பிரபல பாடகி கைதாகிறாரா? கொஞ்ச நஞ்ச பேச்சா? தனுஷ், ஆண்ட்ரியா, பாலச்சந்தர்.. ஒருத்தரை விடல.. பாருங்க
சென்னை: பிரபலங்கள் மீது பாடகி சுசித்ரா , தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், நடிகை ஒருவர் சுசித்ரா மீது போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சுசித்ரா என்றாலே அது சர்ச்சை என்றாகிவிட்டது.. எப்போது பேட்டி தந்தாலும், சர்ச்சையான வகையில் கருத்து சொல்லி சிக்குபவர்களில் சுசித்ராவும் ஒருவராக இருந்து வருகிறார்.

அதனால் சுசித்ரா தரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படும்.. சுச்சி லீக்ஸ் முதல் இப்படியான பரபரப்புகள் தொடர்ந்து வருகிறது. இதற்கு பிறகு சுசித்ரா ஒதுங்கியிருந்தார்.. அவர் எங்கே இருக்கிறார் என்றுகூட பலருக்கும் தெரியாத நிலையில், மீண்டும் கோடம்பாக்கத்துக்குள் என்ட்ரி ஆகியுள்ளார்.
நடிகர்கள்: வந்ததுமே தனுஷ், ஆண்ட்ரியா, ரீமா கல்லிங்கல் என ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்.. இவர் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளும் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகின்றன..
"நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.. அந்த பார்ட்டியில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு போதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. போலீஸ் ரெய்டும் நடந்தது.. அதையெல்லாம யாருமே கேட்கலியே" என்று கூறியிருந்தார்.
போதை பார்ட்டி: இதற்கு நடிகை ரீமா கல்லிங்கல், உடனடியாக பதிலை தந்திருந்தார்.. "2017ல் சுசித்ரா பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசினார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியும்.. என்னுடைய வீட்டில் போதை பார்ட்டி நடந்து, நான் கைதானதாக சொல்லியிருக்கிறார். அப்படி எதுவுமே நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது சிறப்பு புலனாய்வு பிரிவில் புகார் தந்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், சுசித்ரா மீது கொச்சி போலீசிலும் ரீமா கல்லிங்கல் ஆன்லைன் மூலம் புகார் தந்திருக்கிறாராம்.. ஒருவேளை, இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், நடிகை சுசித்ரா விரைவில் கைதாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது..
பாலசந்தர்: கடந்த வாரம், மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்தும் சுசித்ரா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தமிழ் திரையுலகினரை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.. இதற்கே சுசித்ராவுக்கு நிறைய பேர் கண்டனங்களையும் தெரிவித்தார்கள்... அதேபோல, மணிமேகலை - பிரியங்கா மேட்டரிலும் உள்ளே நுழைந்து சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டிருந்தார் சுசித்ரா..
தமிழ் திரையுலகம் தொடர்ந்து சுசித்ரா விஷயத்தில் பொறுமை காத்தாலும், மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் விடவில்லை.. போதை விருந்து நடத்தி, பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாக கூறி சுசித்ரா கூறியிருந்ததற்கு, இன்று புகார் மேல் புகார்களை தெரிவித்துள்ளார்..
விசாரணை ஆன்லைன் மூலம் ரீமா கல்லிங்கல் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. எனவே, பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications