பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் "அதை" சொன்னதுமே, இளையராஜாவுக்கு பயங்கர அதிர்ச்சி.. நிஜத்தைதான சொல்றாரு
சென்னை: இசைஞானி இளையராஜாவிடம் ஒரு பாடலை பாட மறுத்துவிட்டாராம் பிரபல பின்னணி பாடகர் கேஜே ஜேசுதாஸ். இதை இளையராஜாவிடமே நேரடியாக சொல்லிவிட்டாராம்.. என்ன காரணம்?
இசையை வைத்து படத்தையே வெற்றி பெற வைப்பதில் அதிதிறமைசாலி இசைஞானி இளையராஜா. இவரது இசைக்காகவே சினிமாவை பார்த்தது இந்த தமிழகம்.
வழக்கமான பாணி என்றில்லாமல் புதுசு புதுசாக, தினுசு தினுசான வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது அவரது இசைத்தேடல்.

சிட்டுக்குருவி: இதற்கு "சிட்டுக்குருவி" படத்தை போல இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.. இப்போதுவரை எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் இளையராஜா மீது இருக்கவே செய்கிறது.. இளையராஜா கோபப்பட்டு பேசிய, எத்தனையோ வீடியோக்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.. ஆனால், அவை எதுவுமே இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை என்பதே உண்மை..
ரசிகர்கள் என்றில்லை, எந்த பிரபலங்களை இளையராஜா கடிந்து கொண்டாலும்கூட, அவர்களில் ஒருத்தருமே எதிர்வினையாற்றியதில்லை.. இளையராஜா என்ன திட்டினாலும், அவரது ரசிகர்களும் கோபிப்பதும் இல்லை;.. அவைகள் அனைத்தையுமே எல்லைமீறிய உரிமையாகவே எடுத்து கொள்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக, ரசிகர்களின் காதுகள், இளையராஜாவின் இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமான நிஜம்..!!
இளையராஜா: இதைதான் கடந்த வாரம், சீமான் சொல்லியிருந்தார்.. இளைரயாஜா பிறந்த நாள் விழாவில் சீமான் பேசும்போது, "செவிக்கு உணவளித்து, எங்களை பசியையே மறக்க வைத்தவர் இளையராஜா.. செவி உள்ள மானுடர்கள் இந்த மண்ணில் பிறக்கும்வரை எங்கள் இசைத்தகப்பன் இளையராஜாவின் இசையும் இருக்கும்.. புகழும் இருக்கும்" என்றார் பூரித்துபோய்.
அதுபோலவே ரசிகர்கள் இளையராஜாவின் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். தற்போது முக்கிய நிகழ்வு ஒன்றையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இது யார் தந்த பேட்டி என்று தெரியவில்லை.. யார் யாரிடம் சொன்ன தகவல் என்றும் தெரியவில்லை. ஆனால், கடந்த 3 நாட்களாகவே இணையத்தில் இந்த தகவல், இளையராஜா ரசிகர்கள் மத்தியில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
ட்ரையல்: "அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங்.... பாடல் எல்லாம் தயார். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாட்டை பாடி ரெகார்டிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாகவே வந்திருந்தது.
வருத்தம்: ரொம்ப நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. அப்பறம் ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருத்தமாக சொல்லியுள்ளார். ஆனாலும், இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகார்டிங்கை வைத்துகொள்ளலாம் என்று சொன்னார்.. அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார்.
முன்தினம் தான் பாடிய பாட்டை, அவரிடம் இளையராஜா தந்தார்.. "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டுக்குங்க" என்று சொல்லிவிட்டு போனார்.. பாடலை முழுசும் கேட்டார் ஜேசுதாஸ்.. கண்கள் குளமாகிவிட்டது.. நேராக இளையராஜாவிடம் போனார்.. "இந்த பாடலை என்னால் பாட முடியாது" என்றார்.
மறுத்துட்டாரு: இதைக்கேட்டு இளையராஜா அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு ஜேசுதாஸ் இளையராஜாவிடம் ஜேசுதாஸ் சொன்னது இதுதான்... "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா? என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்றார்.. இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாட்டை பாட மறுத்து, இளையராஜாவின் குரலிலேயே அந்த பாடலை வெளிவரவைத்தார் ஜேசுதாஸ். அந்த பாடல்தான்.. "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"..!
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications