கோவையில் இளையராஜா நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்.. அடுத்தடுத்து இப்படியா ஆகணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் மே 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வு, இடம், தேதி ஆகியவற்றையை திடீரென மாற்றி இருக்கிறார்கள். மே 18ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி கோவைப்புதூர் ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

18 18 17

மே 17ஆம் தேதி கோவை புதூரில் இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்ந்து நான்கு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் இதற்கான டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் மத்தியில் நல்ல ஆர்வம் இருக்கிறது. ஏற்கனவே இளையராஜா இயக்கிய சிம்பொனி நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு ஊர்களில் கச்சேரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இந்த நிகழ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கச்சேரி நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

எவர்கிரீன் பாடல்

தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் ஆகியும் தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இளையராஜாவின் இசையும் குரலும் பலருடைய சோகத்தை மறக்க வைக்கும் அருமருந்தாக இருக்கிறது. அழுகையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, அத்தனையும் இசைக்குள் கட்டி வைத்து வித்தை காட்டி வரும் இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்டது பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இளையராஜாவின் திறமைகள்

சொந்தமாக இசை குறிப்புகள் எழுத தெரிந்தவர் என எத்தனையோ சாதனைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இளையராஜா பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அவர் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் சர்ச்சையை கிளப்புகிறது. ஆனாலும் அவர் அதைப்பற்றி கண்டு கொள்வதே கிடையாது. சமீபகாலமாகவே இசை கச்சேரிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வரும் இளையராஜா ஆரம்பத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் இசைக்கச்சேரிகள் நடத்தி வந்தார். சமீபத்தில் மற்ற மாவட்டங்களிலும் தன்னுடைய கச்சேரியை நடத்த முடிவு செய்திருந்தார்.

இளையராஜா கச்சேரி

அதற்காக திருநெல்வேலியில் மதுரை கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் இளையராஜாவின் இசையை கேட்டு ஆர்ப்பரித்தனர். இது இளையராஜாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வை தந்தது. அதை பற்றி தன்னுடைய twitter பக்கத்தில் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். அதில் "நெல்லை மக்களின் அன்பும், ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊரிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்...?" என்று அதில் கேட்டிருந்தார்.

இளையராஜா பதிவு

அதில் மக்கள் தங்களுடைய ஊர்களை எல்லாம் கமெண்டில் பகிர்ந்து வந்தனர். அதனால் மற்றொரு பதிவில் சேலம், திண்டுக்கல், கடலூர்... உங்கள் எல்லாரையும் பார்க்க ஆவளோடு காத்திருக்கிறேன் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.. என்று கூறியிருந்தார். இளையராஜாவின் பாடல்களை நேரில் பார்த்து, கேட்டு விட வேண்டும் என்று பலரும் காத்திருக்கும் நேரத்தில் இளையராஜா இப்போது கோவையில் நிகழ்ச்சியில் தேதியை மீண்டும் மீண்டும் ஆட்சி வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

வருத்தம்

ஏற்கனவே சமீபத்தில் தான் தன்னுடைய நிகழ்ச்சியின் மூலமாக வரும் கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்னுடைய சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால் இப்போது அவருடைய நிகழ்ச்சிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+