எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்! அடுத்த ஜென்மத்திலும்..! இந்திரஜாவின் அன்னையர் தின வாழ்த்து!
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி தனது குழந்தையின் புகைப்படத்தையும் தனது தாயின் புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனையே பிழிந்து, உனை நான் எடுத்தேன்,
நான் தான் நீ வேறில்லை என கவிதை நடையில் இந்திரஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தாயானதும் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறேன். என்னை தாயாக்கி இத்தகைய அர்த்தம் கொடுத்ததற்கு நட்சத்திரனுக்கு நன்றி. இந்த நட்சத்திரனை எனக்கு பரிசாக கொடுத்த மாமாவுக்கு (கார்த்திக்) நன்றி.
என் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் இல்லாத ஒரு நாளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நான் அம்மாவானதுக்கு அப்புறம்தான் உன்னோட வலிகள் எனக்கு புரியுது. எல்லாவற்றிற்கு நன்றியும் அன்பும் அம்மா. அடுத்த ஜென்மம்னு இருந்தா உனக்கே மகளாய் பிறப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நட்சத்திரன் பிறந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம் முதல் தனது தாய் தனது மகனை கொஞ்சும் புகைப்படங்கள் வரை இந்திரஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். இவரது மிமிக்ரியால் பிரபலமடைந்தார். விஜயகாந்த் போல் பாடி லேங்குவேஜில் அசத்துவார்.
அப்படியே படிப்படியாக ரியாலிட்டி ஷோக்கள், சினிமா என தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறார். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ஒரே ஒரு மகளாக இந்திரஜா உள்ளார். அவர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார்.

மூவருமே நன்றாக டான்ஸ் ஆடுவார்கள். இவர்கள் மூவரும் இணைந்தும் சில ஷோக்களில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்திரஜா தனது மாமா தொடர்வோம் கார்த்திக்கையே திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தை விமரிசையாக நடத்தினார் ரோபோ சங்கர். இந்திரஜாவின் திருமண பிளவுஸின் விலையே ரூ 40 ஆயிரமாம். அந்த பிளவுஸில் தனது பெயரையும் தனது மாமா கார்த்திக் பெயரையும் சேர்த்து எம்ப்ராய்டரி வொர்க் செய்திருந்தார்.
அது போல் இந்திரஜா கர்ப்பமான விஷயத்தையும் சமூகவலைதளங்களில் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்திரஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டது. தனது குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டின் பிரதியை தனது வளைகாப்பு பிளவுஸின் முதுகு புறத்தில் வைத்திருந்தார்.

பின்னர் பிளவுஸில் சிறிய அளவில் ஃபீடிங் பாட்டில்களையும் டிசைனுக்காக பொருத்தியிருந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் உணர்ச்சிவயப்பட்டு அனைவருமே அழுதனர்.
இதையடுத்து குழந்தை பிறந்ததும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து தனது பேரனுடன் ரோபோ சங்கர் குடும்பம் ஆசி பெற்றனர். அப்போது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்ட போது அவர் நட்சத்திரன் என பெயர் வைத்தார்.

இதையடுத்து இந்திரஜாவுக்கு முருகர் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தனது மகன் நட்சத்திரனுக்கு முருகர் வேடமிட்டு போட்டோஷூட்களை நடத்தினார். பின்னர் சில நாட்கள் கழித்து குழந்தைக்கு மாடர்ன் உடை அணிந்தும் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.
அண்மையில் குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனதையும் ரோபோ சங்கர் குடும்பத்தினர் கொண்டாடினர். இந்திரஜாவின் திருமணம் தொடங்கி மகனின் 100ஆவது நாட்கள் வரை இவர்கள் போடும் வீடியோவுக்கும் புகைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications