Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவி போறாரா கோபிநாத்? இது மறைமுக சாதிவெறி.. இப்ப ஒரு நடிகரிடம் பயப்படும் அதிமுக, திமுக: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானாவில் கடந்த வாரம் நிகழ்ச்சி கண்டிக்கத்தக்கது.. மேட்டுக்குடியில் இருப்பவர்கள்தான் ஜாதியை தங்களுக்கான அங்கீகாரமாக நினைக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்கள் அவர்களுக்கு இதெல்லாம் இழிவாகத்தான் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களுக்கு அரசியலை கற்றுத்தராத திராவிட கட்சிகளை தன்னுடைய பேட்டியில் சாடியிருக்கிறார்.

கடந்த வாரம், கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட விவாதம் பெரும் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது. நகரத்து மாப்பிள்ளையை மணமுடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் மற்றும் ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த கிராமத்து அம்மாக்கள் கலந்து கொண்டு விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டியலின பெண் ஒருவர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கோபிநாத் கிராமத்து அம்மாக்களை பதில் சொல்ல முடியாதபடி திணறடித்திருந்தார்.

Television Sun TV Gopinath

எனினும், கோபிநாத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி இணையத்தில் விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருக்கலாம்.. அல்லது சில வரிகளை எடிட் செய்திருக்கலாம், இந்த நிகழ்ச்சியை கோபிநாத் வேறுவிதமாக கையாண்டிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

சன் டிவி கோபிநாத்

இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "விஜய் டிவி கோபிநாத் சன் டிவிக்கு போக போகிறார் என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், நீயா நானா நிகழ்ச்சியை சன்டிவி நடத்த மாட்டார்கள்.. ஏனென்றால் அது திமுகவின் அக்மார்க் டிவி..

விஜய் டிவியில் பார்ப்பனர் ஆதிக்கம், குறிப்பாக வட இந்தியர்களின் ஆதிக்கம் உள்ளது.. அதனால், அந்த சேனல ஆர்எஸ்எஸ்-ன் பிம்பமாக, பிஜேபியின் பிம்பமாக உள்ளது. கோபிநாத் போன்றோர் சன் டிவிக்கு போய்விட்டால், திமுகவை ஆதரிப்பதை தவிர அவருக்கு வேற வழியில்லை.

பட்டியல் என் வார்த்தை

அதேபோல, நீயா நானாவில் கடந்த வாரம் நிகழ்ச்சி கண்டிக்கத்தக்கது.. மேட்டுக்குடியில் இருப்பவர்கள்தான் ஜாதியை தங்களுக்கான அங்கீகாரமாக நினைக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்கள் அவர்களுக்கு இதெல்லாம் இழிவாகத்தான் உள்ளது..

கடந்த வாரம் நீயா, நானா நிகழ்ச்சியின்போது "பட்டியல்" என்ற வார்த்தை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அங்கு யாரையாவது வெளியில் தெரியுமா? யாருடைய குற்றம் அது? இந்து மதத்தின் குற்றம்? யாரைக்கேட்டு SC என்று பிரித்தாய்?

கோபிநாத்துக்கு சாதிவெறி.. இதனை மறைமுகமான சாதிவெறி என்று சொல்ல வேண்டும்.. இங்கு சமூக கட்டமைப்பில் விஷத்தை இனிப்பு தடவி தருகிறார்கள்.. கல்வி என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. அது மாநில மக்களின் உரிமை.. ஆனால், டெல்லியிலிருந்து முடிவு செய்கிறார்கள். எமர்ஜென்சி நடந்தபோது டெல்லி எடுத்து செல்லப்பட்டுவிட்டது.

வேங்கைவயல் விவகாரம்

இங்குள்ள தமிழ் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை டெல்லியிலுள்ள உ.பி. அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். என்றால், திராவிட ஆட்சியை கலைத்துவிடலாம். ஆட்சியே தேவையில்லை.. மக்களுக்கு உரிமை வழங்காத நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கிறீர்கள்? எதற்காக அமைச்சராக இருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை ஆண்டு காலம் வேங்கைவயல் விவகாரத்தை பாதுகாத்து கொண்டு இருப்பீர்கள்?

அம்மக்களுக்கு மலத்தை கலந்து தந்து குடிக்க சொன்னால், அந்த சாதிவெறியர்களை சுட்டுத் தள்ள வேண்டாமா? இதற்காக திராவிட இயக்கங்கள், அதிமுக, திமுக ஆட்சிக்கு வந்து, வந்து, எதிர்ப்பதற்கும், ஒழிப்பதற்கும் முடியாமல், எஸ்சி தொகுதியில் 200 ரூபாய் தந்து ஓட்டு போட சொல்றாங்க.. பிசி தொகுதியில் 500 ரூபாய் தந்து ஓட்டுப்போட சொல்கிறார்கள்.

கம்யூனிசமும், கல்வியும்

பொதுவாக ஆணும் பெண்ணும் விரும்பினால் திருமணம் செய்ய வேண்டும். ஆனால், இந்த தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதி, மேல் சாதி இருவரும் திருமணம் செய்தால், அவர்களின் அப்பாக்களே கொலை செய்கிறார்கள். கேரளாவில் எங்காவது ஆணவ கொலையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. கம்யூனிசமும், கல்வியும் அம்மக்களை மனிதனாக வைத்திருக்கிறது. அம்மக்களை பக்குவப்படுத்தி வைத்துள்ளது. சாதி, மத சண்டையே கேரளாவில் கிடையாது.

இங்கே தமிழ்நாட்டில் 60 வருடங்கள் ஆண்ட திராவிட இயக்கங்கள், விஜய் என்ற சினிமாக்காரர் பின்னாடி போய் நிறுத்தி வைத்திருக்கிறது. எங்களுக்கு ரிசர்வேஷனும் வேணாம், கத்தரிக்காயும் வேணாம்.. எஸ்சியும் வேணாம், தலித்தும் வேணாம்.. எங்களுக்கு சமூக அந்தஸ்து மட்டும் கிடைத்தால் போதும் என்று மக்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+