பவதாரிணி பிறந்த போது நடந்த சம்பவம்.. கடைசி வரை எங்க ஆசை நடக்கல! கண் கலங்கிய கார்த்திக் ராஜா
சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த வருடத்தில் காலமானார். அவருடைய பிறந்த நாளில் அவருடைய முதல் திதி வந்ததால் நேற்று இசை நிகழ்ச்சி நடத்தி அஞ்சலி செலுத்தி இருந்தனர். அப்போது தன்னுடைய சகோதரி பவதாரிணி குறித்து இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கண்கலங்க பேசியிருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சோகத்தில் இருக்கும் பலரும் மன மாற்றத்திற்காக தேடும் பாடல்களுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த வருடத்தில் உடல்நல குறைபாட்டால் காலமானார்.

இந்த நிலையில் அவருடைய திதி நாளான நேற்று நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் இளையராஜா அவருடைய தம்பி கங்கை அமரன் கார்த்திக் ராஜா பிரபு என்று இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அதில் இளையராஜாவின் மகனும் பவதாரிணியின் சகோதரருமான யுவன் சங்கர் ராஜா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
யுவன் சங்கர் ராஜா வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார். அதுபோல இந்த நிகழ்வில் பவதாரிணி பாடிய பல பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது. அதில் இளையராஜா தன்னுடைய மகள் பற்றி உருக்கமாக பேசியிருந்தார்.

அதுபோல பவதாரிணியின் சகோதரரான கார்த்திக் ராஜா கண்கலங்க பேசியிருந்தார். அதில் பவதாரிணி லீலாவதி ஹாஸ்பிடலில் தான் பிறந்தாள். அவள் பிறந்த உடன் அவளை முதல் முதலாக கொஞ்சிய அண்ணன் நான். எப்போதும் யுவன் கூட தான் பவதாரிணி கொஞ்சி விளையாடிட்டு இருப்பா. அவள் இலங்கையில் காலமாகி தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும்போது இங்கிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் பவதாரிணியை அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். அந்த அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை.

தமிழ் மக்கள் மிகவும் தன்மையானவர்கள். இப்போது பவதாரிணியின் பாடல்களை நிகழ்ச்சியில் இசை கச்சேரி ஆக நடத்துகிறோம். அவளுக்கு இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ரொம்ப பிடிக்கும். மேடையில் ரொம்ப பதட்டத்துடன் இருப்பாள், பவதாரிணிக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. எனக்கு இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால் அம்மா பவதாரிணிக்கு நல்ல குரல் இருக்கு என்று அவளை பாட வச்சாங்க என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அதுபோல பவதாரணி குழந்தைகளை வைத்து ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாராம். ஆனால் அது கடைசி வரை நடக்காமல் போய்விட்டதால் பவதாரிணியின் ஆசையை நிறைவேற்ற இளையராஜாவின் குடும்பத்தினர் முடிவு எடுத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம் என்று இளையராஜா குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications