இன்ஸ்டா “ராகுல் டிக்கி” மரணம்.. குடிப்பழக்கம், அம்மாவோடு சண்டை.. 2வது மனைவி சொன்ன அதிர்ச்சி விஷயம்
சென்னை: இன்ஸ்டா பிரபலமான ராகுல் டிக்கி நேற்று முன்தினம் இரவு சாலை விபத்தில் காலமானதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து அவருடைய இரண்டாவது மனைவி செய்தியாளர்களிடம் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அளித்திருக்கிறார்.
டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதன் மூலம் பல வீடியோக்கள் வெளியிட்டு ராகுல் டிக்கி பிரபலமானார். டிக் டாக் பிரபலத்தை வைத்து இன்ஸ்டாகிராம், youtube பிலும் வீடியோக்கள் போட தொடங்கினார். அவருக்கு 8 லட்சத்திற்கு மேற்பட்ட பாலோவர்ஸ் இருந்தனர். எப்போதும் காமெடியான வீடியோக்கள் போட்டு பலரையும் சிரிக்க வைப்பவர். ஆனால் அவருடைய வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்திருக்கிறது.

நேற்று முன்தினம் சாலை விபத்தில் ராகுல் டிக்கி இறந்ததாக செய்திகள் வெளியானது. இது அவருடைய பாலவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனக்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக ராகுல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என்று பலரும் அவருக்காக பீல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ராகுல் டிக்கியின் இரண்டாவது மனைவி செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ராகுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஆறு மாதத்தில் விவாகரத்து ஆகியிருக்கிறது. எனக்கு ராகுல் இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் பழக்கமானார் முதலில் நான் அவருடைய பாலோவராக இருந்தேன். பிறகு அவரிடம் பேச தொடங்கினேன்.
அதற்குப் பிறகு எங்களுக்குள் காதல் ஏற்பட்டதும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. முதல் ஒரு வருடம் மாமியார் வீட்டில் தான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தோம். அப்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். அந்த நேரத்தில் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது.
அதற்கு காரணம் திருமணத்திற்கு முன்பு ராகுல் வேலைக்கு போயிட்டு அலுப்பாக இருக்கிறது என்று ராகுல் குடிப்பதற்கு அவருடைய அம்மா அவரை எதுவும் சொல்லாமல் விட்டு இருக்கிறார். அதனால் ராகுல் வீட்டிலேயே இருந்து குடிக்க தொடங்கி விட்டார். இதனால் எங்களுக்குள் சண்டை வரத் தொடங்கியது. அப்போது எங்கள் இருவருக்கும் சண்டை நடக்கும் போது அவருடைய அம்மா தலையிட்டதால் பிரச்சனை பெரிதாகியது.

அதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தனிக்குடித்தனம் போக முடிவெடுத்தோம். ராகுலுக்கு கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. அவர் கருப்பசாமி தான் கும்பிடுவார். கருப்பனிடம் அருள் கேட்ட போது தனி குடித்தனம் போக சொல்லி அவர் சொன்னதால் நாங்களும் தனி குடித்தணும் இருந்தோம். எங்கள் இருவருக்கும் சில நாட்களாகவே சண்டை வந்தது.
அப்போது கூட அவர் திருந்தி விடுவார் என்று நான் நினைத்தேன். நான் இதுவரைக்கும் எங்க அம்மா வீட்டில் தங்கியது கிடையாது. சம்பவம் நடந்த அன்று நான் அம்மா வீட்டில் இருக்கிறேன் என்று ராகுலிடம் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் காலையில் ராகுல் கோவிலுக்கு மாலை போடுறேன் என்று சொல்லி இருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது.
ராகுல் இறந்த பிறகு அவருடைய உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ததால் அதை எரித்து விடலாம் என்று நானும் என்னுடைய கணவர் அதாவது ராகுலின் தந்தையும் சொன்னோம். ஆனால் என்னுடைய அத்தை முடியாது என்று அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். அப்படி செய்யும் போது என்னால் அவருடைய உடலை தொட்டுக் கூட கும்பிட முடியாமல் என்னை தள்ளி வைத்து என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். நான் அவருடைய மனைவி என்று வெளியே சொல்ல முடியாத அளவிற்கு செய்துவிட்டார் என்று தன்னுடைய மாமியார் மீதும் ராகுல் டிக்கியின் மனைவி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications