Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ilayaraja: சிம்பொனியால் என் குழந்தைங்க.. எங்க யுவன் போய்ட்டானா? பாராட்டு விழாவில் இளையராஜா கலகலப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு விழாவில் தனது குழந்தைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கருக்கு நன்றி சொல்ல தேடிய போது "யுவன் எங்க போய்ட்டானா?" என கேள்வி எழுப்பினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.

television ilayaraja

அப்போது இளையராஜா பேசியதாவது: இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசைமையப்பாளருக்கு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப் பெரிய விஷயம். முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மீது வைத்த அதே அன்பை அவரது தவப்புதல்வன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்.

இசைதான் காரணம்

அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். ஒரு பாராட்டு விழாவில் எனக்கு கருணாநிதி, "இசைஞானி" என்ற பட்டத்தை கொடுத்தார். சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு என் வீட்டுக்கே வந்து பாராட்டினார் முதல்வர். பின்னர் நான் தமிழகம் திரும்பியதும் என்னை விமான நிலையத்திலேயே வரவேற்றார்.

பாராட்டு விழா

தற்போது எனக்கு அரசு சார்பில் பாராட்டு விழா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது குழந்தைகளுக்கான நேரத்தை செலவழிக்காமல் இந்த சிம்பொனியை எழுதினேன். அவர்களுடன் நேரம் செலவிட்டிருந்தால் நான் சிம்பொனியை எழுதியே இருக்க முடியாது.

முதலில் குழந்தைகளுக்கு நன்றி

அது போல் நீங்கள் விரும்பி கேட்ட அத்தனை பாடல்களையும் கம்போஸ் செய்திருக்க முடியாது. அதனால் இங்கே நான் நன்றி தெரிவிக்க வேண்டியது, முதலாவதாக எனது குழந்தைகளுக்குத்தான். கார்த்திக் ராஜா, யுவன்... எங்க யுவன் போய்ட்டானா என இளையராஜா கேட்டதும் யுவன் எழுந்து நின்றார். அப்போது கரகோஷம் எழுந்தது.

சிம்பொனி

மேலும் இளையராஜா தொடர்கையில், உங்களுடன் செலவழிக்க வேண்டிய நேரம்தான் சிம்பொனியாக வந்தது. இதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம். உங்களுக்காக நான் நேரம் செலவிடவில்லை என்பதை இனி நீங்கள் கம்ப்ளைண்ட் செய்ய போறதில்லை. உங்களுக்கும் வயதாகிவிட்டது, உங்கள் குழந்தைகள் உங்களுக்கு சொல்ல போகுது!

87 பேரை ஒருங்கிணைத்து

87 பேரை ஒருங்கிணைத்து மனதில் தோன்றியதை இசை குறிப்புகளாக எழுதி, ஒவ்வொருவருக்கும் அதை கொடுத்து அவர்களை வாசிக்க வைத்தேன். அவர்களும் கட்டுக்கோப்புடன் வாசித்தனர். யாராவது ஒருவர் கவனம் சிதறியிருந்தாலும் அந்த இசை நன்றாக இருந்திருக்காது.

35 நாட்களாச்சு

இந்த இசைக்காக சுய கட்டுப்பாடுகளுடன் 35 நாட்கள் செலவிட்டேன். இந்த சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றார் இளையராஜா. பின்னர் நேயர்களின் விருப்பமாக "ஜனனி ஜனனி" பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.

இளையராஜாவுக்கு பாரதரத்னா

முன்னதாக பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஆண்டுதோறும் இசை கலைஞர்களுக்கு இளையராஜா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சங்க இலக்கியங்களை ஆல்பமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் கோரிக்கை

"பொதுவாக முதல்வரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள், இப்போது நான் ராஜாவிடம் கோரிக்கை வைக்கிறேன். அவர் நிச்சயம் செய்வார்" என நம்புகிறேன். இளையராஜா கடல் கடந்து, எல்லைகளை கடந்து புகழ் அடைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் என்றுமே ராஜா ராஜாதான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+