எங்களிடம் இல்லாத பணமா? கொட்டி கிடக்கு, அதை ஏன் மத்தவங்களுக்கு உதவி பண்ணனும்? கங்கை அமரன் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா குட்பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக காப்பிரைட் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது குறித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரனிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் காரசாரமாக பேசியிருக்கிறார். தங்களிடம் இல்லாத பணமா? எங்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்று கூறியிருக்கிறார். அதற்கு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எதிர்பாராத பதில் கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா சமீபகாலமாகவே தன்னுடைய பாடலை தன் அனுமதி இன்றி யாரும் படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வருகிறார். மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காக அந்த நேரத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

Ilayaraja Gangai Amaran

காப்பி ரைட் பிரச்சனை

அது பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது பட குழுவினர்கள் இளையராஜாவின் இசையின் ரைட்ஸ் எந்த ஆடியோ நிறுவனம் வைத்திருக்கிறதோ அவர்களிடமிருந்து நாங்கள் என்ஓசி பெற்று விட்டோம் என்று தெரிவித்திருந்தனர். ஆனாலும் இளையராஜா தன்னுடைய பாடலுக்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியதால் அவருக்கு பணத்தை கொடுத்து அந்தப் பிரச்சினையை சரி செய்து வந்ததாக கூறப்பட்டது.

இளையராஜா போட்ட வழக்கு

அதேபோல இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அதே பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவின் மூன்று பாடல்களை அந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதால் அது குறித்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதற்கு பட குழுவினர் நாங்கள் சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனியில் என்ஓசி வாங்கி விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் கருத்துக்கள்

இந்த பிரச்சனைக்கு மத்தியில் இளையராஜா பற்றிய விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஏன் இவருக்கு பணத்தின் மீது இவ்வளவு ஆசை? எவ்வளவு பணம் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஆனாலும் இப்படி பணத்திற்காக கேஸ் போடுகிறாரே என்றெல்லாம் அவரை பலர் விமர்சிக்கிறார்கள். ஒரு சிலர் இளையராஜா ரைட்ஸ் கேட்பதில் தப்பு ஒன்றும் கிடையாது என்றும் கூறி இருக்கிறார்கள்.

கங்கை அமரன் விளக்கம்

இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனிடம் செய்தியாளர்கள் பேசும்போது என் அண்ணனிடம் இல்லாத பணமா? அவரிடம் கொட்டி கிடக்குது. செலவழிக்க முடியாமல் தவித்து வருகிறோம். இப்படி இருக்கும்போது பணத்துக்காக இந்த காப்பிரைட் பிரச்சனையை அண்ணன் கொண்டு வருவார் என்று சொல்வதெல்லாம் நியாயமே இல்லை.

Ilayaraja Gangai Amaran

செய்தியாளரின் கேள்வி

நீங்க சொந்தமா பாட்டு போடுங்க. அப்படியே நீங்க பாட்டு போட்டும் ஜெயிக்கலையே. நாங்க போட்ட பாட்டை பார்த்து தானே மக்கள் ரசிக்கிறார்கள், கைதட்டுகிறார்கள். அப்போ அந்த பாட்டில் எங்களுக்கு பங்கு இருக்கிறதுதானே? அதைத்தான் அண்ணன் கேட்கிறார். அவரிடம் முன்னாடியே அனுமதி வாங்கி இருந்தால் கண்டிப்பாக அவர் மறுத்திருக்க மாட்டார் இலவசமாகவே பயன்படுத்திக்கோங்க என்று சொல்லி இருப்பார் என்று கங்கை அமரன் சொல்லிக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களிடம் அவ்வளவு காசு இருந்தால் ஏன் மத்தவங்களுக்கு கொடுத்து உதவலாமே என்று கேட்டிருக்கிறார்.

எல்லாமே வாரிசுகளுக்கு தான்

அதற்கு நாங்கள் ஏன் மத்தவங்களுக்கு கொடுக்கணும்? நாங்க உழைச்சி சம்பாதித்தது எங்களுக்கு பின்னாடி எங்களுடைய சந்ததியினர் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதே மாதிரி உழைச்சி சம்பாதிங்க. நாங்களும் உதவி செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் அதை வெளியே சொல்வதில்லை என்று கங்கை அமரன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+