நாட்டின் வீரர்களுக்கு ‘சிறப்பான’ மரியாதை.. இளையராஜா எடுத்த முடிவு.. வியக்க வைத்த பதிவு
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதாவது எல்லையில் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு தன்னுடைய இசை நிகழ்ச்சி கட்டணத்தையும், தன் ஒரு மாத சம்பளத்தையும் வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

பலருடைய கனவு சுற்றுலா தலங்களில் ஒன்றான காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. அந்த இடத்திற்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளை அவர்களின் குடும்பத்தினரின் கண் முன்பு பயங்கரவாதிகள் ஈவு இரக்கம் இன்றி துப்பாக்கி சூடு நடத்தி இருந்தனர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்களுக்கு மரியாதை
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அளித்தது. இதற்கு பதில் தருவதற்காக பாகிஸ்தான் இந்தியாவில் வான்வழி தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அதை அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்ற சூழ்நிலை நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது தொடர்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் என பலரும் ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
உண்மையான ஹீரோக்கள்
அதே நேரத்தில் இந்த போரால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட கூடாது என்றும் பலர் கருத்து கூறி விடுகிறார்கள். இப்படியான நிலையில்தான் இளையராஜா தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையும் தான் இந்த மாதம் நடத்த இருக்கும் நிகழ்ச்சி கட்டணத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு கொடுப்பதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இளையராஜா வழங்கும் நிதி
அதில், இந்த ஆண்டில் தொடக்கத்தில் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து அதற்கு வேலியன்ட் என்று பெயரிட்டேன். ஆனால் மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் துணிச்சலாக போராடி வருகிறார்கள். அவர்களின் துணிச்சல் நிச்சயம் எதிரிகளை வீழ்த்திடும் என்று கூறி இருக்கிறார்.
இளையராஜா எடுத்த முடிவு
அதோடு பாரதியின் தேசப்பற்று பாடல் வரிகளையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் நான் ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீர முயற்சிக்காக எனது இசை நிகழ்ச்சியின் கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு எனது சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இளையராஜாவுக்கு பாராட்டு
இதுபோல ஏற்கனவே வெளியிட்ட ஒரு பதிவில் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜா சமீபத்தில் தான் கரூரில் தன்னுடைய இசைக் கச்சேரியை நடத்தி முடித்து இருந்தார். அடுத்ததாக கோவையில் வரும் 17ஆம் தேதி கச்சேரி நடத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இளையராஜா எடுத்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள். இளையராஜா தன்னுடைய பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு நஷ்ட ஈடு கேட்கிறார் என்று அவரை விமர்சித்து சிலர் விமர்சிக்கு வருகிறார்கள் ஆனால் இப்போது நாட்டிற்காக அவர் எடுத்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications