பாண்டியன் ஸ்டோர் 2வில் நடிக்கும் இளையராஜாவின் மருமகள்.. இப்படி ஒரு கேரக்டரா? ரகசியம் லீக் ஆனது
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பல புது முகங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான ஹாசினி என்ற விஷாலினி இந்த சீரியலில் மகள் கேரக்டரில் நடிக்கிறாராம்.
அதோடு முதல் பாகத்துக்கு இப்போது உள்ள பாகத்திற்கும் உள்ள தொடர்பு மற்றும் வேற்றுமை குறித்து பேட்டி ஒன்றில் ஹாசினி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்குரிய சூட்டிங் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்த நிலையில் தற்போது இந்த சீரியலுக்கான ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
அதில் சீரியல் நடிகையான ஹாசினி பாண்டியனின் மூத்த மகள் கேரக்டரில் நடிப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் இதற்கு முன்பு நான் ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சீரியல் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
அந்த சீரியல் முடியும்போது பலர் உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதோடு அடுத்து என்ன சீரியல் பண்ண போறீங்க என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 ப்ரோமோ வந்ததும் பலர் சந்தோஷப்பட்டு எனக்கு வாழ்த்தி மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் எனக்கு வாய்ப்பு வந்ததுமே நான் பயங்கரமாக ஹேப்பி ஆகி விட்டேன். அவர்கள் சொன்னதுமே நான் பண்றேன் என்று சொன்னேன். அதற்கு காரணம் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பு தான் அதுபோல என் அவர்கள் என்னிடம் கேட்டபோது நான் என்ன கேரக்டர் என்று கூட கேட்கவில்லை.
பிறகு தான் என்னுடைய கேரக்டர் குறித்து சொன்னார்கள். அது தெரிந்ததும் நான் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த நிலையில் சிலர் நீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் ஒன்றின் இருக்கும் கயல் கேரக்டர் தான் பண்றீங்களா? என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தொடரில் பாண்டியனுக்கு மூன்று பசங்க, ரெண்டு பொண்ணுங்க நான் மூத்த பொண்ணா நடிக்கிறேன். அதுபோல இந்த சீரியலில் நிறைய நடிகர்கள் நடிக்கிறாங்க. அதெல்லாம் யாரு என்பதை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி தான் குடும்ப தலைவர் இப்போது பாண்டியன் குடும்ப தலைவராக இருக்கிறார். இதுபோல இந்த சீரியலுக்கான கதை காரைக்குடி பக்கம் நடக்கிற மாதிரி இருப்பதால் என்னென்ன வார்த்தைகளை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று நான் அதற்காக கவனம் செலுத்தி வருகிறேன்.
எனக்கான கேரக்டருக்கு நான் டப்பிங் பேசவில்லை செளமியா என்பவர் தான் பேசுகிறார் என்று பல விஷயங்களை ஹாசினி பகிர்ந்திருக்கிறார். ஹாசினி இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கும் இளையராஜாவின் மருமகள் என்பதும் ஹாசினிக்கு நடிப்பு மட்டுமல்லாமல் பாடலும் அருமையாக பாடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தபோது அது கிடைக்காததால் தான் இவர் நடிகையாக மாறி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications