தேவா பற்றிய கேள்வி.. சட்டென கோபமாகி இளையராஜா சொன்ன வார்த்தை.. பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் நடைபெறும் சிம்போனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்காக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் தேவா பற்றி கேட்டபோது அதற்கு கோபமாகி இளையராஜா பேசியிருக்கிறார்.
கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் மனதை வென்ற இளையராஜா முதல் முறையாக சிம்பொனியை 36 நாட்களில் உருவாக்கி அதை லண்டனில் அரங்கேற்ற உள்ளார். பல இசை அமைப்பாளர்களும் இதுபோல சிம்பொனியை இயக்குவதற்காக பல வருடத்திற்கு மேலாக முயற்சி செய்து வந்தாலும் இளையராஜா வெறும் 36 நாட்களில் இதை உருவாக்கி இருப்பது பெரிய அளவில் பேசப்படுகிறது.

இளையராஜாவிற்கு வாழ்த்து
இதற்காக இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உட்பட்ட பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்து இருந்தார். வரும் எட்டாம் தேதி லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற இருக்கிறார்.
இளையராஜா பதிலடி
இதற்காக இன்று காலை இளையராஜா சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு வழக்கம்போல கறாராக பதில் கொடுத்தார். அதில் அவர் பேசுகையில் உலகில் தலைசிறந்த இசைக் குழுவான ராயல் கரிபியன் ஆப் லண்டன் அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்த இந்த இசையை எட்டாம் தேதி வெளியிடப் போகிறோம் இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறியிருந்தார்.
செய்தியாளரின் கேள்வி
அப்போது செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் ஒருவர் சார் சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா நான் என்னுடைய பாடல்களை பயன்படுத்துவதற்கு காப்பி ரைட் கேட்கப்போவதில்லை என்று கூறுகிறார். அது போல என்னுடைய பாடல்களை இப்போது உள்ள தலைமுறையினர் பயன்படுத்துவதால் 2கே கிட்ஸ்களும் என் பாடல்களை ரசிக்கிறார்கள் அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்கிறார்.
நல்லபடியா நடக்கணும்
அதற்கு சட்டுனு கோபமான இளையராஜா இங்கு இதற்கு பதில் சொல்லவா நான் வந்து இருக்கிறேன்? தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். ஒரு நல்ல விஷயத்தை செய்யப் போகிறேன் எல்லாம் நன்றாக அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
இளையராஜாவின் கோபம்
இந்தியாவில் யாரும் செய்யாத ஒன்றை நான் செய்யப் போகிறேன் உங்களை போலவே எனக்கும் மகிழ்ச்சி. incredible இந்தியா போல நான் incredible இளையராஜா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த இடத்தில் தேவா குறித்து எந்த விமர்சனங்களையும் வைக்காமல் தேவா பற்றிய கேள்வியை கேட்ட செய்தியாளரிடம் தன்னுடைய கோபத்தை காட்டி விட்டு இளையராஜா கிளம்பி இருக்கிறார்.

பலரின் வேண்டுகோள்
இளையராஜா சிம்பொனியை உருவாக்க வேண்டும் என்று பல இசை கலைஞர்களும் ஆசைப்படுகிறார்கள். பின்னணி பாடகர் ஜேசுதாஸ் கூட இது பற்றிய கோரிக்கையை இளையராஜாவிடம் வைத்திருந்தார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இளையராஜா இந்த வேலையை தொடங்கினார்.
நாட்டிற்கே பெருமை
அதற்கான நோட்ஸ் எல்லாம் எழுதி முடித்துவிட்டார். வருகிற எட்டாம் தேதி லண்டனில் உள்ள அப்போலோ ஸ்டேடியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வாசிக்க சிம்போனி இசையை இசையமைக்க உள்ளார். இந்த ஸ்டேடியத்தில் பீத்தோவன் சிம்பொனியை இசைத்திருந்தார் என்பது வரலாறு. அந்த ஸ்டேடியத்தில் இப்போது இளையராஜா இசை அமைப்பது நம்முடைய நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications