பவதா இறந்துட்டானு இப்படி பண்ணனுமா? என்னால முடியாது.. காட்டமாக பேசிய இளையராஜாவின் மருமகள்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் காலமானார். அப்போது பவதாரணி குறித்த நினைவுகளை பகிர்ந்து இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையான விலாசினி ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் தன்னுடைய சூட்டில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் விலாசினியை ஒரு சில நெட்டிசன்கள் கலாய்த்து கமாண்ட் போட்டிருக்கின்றனர். அது குறித்து விலாசினி கோபமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
அதில் தன்னை டிராமா குயின் என்று பவதாரிணி இறந்து போனதும் தான் நடித்து வீடியோ போட்டதாக சொல்லி இருப்பவர்களுக்கு சில அட்வைஸ்களையும் நடிகை விலாசினி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது அது பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் காலமானார். அவரின் இறப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் சினிமா மற்றும் இசை உலகிற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பவதாரிணியின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகிற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பவதாரணியின் நினைவுகள் பற்றியும் அவருடைய இறப்பின் வலி குறித்தும் அவருடைய உறவினர்கள், பிரபலங்கள் என பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தனர். அப்போது இளையராஜாவின் மருமகளும் உறவினருமான சீரியல் நடிகை விலாசினி பவதாரிணி இறந்த செய்தி கேட்டு சில மணி நேரங்களில் தன்னுடைய சகோதரியை இனி பார்க்கவே முடியாது என்று இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டு இருந்தார்.
அதுபோல அந்த வீடியோவில் பவதாரிணி குறித்த நினைவுகளையும் பகிர்ந்து இருந்தார். பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் புற்றுநோய் பாதிக்கப்பட்டது தெரியாமல் இருந்து விட்டது. தான் கடைசியாக அவரை கொலுவில் தான் பார்த்தேன். அப்போது உடல் மெலிந்து போய் இருந்தார். எங்க அம்மா கூட அவரிடம் விசாரிக்கும் போது பவதாரணி நான் டயட்டில் இருக்கிறேன் என்று சமாளித்து விட்டார் என்று மேலும் சில தகவல்களையும் அந்த வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கிறார். அதில் எல்லோருக்கும் வணக்கம் என்று அந்த வீடியோவில் ஆரம்பத்தில் பேசியிருக்கிறார். பிறகு இந்த வீடியோ யாருக்காக என்றால் நான் பவதாரிணி இறந்த சில மணி நேரத்தில் வீடியோ போட்டதும் சிலர் நீங்க நல்லா டிராமா குயின். எப்படி எல்லாம் அழுதுட்டு வீடியோ போட்டீங்க என்று கமெண்ட் செய்தவர்களுக்காக தான் இந்த பதிவு.
எங்கள் குடும்பத்தில் பவதாரணியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அதுக்காக அழுது புலம்பி சோசியல் மீடியாவில் வீடியோ போடணும் என்று அவசியம் இல்லை. ஏன்னா அது எங்களோட குடும்ப பிரச்சனை. இன்னொரு விஷயம் நான் மீடியாவில் என்டர்டைன்மென்ட் பண்ற இடத்தில் இருக்கிறேன். ஆடனும், பாடனும் நடிக்கணும் சூட்டிங் இடத்துல யாரு இறந்துட்டாலும் அந்த பீலிங்க்ஸை ஒரு பக்கம் வச்சிட்டு இந்த சீன்ல நடிக்கணும். இதை புரிஞ்சிக்காதவங்க புரிஞ்சுக்கோங்க என்று காட்டமாக விலாசினி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications