ஓபன் சேலஞ்ச் போட்ட இளையராஜா..சாதித்த சுந்தர்ராஜன்..ஹிட்டடித்த விஜயகாந்த்..யாருக்கும் தெரியாத ரகசியம்
சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜா பல வருடங்களுக்கு முன்பு போட்ட சவாலை எதிர்கொள்ள முடியாமல் பல இயக்குனர்கள் ஓடிப்போன சமயத்தில் அந்த சவாலை இயக்குனர் சுந்தர்ராஜன் சாதித்து கட்டி இருக்கிறார்.
தான் இசையமைத்த ஏழு பாடல்கள் ஒரே திரைப்படத்தில் வரவேண்டும் அதற்கான கதையை யாராவது தயார் செய்ய முடியுமா? என்று இளையராஜா கேட்டிருந்தாராம்.

அதற்கு தன்னால் முடியும் என்று இயக்குனர் சுந்தர்ராஜன் அந்த ஏழு பாடல்களையும் வைத்து ஒரு படத்தை ரெடி செய்து அது யாரும் எதிர்பார்க்காத அளவில் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. அந்தக் கதை தெரியுமா? அதை விரிவாக பார்க்கலாம்.
திரை உலகில் பல ஆண்டுகளாக இசை ஜாம்பவானாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய பாடல்கள் கிடைத்தாலே அந்த திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்று தயாரிப்பாளர்களும் இணை இயக்குனர்களும் கருதிய காலம் உண்டு.
அதனாலேயே பலர் இளையராஜா இசையமைத்தாலே போதும் சாதாரண கதை கூட வெற்றி பெற்று விடும் என்று இவருடைய கால் ஷீட்டுக்காக காத்திருப்பார்கள். குறிப்பாக 80ஸ் 90களில் தமிழ் சினிமாவில் இவருடைய ராஜ்ஜியம் தான் கொடி கட்டி ஆட்சி செய்தது. அந்த நேரத்தில் ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்கள் எனின் அந்த படத்திற்கு எத்தனை பாடல்கள் வேண்டும் என்ன மாதிரி பாடல்கள் வேண்டும் என இயக்குனர் சொல்வாராம்.

இளையராஜா அதற்கு தகுந்தது போல டியூன் போட்டு காட்டுவாராம். அது இயக்குனருக்கு பிடித்து விட்டால் அது பாடலாக மாறிவிடுமாம். சில படங்களுக்கு இளையராஜா போடுவது தான் டியூன் ஆகவும் இருந்திருக்கிறது. அவர் என்ன டியூன் போட்டாலும் அதை ஓகே செய்த இயக்குனர்களும் பலபேர் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இளையராஜா ஒரே நாளில் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறாராம்.
அந்த மாதிரி தான் ஒருமுறை இளையராஜா 7 ட்யூன்களை போட்டு இருக்கிறார். அந்த ஏழு பாடல்களும் ஒரே படத்தில் வர வேண்டும் என்று அந்த பாடல்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு சம்மதிக்கிற இயக்குனர்களுக்கு நான் இந்த டியூன்களை தருகிறேன் என்று ஓபனாக இளையராஜா கூறி இருக்கிறார். இந்த தகவல் திரைத்துறையில் அனைவருக்கும் பரவியிருக்கிறது.

அப்போ இது எப்படி லாஜிக்காக இருக்கும். இது செட்டாகாது, பாட்டை வச்சு கதை எழுதணுமா? என்றெல்லாம் பலரும் யோசித்துக்கொண்டு அதற்கு முன் வராமல் இருந்த நேரத்தில் ஆர். சுந்தர்ராஜன் மட்டும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு நான் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த மாதிரி தான் ஏழு டியூன்களுக்கும் ஏற்றது போல ஒரு கதையை அவரே உருவாக்கி இருக்கிறார். அந்த கதை வேற எதுவும் இல்லை. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான "வைதேகி காத்திருந்தாள்" திரைப்படம் தான். இந்த திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சில்வர் ஜூப்ளி படமாகவும் வெற்றி பெற்று இருக்கிறது.
அதற்குப் பிறகுதான் பலரும் இந்த முயற்சியை பாராட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய பெரும்பாலான படங்களில் இசை அமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சுந்தர்ராஜன் தற்போது சின்ன திரையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்று சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவும் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications