உயிரை கையில் புடிச்சிட்டு தப்பிச்சு வந்துட்டேன்.. கண்ணீரோடு மனம் திறந்த "இளையராஜா”வின் மருமகள்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான விலாசினி தன்னுடைய வாழ்க்கையில் தான் கடந்து வந்த கசப்பான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அப்போது இளையராஜாவின் முன்னிலையில் தான் தனக்கு திருமணம் நடைபெற்றது என்றும் மொத்த குடும்பத்தினரும் பார்த்து முடித்து வைத்த திருமணத்தில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் பாதிப்புகள் பற்றி பேசி இருக்கிறார்.
தன்னுடைய கணவர் தனக்கு செய்த துரோகம் மற்றும் அதிலிருந்து தான் எப்படி வெளியே வந்தேன் என்பது பற்றி நடிகை விலாசினி கண்ணீரோடு பேசி இருக்கிறார். இந்த வீடியோ பார்த்து பலர் பீல் பண்ணி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா பற்றி பலருக்கும் தெரிந்ததுதான். மனம் சோகமாக இருக்கும்போதும் சரி, சந்தோஷமாக இருக்கும்போது சரி இளையராஜா பாடலை பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் அதிகமானோர் சோகத்தில் துவண்டு போயிருக்கும் போது தாங்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இளையராஜா பாடல் உதவியது என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியை கூட கூறலாம்.
இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு அன்றும் இன்றும் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் அதன் இனிமை குறித்து மனம் திறந்து பேசி இருந்தனர். ஆனாலும் இளையராஜாவின் சொந்த மருமகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆமாம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் நடித்து வரும் ஆர்ஜே விலாசினி இளையராஜாவின் மருமகள் தான். விலாசினிக்கு இளையராஜா, அப்பாவின் அக்கா கணவர் தானாம்.
அது போல விலாசினியின் பாட்டியின் மகனாகவும் இளையராஜா இருக்கிறார். இளையராஜா குடும்பத்திற்குள்ளே திருமணம் செய்து கொண்டதால் எப்படி பார்த்தாலும் தனக்கு மாமா தான் என்று விலாசினி கூறி இருக்கிறார். இந்த நிலையில் விலாசினி ஆர்ஜே வாக ஆரம்பத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். காலேஜ் படித்து முடித்ததுமே இவர் ஆர் ஜே வாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுபோல நாம் பயன்படுத்தும் செல்போனில் வரும் கம்ப்யூட்டர் வாய்ஸ் இவர் பேசியது தானாம்.
இளையராஜா குடும்பம் பெரிய அளவில் வசதியாக இருந்தாலும் விலாசினியின் குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இருந்திருக்கிறார். விலாசினி அவருடைய அம்மா அப்பாவிற்கு ஒரே ஒரு பொண்ணுதானாம். அதனால் இவர்தான் வேலை செஞ்சு தன்னுடைய அம்மா அப்பாவை கவனித்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஆர்ஜேவாக வேலை செய்து கொண்டிருக்கும் போது இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாவம் கணேசன் என்ற சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
டப்பிங் கலைஞராக பலருக்கு குரல் கொடுக்கும் இவருக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்பதை விடவும் ஒரு பாடகியாக வேண்டும் என்று தான் ஆசையாம். அதற்காக இளையராஜா மற்றும் யுவன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என எல்லாரிடமே இவர் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். எல்லோரும் பார்ப்போம் என்று கூறியிருக்கிறார்களாம். ஆனால் இப்ப வரைக்கும் எதுவும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பிரியாணி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் மட்டும் இவருக்கு கொஞ்சம் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததாம்.
இந்த நிலையில் வீட்டில் எல்லோரும் பார்த்து பேசி முடித்து தான் இவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணம் வாழ்க்கை எனக்கு பெரிய "நரக" வாழ்க்கை என்று கண் கலங்கியபடி பேசி இருக்கிறார். எப்போதும் ஜாலியாக சிரித்தபடியே இருக்கும் இவருடைய வாழ்க்கையில் இவர் செய்த பெரிய தப்பு என்றால் அது உறவினர்கள் எல்லாரும் சொல்றாங்கன்னு நான் விசாரிக்காமல் கல்யாணம் செஞ்சது தான் என்று விலாசினி கூறி இருக்கிறார்.
விலாசினியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்திருக்கிறது. சில நாட்களில் அது விலாசினிக்கு தெரிந்திருக்கிறது.
ஆனால் படித்த பையன் என்று நம்பி திருமணம் செய்ததால் வந்த வினை, நான் அவர் மீது திருமணத்திற்கு பிறகு அதிகமான அன்பு வைத்ததால் திருந்தி விடுவார் என்று எவ்வளவோ முயற்சி செய்து வாய்ப்பு கொடுத்து பார்த்தேன். ஒரு கட்டத்தில் எதுவுமே முடியாது என்று பிறகு தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன் என்று விலாசினி கூறி இருக்கிறார்.
அவரோடு சில நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையிலும் நான் வாங்காத அடி உதை கிடையாது. அந்த அளவிற்கு கொடுமைகளை தாங்கிக் கொண்டிருந்தது எல்லாம் தன்னுடைய அம்மா அப்பாவுக்காக தான். ஆனால் ஒரு கட்டத்தில் எதுவுமே இனி செய்ய முடியாது என்ற பிறகு தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறேன் என்று உருக்கமாக பேச இருக்கிறார்.
அதோடு தனக்கு விடாமுயற்சி அதிகம், எந்த இடத்திலும் யார் தயவும் இல்லாமல் நானாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தான் நான் முயற்சி எடுத்துக் கொண்டு அதற்கான பயணித்துக் கொண்டிருக்கிறேன். இப்பவும் நான் இளையராஜா பெயரை சொல்லியோ, அவருடைய மகன்களின் பெயரை சொல்லியே எங்கேயும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஏனென்றால் இளையராஜா, அவரே தான் இந்த இடத்திற்கு கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கிறார்.
அது போல தான் நானும் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் நான் முயற்சி செய்யும்போது கூட அதிகமான அவமானங்களை சந்தித்து விட்டேன். அதுவும் என்னுடைய நிறத்தைக் கூறி என்னை பலர் என் முன்னாடியே திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அப்போது ஆரம்பத்தில் எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். பிறகு இப்போ எல்லாம் அதற்கு கவலைப்படுவதே கிடையாது என்று தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நம்பிக்கையோடு விலாசினி பேசியிருக்கிறார்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications