இளையராஜா தாய்மாமா தான்..அவ்ளோ ஹாரஸ்மென்ட்..ஆனா அப்போ யாரும் உதவல..நடிகை விலாசினி வருத்தம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை விலாசினி தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் இளையராஜா தன்னுடைய மாமா என்றும் தனக்கு பெரிய குடும்பம் இருந்தும் உதவி செய்யவில்லை என்று வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.
சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் பல பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் எனக்கும் நடந்தது என்று அவர் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

ஆர்ஜே, விஜே, டப்பிங் கலைஞர் என்று பல திறமைகளை கொண்டிருக்கும் விலாசினி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ரா கேரக்டரில் இவர் நடித்திருப்பார்.
ஆனால் அந்த சீரியலில் கதை போலத்தான் விலாசினி வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதாம். அந்த சீரியலில் தன்னுடைய அம்மாவிடம் பேச வேண்டும் என்றால் கூட யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து தான் பேசுவார். அதுபோல தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்தது என்று அவர் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னணி இசையமைப்பாளராக பல வருடங்களாக இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர்தானம். அதாவது விலாசினியின் அப்பாவின் அக்கா கணவர் தான் இளையராஜாவாம். அதுபோல இளையராஜா தன்னுடைய பாட்டியின் மகன் என்றும் கூறியிருக்கிறார். எனக்கு எப்படி பார்த்தாலும் அவர் மாமா முறைதான்.
அதனால் சின்ன வயதில் இருக்கும் போது இருந்தே கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு பிரேம்ஜியோடு ஒன்றாக வளர்ந்து வந்தேன். ஆனாலும் பாடகியாக வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டு இருந்த நிலையில் அதற்காக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். அப்போதுதான் பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ஆரம்பத்தில் ரேடியாவில் ஆர்.ஜேவாக வேலை பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தொடர்ந்து ஆதித்யா டிவியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து கொண்டிருக்கும் போது தான் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ஆனால் திருமண வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி இல்ல. என்னுடைய கணவர் பற்றி தெரியாமலே நான் கல்யாணத்துக்கு சம்மதித்தது பெரிய தப்பா போய்விட்டது. அவர் வேறு ஒரு பொண்ணோடு தொடர்பில் இருந்தார். அதோடு என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு தான் தன்னுடைய அம்மாவையும் கவனித்து வருகிறேன் என்றும் எனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார். நமக்கு கையில் ஒரு வலி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு என்ன பண்ணலாம் என்று யாராவது கேட்டால் தானே நாமும் சொல்லுவோம். ஆனால் அப்படி கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் நானே அதை தடவி கொடுத்து விட்டு வாழ பழகி விட்டேன். அது போல இந்த இண்டஸ்ட்ரியில் நிறைய ஹாரஸ்மென்ட் இருக்கு அதையெல்லாம் தாண்டி தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் விலாசினி உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications