பவதாரணி இப்படி விட்டுட்டு போவானு யாரும் நினைக்கல! அப்பா சொன்ன வார்த்தை.. முதல் முறை பேசிய கார்த்திக்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 4 நிகழ்ச்சியில் நினைத்தாலே இனிக்கும் ரவுண்டு நடைபெற்ற வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜாவின் மகன் கார்த்திகேயன் பங்கு பெற்றிருக்கிறார். அவர் மறைந்த தன்னுடைய தங்கை பவதாரணி குறித்து பேசியது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி கடந்த ஜனவரி மாதத்தில் புற்றுநோய் காரணமாக காலமானார். சில வருடங்களாகவே அவருக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு அந்த நேரத்திற்கு தகுந்த மருந்து மாத்திரைகளை எடுத்து வந்த பவதாரணி ஒரு கட்டத்தில் தன்னால் வயிறு வலியை தாங்கிக் கொள்ள முடியாத நிலை வந்த போது மருத்துவ மனையில் அதற்கான சோதனைகள் செய்த போது அவர் புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் இருந்தது தெரியவந்தது.

இதை பவதாரணிக்கு அந்த நேரத்தில் குடும்பத்தினர் சொல்லவில்லை என்றாலும் அவருடைய நிலை குடும்பத்தினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இசை அமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பல முகத்தை கொண்ட இளையராஜாவிற்கு இந்த செய்தி பெரும் இடியாக இருந்திருக்கிறது. பலருடைய சோகங்களில் வலியை குறைப்பதற்கு இளையராஜாவின் பாடல்கள் அருமருந்தாக இருந்து வரும் நிலையில் இளையராஜாவிற்கு பெரிய வேதனை அவருடைய மகளால் கிடைத்திருக்கிறது.
பிறகு எத்தனையோ ஹாஸ்பிடலில் பவதாரணிக்கு சிகிச்சை கொடுத்து பார்த்தும் பலன் இல்லாமல் இலங்கையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது காலமானார். இது இளையராஜா குடும்பத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பவதாரணி இளையராஜாவை போலவே பல பாடல்களை பாடி இருக்கிறார். அதுபோல இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய மறைவு இப்போதும் அவருடைய குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் பவதாரணியின் அண்ணனான கார்த்திகேயன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பவதாரணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை போட்டியாளர் ஒருவர் பாட அதைக் கேட்டு கண் கலங்கிய கார்த்திக்கு பவ்தாவின் குரலைப் போலவே இவருடைய குரலும் இருக்கிறது.
அப்பா பவ்தாவிடம் ஒன்றே ஒன்று தான் சொல்லுவார். உன்னுடைய வாய்ஸ் ரொம்ப ஸ்பெஷல் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்த வாய்ஸ் யாருக்குமே கிடையாது.. இவ்வளவு சீக்கிரமா பவ்தா எங்களை விட்டுட்டு போவான்னு எதிர்பார்க்கல, என்று கண்கலங்கியபடி சொல்ல பிறகு அந்த நிகழ்ச்சியில் பவதாரணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications