உடலுறவு வைத்துவிட்டு ஏமாற்றி விட்டார் என சொன்ன பெண்.. முத்துக்குமரனுக்கு போலீஸ் அனுப்பிய லெட்டர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமாரனுக்கும், இன்ஸ்டா பிரபலமான வாஹதாக்கும் உள்ள பிரச்சனை இப்போது மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, தன்னுடன் உடலுறவு வைத்து விட்டு ஏமாற்றி விட்டதாக வாஹதா தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதாக கூறி முத்துக்குமரன் ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் தொடர்பாக தற்போது காவல்துறை அனுப்பி இருக்கும் கடிதம் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்ஸ்ட்டா பிரபலம் தற்கொலை முயற்சி
வாஹதா தற்கொலை முயற்சி செய்து வெளியிட்ட வீடியோக்கள் மூலமாகத்தான் இந்த விவகாரம் முதலில் வெளியே வந்தது. அப்போது முத்துக்குமார் தான் என்னிடம் காதலை சொன்னார், திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி கொடுத்தார், அதை நம்பி அவருடன் நான் ஒன்றாக இருந்துவிட்டேன். ஆனால் அடுத்த நாள் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று புரிந்து விட்டது, அவர் இப்போது என்னிடம் பேசவில்லை அதனால் நான் தற்கொலை முயற்சி செய்து கொள்ளப் போகிறேன் என்று ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.
நல்வாய்ப்பாக அவரை நண்பர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அதற்குப் பிறகு அவர் உடல் நலம் தேறி ஹாஸ்பிடல் விட்டு வந்த பிறகும் தொடர்ச்சியாக முத்துக்குமரன் தனக்கு அனுப்பியதாக சில ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். நான் முத்துக்குமரன் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேன், காரணம் அவரை நான் காதலித்தேன்.. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். ஆனால் அதற்காக நான் அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேன் என்றெல்லாம் வீடியோக்களில் பேசிக் கொண்டிருக்கிறார்.
காவல்துறையின் அட்வைஸ்
இதற்கிடையே தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வாஹதா வீடியோக்கள் வெளியிடுவதாக கூறி வாஹிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் புகார் கொடுத்திருந்தார். அதோடு தன்னை பற்றி அவர் பேசிய வீடியோக்களை நீக்கவும், அதன் பின்னணியில் விசாரணை நடத்தவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில் இப்போது காவல்துறை சார்பில் முத்துக்குமாரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் "முத்துக்குமரன் புகாரில் வழக்கு பதிவு முகாந்திரம் இல்லை. புகாரில் அவதூறு பரப்பும் கருத்துக்கள் மட்டுமே உள்ளது. அதனால் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம்" என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தீபாவளி வீடியோ
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தீபாவளி அன்று முத்துக்குமரன் தனக்கு நடக்கும் பிரச்சனைகளுக்காக தான் விரதம் இருப்பதால் தன்னால் இந்த முறையை நான் வெஜ் சாப்பிட முடியவில்லை என்று பேசி இருந்தார். அதோடு யாரையும் நம்ப வேண்டாம் என்பதுபோல அந்த வீடியோவில் முத்துக்குமரன் பேசியிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு முத்துக்குமரன் இந்த வீடியோ வெளியிட்டதும் வைரல் ஆனது. அதை பார்த்த வாஹதா முத்துக்குமரன் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் அதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று மீண்டும் வீடியோக்கள் விட தொடங்கி விட்டார். இந்த பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் இப்போது காவல்துறையினர் முத்துக்குமரனுக்கு அனுப்பிய கடிதமும் அதிகமாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications
