பாலியல் தொந்தரவு செய்த இசையமைப்பாளர்.. பிரியாணிக்கு விலை.. மீண்டும் பாடகி ஸ்வாகதா தாக்கு! யார் அவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பின்னணி பாடகி ஸ்வாகதா ஒரு இசையமைப்பாளர் குறித்து பேசியதுதான் சோசியல் மீடியாவை அதிர வைத்துவிட்டது. அந்த இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தன்னை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்ற சாட்டுகளை சொல்லி இருந்தார். ஆனால் அப்போது அவர் யார் என்று சொல்லவில்லை இந்த நிலையில் இப்போது மீண்டும் அவரை மிரட்டும் வகையில் போஸ்ட் போட்டு இருக்கிறார். இது அதிகமாக விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாடகி ஸ்வாகதா பேட்டி

ஸ்வாகதா வெளியிட்ட பதிவில் நிறைய சொல்லணும்னு தோணுது. ஆனால் ஒரு பிரியாணிக்கு உண்மையும், மீடியாவும் விலை போகும் என்று நினைச்சான் பாரு... இந்த ஆளு... சிரிப்பு சிரிப்பா வருது. நீ பண்ணு... இன்னும் என்னவெல்லாம் பண்றான்னு பார்க்கிறேன்... உன்னுடைய ஒவ்வொரு செயலையும் கவனிச்சிட்டு இருக்கிறேன். இது நான் எதிர்பார்த்ததுதான்.. அடுத்து என்ன செய்யப் போறேன்னு எனக்கு தெரியும், பாத்துக்கலாம் மிஸ்டர் பிரதர்.. என்னுடைய பழிவாங்களுக்கு தயாராக இரு.. என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் எதுவும் வேகமாக பரவி வருகிறது.

Swagatha singer music composer

இசையமைப்பாளர் மீது குற்றச்சாட்டு

ஸ்வாகதா கிருஷ்ணன் என்ற பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரவுக்கு ஆயிரம் கண்கள், காற்றின் மொழி, பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ள ஸ்வாகதா ஒரு பேட்டியில் தன்னை ஒரு பிரபல இசையமைப்பாளர் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

யார் அந்த இசையமைப்பாளர்

அதோடு பட வாய்ப்பு தருவதாகவும் கூறி சம்பளமும் தராமல் வேலை வாங்கியதாகவும், தன்னிடம் இருந்தும் கடனாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு அந்த பேட்டியில் இன்னொரு அதிர்ச்சியான விஷயத்தையும் சொல்லி இருந்தார். அதாவது அந்த இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தன்னைப்போல பல பெண்கள் மற்றும் பாட வருகிற சிறுமிகளிடமும் அந்த இசையமைப்பாளர் தவறாக நடந்து கொண்டதாகவும், அவற்றை ரகசியமாக பதிவு செய்து மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.

Swagatha singer music composer

மீண்டும் பதிவு

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் தான் மிரட்டப்பட்டதாகவும் சொல்லியிருந்தார். இது அந்த நேரத்தில் பெரிதாக விவாதத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்திருந்தாலும் அந்த இசையமைப்பாளர் யார் என்பது குறித்து ஸ்வாகதா இதுவரை பொது வெளியில் பெயர் சொல்லவே இல்லை.

சரியான நேரம் வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மட்டும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அவர் பதிவு வெளியிட்டதும் பழைய சம்பவங்கள் எல்லாம் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+