என்னது செம்பருத்தி சீரியல் முடிய போகுதா!!??.. மொதல்ல அதைப் பண்ணுங்கப்பா..!
சென்னை : ஹீரோவை தான் மாத்தினதும், மாத்தினாங்க திடீரென இப்போ சீரியல் முடிக்கப் போகிறார்கள். இப்படிப் பரவி வரும் செய்தியால் பல ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். ஏற்கனவே ஆதி இல்லாமல் சோகமாகியிருந்தவர்கள் இவர்கள்.
நல்லா போய்க்கொண்டிருக்கிற சீரியலை திடீரென மாற்றிவிட்டால் ரசிகர்களின் மனநிலை என்ன ஆகுமென்று யோசிக்கவே மாட்டாங்களா என ரசிகர்கள் கொதித்தெழுகின்றனர். கார்த்திக் ராஜ் இருந்தவரை இந்த சீரியலுக்கு மிகப் பெரிய மவுசு இருந்தது.
ஆனால் கார்த்திக்கை நீக்கிய பிறகு சீரியல் மதிப்பிழந்து விட்டது. இந்த நிலையில்தான் சீரியல் முடியப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

மூணு வருஷம் ஆச்சு
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக் கொண்டே போனது. அதற்கு கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடிக்கும் நடிகர்களும் ஒருபுறம் தான். நடிகர்களை பிடித்ததால் தான் தொடர்ந்து இந்த சீரியலை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் திடீரென்று முடியப்போகிறது என்று இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் சில செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதைப்பற்றி சீரியல் டீம் இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இப்ப தான் கதை சூடு பிடிக்குது
செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானா நேற்று இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதைப் பார்த்து பல பேர் அவரிடம் இந்த சீரியல் முடியப் போகிறதா??என்று கேள்விகளை அம்பு போல எய்து வருகின்றனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால் சீரியலில் திருப்புமுனையை வைத்தும் அடுத்ததாக அதில் நடக்கும் வரப்போகும் எபிசோடுகளை வைத்தும் தான் ரசிகர்கள் இந்த அளவுக்கு கருத்துக்களை பரப்ப ஆரம்பித்து விட்டனர். காரணம் காட்சிகள் அதற்கேற்ப மாறி வருகின்றன.

நந்தினி உயிரோடு தான் இருக்காரா??
எதிர்பாராத கதைகளத்தோடு இப்பதான் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதில் அகிலாண்டேஸ்வரி நந்தினியை துப்பாக்கியால் சுட்ட பிறகு அவர் இறந்து விட்டாரா அல்லது உயிரோடு தான் இருக்கிறாரா என்று ஒரு பெரிய பிரச்சனையே போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்தினியின் உடலை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னவாக இருக்கும் என்று வனஜா, ஆதி, பார்வதி என எல்லோரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பார்வதியாக நடிக்கும் ஷபானாவின் கையில் ரிப்போர்ட் கிடைத்து விடுகிறது. அதில் நந்தினியின் இதயத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்திருப்பதாக ரிப்போர்ட்டில் இருக்கிறது. ஆனால் இதைக்கேட்டதும் அகிலாண்டேஸ்வரி ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

இதயமே மாறி இருக்கு
அதில் எல்லோருக்கும் இருப்பது போல நந்தினிக்கு இதயம் இடது பக்கம் இருக்கவில்லை, வலது பக்கம் தான் இருக்கிறது. நான் நந்தினியை சுட்டது இடது பக்கம் தான் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டதும் அனைவரும் ஷாக்கில் இருக்கும்போது, உண்மையில் நந்தினி இறந்தாரா??என்பதே பெரிய குழப்பத்தில் இருக்கும்போது, இந்த சீரியல் திடீரென்று முடியப்போகிறது என்று செய்திகள் பரவி வருகிறது. இந்த செம்பருத்தி சீரியலின் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பலர் ஃபேன்ஸ் பேஜ்களை வைத்திருக்கின்றனர். அந்த மாதிரி தான் தற்போது செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்களில் இந்த செய்திகள் பரவி வருகிறது.

அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா
ஏற்கனவே இந்த சீரியலில் ஐஸ்வர்யா இதுவரைக்கும் பாசிட்டிவ் கேரக்டரில் இருந்தார். ஆனால் இப்போது பார்வதியை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியாவது தனக்கு தான் இந்த வீட்டின் பதவியையும் வீட்டின் அனைத்து உரிமைகளும் மரியாதையும் கிடைக்க வேண்டுமென்று வனஜாவுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் நெகட்டிவ் கேரக்டர் ஆக மாறிவிட்டார். இந்நிலையில் இந்த சீரியல் முடிவடைய வாய்ப்பில்லை என்று சீரியலின் ரசிகர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர். அனைவரும் திருந்தி வந்தால் தானே சீரியல் முடிவடையும், அப்படி வருவதற்கு இன்னும் ஒரு சில வருடங்கள் போய்விடும் என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications