ஏலே.. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.. கல்லா கட்டுகிறார் "கலர்ஸ்" அண்ணாச்சி!
சென்னை: திருநெல்வேலி பாஷயை மிக அருமையாக பேசி, மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் இமான் அண்ணாச்சி.இவர் கலக்கப் போவது யாரு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்.
அடுத்து மக்கள் டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவர் மீது தூண்டில் போட்டு இழுத்த சன் டிவி அதே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை அளித்தது.
குறைந்த அளவு மக்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன இமான் அண்ணாச்சி, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஃபிகர் ஆனார். நிகழ்சசிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

குட்டி சுட்டீஸ்
பிறகு அண்ணாச்சிக்கு கோட் சூட் என்று போட்டு அழகு பார்த்து, குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை தந்தது. அதை சில வருடங்களுக்குப் பிறகு நிறுத்திய சன் டிவி, சீனியர் சுட்டீஸ்னு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பையும் தந்தது. அனைத்து பணிகளையும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாவும், சிறப்பாகவும் செய்து வந்தார் அண்ணாச்சி.

காணலை அண்ணாச்சியை
திடீர்னு பார்த்தால் சன் டிவியில் அவர் வழங்கிக் கொண்டு இருந்த சீனியர் சுட்டீஸ் நிகழ்சசியும் நிறுத்தப்பட்டு, அண்ணாச்சியை சன் டிவியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பார்க்கவே முடியலை. சரி, திரைப்படங்களில் பிசியாக இருப்பார் போலுமென்று நினைத்தால்...

கலர்ஸ் டிவியில் அண்ணாச்சி
கலர்ஸ் தமிழ் டிவியில் அண்ணாச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி செய்துள்ளார். குழந்தைகள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் சொல்லும் தங்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்ப்பு சொல்லும் நிகழ்ச்சியாக இது இருந்தது.ரொம்ப ரொம்ப தமாஷாக போனது இந்த நிகழ்ச்சி.

வழங்குவது அண்ணாச்சி
அண்ணாச்சிக்கு என்று தனி ரசிகர்கள் சின்னத் திரையில் உண்டு. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றும் சோடை போனதில்லை. அவ்வப்போது சினிமாவிலும் நடிக்கும் அண்ணாச்சிக்கு ஏற்றபடியான நல்ல கதாபாத்திரம் பெரிய திரையில் இன்னும் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், சின்னத் திரையில் அவருக்கான வாய்ப்புக்கள் சரியாக அமைந்து வருகின்றன.

கல்லாப் பெட்டி
அதை சரியாகவும் பயன்படுத்தி நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சியைத் தருகிறார் இமான் அண்ணாச்சி என்று சொல்லலாம். இப்போது கலர்ஸ் தமிழ் டிவியில் தினமும் மாலை 6 மணிக்கு கல்லாப் பெட்டி என்று ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சி தினமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது.
இதன் முதல் எபிசோடில் கல்லூரி பெண்களிடம் தனது படத்தை வரைய சொல்லி வேடிக்கை பார்த்து அவர்களை கலாய்த்து வருகிறார் அண்ணாச்சி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications