Ilaiyaraaja : என் தேசிய விருதுக்கு இளையராஜா தான் காரணம்! - அப்புக்குட்டி உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் இசை முடிசூடா மன்னன் இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், நடிகர் அப்புக்குட்டி தனது மனமார்ந்த நன்றியையும், நெகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். தனது தேசிய விருதுக்கு இளையராஜாவே காரணம் என அவர் பேசியது, அரங்கில் இருந்த அனைவரையும் உருக வைத்தது.

Ilaiyaraaja Appukutty

இசைஞானி இளையராஜா

இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். எளிமையான கிராமியப் பாடல்களையும், சிக்கலான மேற்கத்திய சிம்பொனி இசையையும் ஒருசேரக் கையாண்டு, ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான இசையை அவர் வழங்கியதே, அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.

திரைப்படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாமல், பல கலைஞர்களுக்குத் தனது உதவிகளையும் அவர் வாரி வழங்கியுள்ளார். இன்று, தமிழர்களின் பொக்கிஷமாக உயர்ந்திருக்கும் அவருடன் ஒரே காலத்தில் பயணிப்பது நமது அதிர்ஷ்டம் என அப்புக்குட்டி பெருமிதத்துடன் கூறினார்.

அப்புக்குட்டி - கிராமத்து மணம் கொண்ட கலைஞர்

கமல்ஹாசனின் விருமாண்டி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்து, பின்னர் தனது தனித்துவமான உடல்மொழியாலும், கிராமத்து பாணியிலான பேச்சாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அப்புக்குட்டி. அவரது யதார்த்தமான நடிப்பு, அவரைத் திரையுலகில் ஒரு தனித்துவமான கலைஞராக நிலைநிறுத்தியது. ஆனால், சுசீந்திரன் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமான அழகர்சாமியின் குதிரை திரைப்படம், அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அழகர்சாமியின் குதிரை ஒரு திருப்புமுனை

அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில், இளையராஜாவின் இசை மிகப்பெரிய வரமாக அமைந்ததாக அப்புக்குட்டி குறிப்பிட்டார். "குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே... என்ற பாடலை, இளையராஜா அவர்கள் இசையமைத்து, பாடியது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. அந்தப் பாடலை நான் திரையில் வாய் அசைத்து நடித்தது, எனது நடிப்புக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், "அழகர்சாமியின் குதிரை' படத்தில் இடம்பெற்ற எமோஷனல் காட்சிகளுக்கான பின்னணி இசை, தன்னிடம் தேசிய விருதை பெற்றுத் தந்த முக்கிய காரணம்" என்றும் அப்புக்குட்டி கூறினார். "டெல்லி வரை கேட்டு அந்த இசையின் தாக்கத்தினால் தான், என் நடிப்பு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது. எனது தேசிய விருதுக்கு இளையராஜா அவர்களே காரணம்" என அப்புக்குட்டி பெருமையுடன் தெரிவித்தார்.

இளையராஜா வாழும் காலத்தில் அவருடன் இணைந்து பணிபுரிவது, ஒவ்வொரு நடிகருக்கும் கிடைக்கும் பெரும் பாக்கியம் எனவும், தன்னுடைய கனவு அதன்மூலம் நிறைவேறியது எனவும் அப்புக்குட்டி உணர்வுபூர்வமாகப் பேசினார். இசைத்துறையில் அரைநூற்றாண்டு காலத்தை நிறைவு செய்த இளையராஜாவுக்கு, அரசாங்கம் சார்பில் விழா நடத்துவது மிகப் பெரிய மரியாதை எனவும், அதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அவர் நன்றிகள் தெரிவித்துக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+