பயில்வான் சொன்னதெல்லாம் பொய்! கடைசி நேரத்தில் கணவரிடம் பவதாரிணி கேட்டது இதுதான்.. உறவினர் எமோஷனல்
சென்னை: இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி சில நாட்களுக்கு முன்பு காலமானார். ஆனால் அவர் பற்றி பயில்வான் ரங்கநாதன் உட்பட சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் ஆனால் பவதாரணி இறக்கும்போது கடைசி நேரத்தில் நடந்தது இதுதான் என்பது பற்றி பவதாரிணியின் கணவரின் அண்ணன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில் பவதாரிணி அவருடைய கணவரை இளையராஜாவுக்காக பிரிந்து விட்டார் என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் சொல்லியிருந்தார். ஆனால் அதுவெல்லாம் உண்மை இல்லை, நிஜத்தில் பவதாரணி அவருடைய கணவருடன் தான் வாழ்ந்து வந்தார் என்றும் பவதாரிணியை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனது அவருடைய கணவர் தான் என்றும், அப்போது பவதாரிணி அவருடைய கணவரிடம் சில விஷயங்களை கேட்டிருக்கிறார் என்பது பற்றியும் அவருடைய உறவினர்கள் பகிர்ந்து இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகரும் பிரபல பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த மாதிரி தான் சமீபத்தில் மறைந்த பவதாரிணி குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் பவதாரிணி இளையராஜாவின் செல்ல மகள். இளையராஜா பவதாரிணிக்காக எதையும் செய்வார். வீட்டில் பவதாரிணி உடைய அண்ணன்கள் கூட எது அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றாலும் பவதாரிணி மூலமாக தான் கேட்பார்கள். பவதாரிணிக்கு சபரி ராஜ் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலே சபரியை பவதாரிணி பிரிந்து விட்டார்.
கணவரை பிரிந்து தன்னுடைய அப்பா இளையராஜா வீட்டில்தான் பவதாரிணி வசித்து வந்தார் என்றெல்லாம் பயில்வான் பேசி இருந்தாராம். அது குறித்து சமீபத்தில் சபரியின் அண்ணன் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சிலர் தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக கண்டதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சபரிக்கும் பவதாரிணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் உண்மைதான்.
பவதாரிணிக்கு திருமணமாகும் போது 21 வயது தான். அந்த வயதில் ரொம்பவும் மெச்சூர் ஆகாமல் இருந்ததாலோ என்னவோ அவருக்கும் அவருடைய கணவருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தது. ஆனால் அதற்கு பிறகு பவதாரிணிக்கு பொறுப்புகள் வந்த பிறகு கணவன் மனைவி இருவரும் நன்றாகவே புரிந்து கொண்டனர். அதுபோல சபரியும் பவதாரிணி மீது அதிகமான பாசம் வைத்திருந்தார்.

கொரோனா காலத்தில் சபரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் கூட பவதாரிணி தான் முழுமையாக சபரியை பார்த்துக் கொண்டது. அதுபோல பவதாரிணிக்காக பல நிகழ்ச்சிகளையும் சபரி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் சபரி அதிகமாக உடைந்து போயிருந்தார். பிறகு யுவன் ஆலோசனைப்படி ஒரு டாக்டரிடம் பேசி அவர் சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க கூட்டிட்டு போயிருந்தார்.

அங்கு கூட பவதாரிணி சபரியிடம் எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க எனக்கு பாடணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார். அதற்கு சபரியும் சரி என்று சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இப்படியாகும் என்று நாங்கள் நினைக்கலை என்று அந்த பேட்டியில் பவதாரிணியின் கணவரின் அண்ணன் பேசி இருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications