்கள் எல்லாமே முழுமையாக உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பார்த்தால், கேட்டால், படித்தால் அதுவே உண்மை என்று எண்ணம் நமக்குள் வந்துவிடுகிறது. அதில் சோசியல்மீடியா காலத்தில் ஒரு விஷயம் வைரல் ஆகிவிட்டால் அதன் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்று தேடிப் பார்ப்பவர்களை விட வைரலான விஷயத்தை நம்புறவங்க தான் அதிகமா இருக்குறாங்க.

காலத்தின் மாற்றம்

அதனால் தான் சாம் கூட இதை ஒரு காலத்தில் வேறு மாதிரி தான் பார்த்திருக்கிறார். ஒரு காலத்தில் இது தப்புன்னு சொல்லிட்டு இருந்தேன், ஆனா இப்போ நான் தப்புன்னு எல்லாம் சொல்லல.. எனக்கே தெரியுது உலகம் முழுசாக மாறி போயிடுச்சு.. என அவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள எல்லாவற்றிலும் சரி தப்பு என்று இரண்டாக பிரித்துப் பார்க்க முடியாது என்பதும் புரிகிறது.

பாலியல் தொந்தரவு செய்த இசையமைப்பாளர்.. பிரியாணிக்கு விலை.. மீண்டும் பாடகி ஸ்வாகதா தாக்கு! யார் அவர்?
ஒரு விஷயம் நமக்கு காட்டப்படும் இடத்துக்கும் அது உண்மையில் இருக்கும் விஷயத்துக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கலாம். மொத்தத்தில் சொல்லனும் என்றால் நமக்கு அறிவு இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான் என்று அவர் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் இசையமைப்பாளர்களில் சாம் சிஎஸ்க்கு முக்கிய இடம் உண்டு.

Sam CS Sam CS Interview Sam CS Speech Sam CS Quotes Sam CS Latest News Tamil Music Director Tamil Cinema Kollywood

இயக்குனர் சாம் சிஎஸ் இசை பயணம்

ஆரம்பத்தில் இசைத் துறையில் பல்வேறு வேலைகளை பார்த்த அவர் பின்னர் இசையமைப்பாளராக புரியாத புதிர் படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு விக்ரம் வேதா படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தின் பின்னணி இசை இப்போதும் பேசப்படும் அளவுக்கு வரவேற்பு பெற்றது. அதற்கு பிறகு கைதி, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போதைய உலகம், பணம் மாற்றம் போன்றவற்றை பற்றி ஓபனாக பேசியதுதான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+