பவதாரிணியின் கடைசி ஆசை இதுதான்! இது உலகம் முழுவதும் பரவும்.. உருக்கமாக பேசிய இளையராஜா
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி கடந்த ஆண்டு உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவருடைய பிறந்த நாளில் திதியும் வந்திருப்பதால் நேற்று அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. அதில் இளையராஜா தன்னுடைய மகள் பவதாரிணியின் இறுதி ஆசையை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.
பொதுவாக பெற்றோரின் கண் முன்பு குழந்தைகளின் உயிர் போகும் வலி யாருக்கும் வரக்கூடாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வலியும் வேதனையும் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதிலும் வீட்டிற்கு ஒரே மகளாக இருந்த பவதாரிணியின் திடீர் மரணம் அவருடைய குடும்பத்தினரை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுபோல அவருடைய ரசிகர்களும் பவதாரிணியை மிஸ் பண்ணி வருகிறார்கள். கடந்த ஆண்டு பவதாரிணி தன்னுடைய 47வது வயதில் புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு நாளில் அவருடைய தந்தையான இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது இளையராஜா பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரியும் நடத்தப்பட்டது.
விழாவில் பவதாரணி குறித்த பல நிகழ்வுகளை எல்லோரும் பகிர்ந்து இருந்தனர். அப்போது பேசிய இளையராஜா பவதாரிணி பாப்பாவின் பிறந்தநாள் இன்று. அவரின் இந்த பிறந்த நாளிலேயே அவரின் திதி நாளும் அமைந்திருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கான நல்ல உதாரணம் இது.

சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க வேண்டும் என்பது பவதாரிணியின் கடைசி ஆசை. 15 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா. இனி உலகில் எந்த மூலையில் இருந்தும் சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம். இந்த குழுவில் சேர விரும்புபவர்கள் எங்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இது பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும் என்று உருக்கமாக பேசியிருந்தார். தன்னுடைய மகளின் ஆசையை இறந்த பிறகு நிறைவேற்ற இளையராஜா எடுத்திருக்கும் முயற்சி பற்றி நேற்று அறிவித்திருந்தார். அதே நேரத்தில் இளையராஜா தன் மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் அவருடைய இறப்பின் வலியை வெளியே அதிகமாக காட்டவில்லை என்றாலும் நேற்று அவருடைய முகத்தில் வேதனை அளவுக்கு அதிகமாக தெரிந்தது என்று அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications