"வியாபாரி" இளையராஜா? படம் எடுக்க ஜோவிகா பட்ட பாடு.. வனிதா விஜயகுமார் யாருன்னு தெரியாதாமா: பிரபலம்
சென்னை: தன்னுடைய படத்தின் புரமோஷனில் ஜோவிகா பேசும்போது, "என்னுடைய சொந்த உழைப்பில், நான் சம்பாதித்த பணத்தில் எடுத்த படம் இது, இந்த வயதில், என்னை ஒரு படத்தின் தயாரிப்பாளராக்கியது விஜய் டிவி தான். அவர்களின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால், நான் பிக் பாஸ் வீட்டில் அத்தனை நாள் இருந்து இருக்கவே முடியாது, தயவுசெய்து எங்களுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க" என்றெல்லாம் கூறியிருந்தார்... எனினும் வனிதா இன்று மீடியா முன்பு கலங்கி பேசியிருந்தது இணையத்தில் விவாதத்தை கிளப்பிவிட்டு வருகிறது.
கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்' படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை தன்னுடைய படத்துக்கு வனிதா பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த பாடலை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, வனிதா விஜயகுமார், தன்னுடைய படத்திற்கு மைக்கேல் மதன காமராஜன் படத்திலிருந்து சிவராத்திரி பாடலை எடுத்து பயன்படுத்தியிருந்தார். இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கிறது. இதற்கு வனிதா விஜயகுமார் கண்கலங்கி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
நிலைகுலைந்த வனிதா
இந்த படம் எடுக்கும்போதே, இளையராஜா அங்கிளிடம் அனுமதி கேட்டதற்கு சரியென்று சொன்னார். இப்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?
சின்ன வீட்டிலிருந்தே இளையராஜா வீட்டிலிருந்துதான் வளர்ந்தேன்.. என்னை மகாலட்சுமின்னுதான் ஜீவா ஆண்ட்டி கூப்பிடுவாங்க.. நகையை பீரோவில் கொண்டுபோய் வை-ன்னு என்கிட்டதான் சொல்வாங்க.. நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவள், இதுக்குமேல சொல்ல முடியாது" என்று அழுது கூறியிருந்தார்.
ராயல்ட்டி பணம் எஸ்பிபி
இளையராஜாவை பொறுத்தவரை, அவருக்கு உலகம் முழுவதிலிருந்து, ராயல்ட்டி பணம் விழுந்தபடியே உள்ளது.. மிகப்பெரிய லெஜண்ட்டாக இளையராஜா உள்ளார்.. ஞானி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.. ஆனால், ராயல்ட்டியை யாரிடம் கேட்க வேண்டும் என்று உள்ளது..
குட் பேட் அக்லி என்பது மிகப்பெரிய பட்ஜெட் படம்.. மிகப்பெரிய வியாபாரம் ஆகியிருக்கிற படத்துக்கு , இளையராஜா பாடலை பயன்படுத்தியதும், இதற்கு இளையராஜா உரிமம் கேட்டதும், கங்கைஅமரன் கோபப்பட்டு பேசியதும் எல்லாமே நியாயம்தான்.
ஆனால் லோ-பட்ஜெட் படத்தை எடுத்துள்ள வனிதாவிடம் ராயல்ட்டியா? இளையராஜா சகோதரர்களுக்கு ஆரம்ப காலங்களில் கச்சேரிகளில் வாய்ப்பு வாங்கி தந்தது எஸ்பிபிதான்.. அப்படிப்பட்ட எஸ்பிபியே மேடைகளில் தன்னுடைய பாடலை பாட தடை போட்டவர் இளையராஜா.. இது எஸ்பிபியை நிலைகுலைய வைத்துவிட்டது. 70களிலிருந்து தொடர்ந்த நட்பை, பணம் காசு முறித்துவிட்டதே என்று கதிகலங்கிவிட்டார்.
புரமோஷன் - ஜோவிகா
இப்படித்தான் வனிதாவும் கலங்கியிருக்கிறார். சொந்தமாக படத்தை எடுத்து, ஒவ்வொரு புரமோஷனுக்கும் வனிதாவும், ஜோவிகாவும் எங்கெங்கோ சென்றார்கள்.. ஆனாலும், படம் எந்த அளவுக்கு ஓடுமோ தெரியாது.. மொத்த சேமிப்பையும் கொட்டி பணத்தை எடுத்துள்ளார்கள்..
வியாபாரி இளையராஜா
இளையராஜா நினைத்திருந்தால், மைக்கேல் மதன காமராஜன் படத்திலுள்ள அனைத்து பாட்டையுமே வனிதாவிடம் தந்து பயன்படுத்தி கொள்ள சொல்லியிருக்கலாம்..
அதுதான் கலைஞனின் உச்சத்தன்மை.. ஆனால், வியாபாரி என்பதைதான் மீண்டும் நிரூபித்துள்ளார் இளையராஜா..
சினிமாவில் உள்ள பெண்ணின் மீது, அதுவும் இவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தும்கூட, இந்த சமூகம் காழ்ப்புணர்ச்சியை சர்ச சாதாரணமாக பெண்ணின் மீது தெளித்துவிடுகிறது.. அதையும் மீறி, எவனுக்கும் அசர மாட்டேன் என்று சொன்னாலும், மீடியா முன்பு கலங்கி போய் நிற்கும் அளவுக்கு சொந்த தயாரிப்பு கொண்டுவந்து விட்டுவிட்டது.
இவ்வளவு கறார் தேவையா
இளையராஜா வீட்டுக்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவர் என்று அப்படி கலங்கிப்போய் உச்சத்தில் சொன்னதுதான்.. இதன் அர்த்தம் தெரியவில்லை, அதை வனிதா தான் சொல்ல வேண்டும்...
ஆனால், தனக்கு தெரிந்து வளர்ந்த பெண்ணாய், அவருடைய தந்தையுடன் பழகியும்கூட, நோட்டீஸ் விட்டிருக்காமல், அதை கடந்து போயிருக்கலாம்.. இந்த படம் ஓடி, வனிதா என்ன கோடீஸ்வரியா ஆகிடபோறாங்க? எப்படியிருந்தாலும், வனிதா விஷயத்தில் இளையராஜா இவ்வளவு கறார் காட்டியிருக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நந்தகுமார்
ஆனால், இயக்குனர் நந்தகுமார் பேசும்போது, "இளையராஜா கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.. தன்னை வைத்து, ஒருவர் பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார்களா? அல்லது தன்னை வைத்து ஒருவர் வளர்ந்து கொள்ள முற்படுகிறார் என்றால், அதை விட்டுக்கொடுத்துவிட்டு, அந்த விஷயத்தை விட்டே நகர்ந்துவிட வேண்டும்.. எனவே தன்னுடைய தகுதியிலிருந்து கீழே இறங்கி போய், பிறரிடம் கேள்வி எழுப்பக்கூடாது.
வனிதா இந்த பாடலை எடுத்ததே திட்டமிட்டு செய்ததுதான்.. அப்போதுதான் இதை பொதுவெளியில் விவாதிப்பார்கள் என்று வனிதாவுக்கு தெரியும். ரஹ்மான், பாடலை பயன்படுத்தினால் அவர் கேள்வி கேட்க மாட்டார். இதுவே இளையராஜா பாடலை பயன்படுத்தினால், நிச்சயம் இளையராஜா கோபப்படுவார் என்று தெரிந்தே, இப்படி செய்துள்ளதால், இளையராஜா ஐயா, வனிதாவை இக்னோர் செய்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications