Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க.. "தாடி கார்த்தி" விலகப் போறாரா.. ஒரே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பருத்தி சீரியலில் கதாநாயகன் கார்த்தி அந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்னும் செய்தியும் உண்மையா பொய்யா என்பதற்கு ஒரு ரசிகரின் கேள்விகளுக்கு படக்குழுவினர்கள் பதில் அளித்து இருப்பது தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

அந்த செய்தியில் இப்ப வரைக்கும் கார்த்தி தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் .இதில் இருப்பதற்கும் விளக்குவதற்கும் முடிவு எடுப்பது அவர் மட்டும்தான் என்று ரசிகர்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் ஜீ தமிழில் முதலிடத்தில் டிஆர்பி யில் வந்து அதுவரைக்கும் இல்லாத அளவில் வரலாற்றையே மாற்றி அமைத்தது .

3 வருட கால சீரியல்

3 வருட கால சீரியல்

கடந்த மூன்று வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பி வந்தாலும் இந்த சீரியலுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறனர். அதிலும் கார்த்திக் சபானாவுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்துகொண்டிருக்கிறது. அதிலும் கார்த்திக்கு பெண்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்துகொண்டிருக்கிறது.

வகை வகையான கலாய்

வகை வகையான கலாய்

இவரைப்பற்றி சீரியலில் முதலில் நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் படை திரண்டு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியலில் இவரை தவிர வேறு யாரையும் நடிக்க வைத்தாலும் இந்த அளவிற்கு செட்டாகாது என்றுதான் இந்த ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று தற்போது இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற ஒரு அறிவிப்பு வந்ததும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

 ஜனனி போயாச்சு

ஜனனி போயாச்சு

ஏற்கனவே இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்துக்கொண்டிருந்த ஜனனி திடீரென்று இந்த சீரியலில் விட்டு தூக்கிவிட்டார்கள். அதுபோல இவரையும் தூக்கி விடுவார்கள் என்றுதான் பல செய்திகள் பரவி வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்று ஒரு ரசிகரின் கேள்விக்கு சீரியல் டீமில் இருந்து ஒருவர் பதிலளித்திருக்கிறார் . அவர்கள் பேசிய ஆடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்திக்குமா

கார்த்திக்குமா

அதில் அவர் இது வந்து கார்த்திக்கை தூங்குவது என்பது சாதாரணமானது அல்ல அவர் ஒரு பெரிய நடிகர் அதனால் அவர் நினைத்தால் மட்டும் தான் இந்த சீரியலில் இருந்து விலக முடியும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் லட்சுமி கேரக்டரில் நடிப்பவர் சொல்லி தான் இவரை இந்த சீரியலில் இருந்து தூக்க போகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதெல்லாம் பொய்ங்க

அதெல்லாம் பொய்ங்க

அதுலாம் சுத்தமான பொய். லட்சுமி சின்ன நடிகர். ஆனால் கார்த்திக் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஒரு பெரிய நடிகர். அதனால் அவர் நினைத்தால் மட்டும் தான் இந்த சீரியலில் இருந்து விலக முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார் .இந்த வீடியோ தற்போது கார்த்திக்கின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான ஆறுதலான வார்த்தைகள் ஆகத்தான் இருந்துவருகிறது.

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

பல இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் செம்பருத்தி சீரியலில் சீன்கள் தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .அந்த அளவுக்கு இளைஞர்களை பிடித்து வைத்திருக்கும் ஜோடிகளாக கார்த்திக் ஷபானா ஜோடி வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களை பிரித்தால் இந்த சீரியலில் கதையே இல்லாமல் போய்விடும் என்பதுதான் பல ரசிகர்களின் வேண்டுகோளாகும் கருத்தாகவும் இருந்து வருகிறது .

டேட் கொடுக்க முடியலை

டேட் கொடுக்க முடியலை

அதுதான் சீரியல் டீம் பதிலை கூறியிருக்கிறது. ரசிகர்களுக்காக தான் இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது அவர்களின் எதிர்ப்பை மீறி நாங்கள் ஒன்றும் செயல்பட மாட்டோம். அதுமட்டுமல்லாமல் கார்த்திக் தான் சூட்டிங்கிற்கு டேட் கொடுக்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது பிஸியாக இருப்பதால் இதற்கு தேவையான டைம் அவரிடம் இல்லை ஆனாலும் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று அவர் இன்னமும் சொல்லவில்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

தந்திரக்கார நரி

தந்திரக்கார நரி

அதுமட்டுமல்லாமல் செம்பருத்தி டீமுக்கு உள்ளே ஒரு நரித்தந்திரம் பார்க்கும் ஒருவர் இருக்கிறார் .அது யார் என்று தான் இன்னமும் தெரியவில்லை. அவர் தான் அங்கு நடக்கும் விஷயங்களை சின்ன விஷயங்களையும் கூட பெரியதாக வெளியே லீக்காகி கொண்டிருக்கிறார் என்று வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார் .ரசிகர்கள் இந்த அளவிற்கு தெரிந்திருப்பது அவரால் தான் நடந்து கொண்டிருக்கிறது.

யாரு அந்த நரி

யாரு அந்த நரி

அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் நடப்பதை உடனுக்குடன் ரசிகர்களுக்கு அவர்தான் தெரியப்படுத்தி கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் இந்த சீரியலில் எடிட்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரையும் தூக்கி விட்டு இருக்கீங்களா மே அது அவர் கார்த்திக்கின் பிரண்ட் என்பதால்தான் தூக்கி விட்டார்கள் என்று ஒரு கருத்தும் பரவி வருகிறது அது உண்மையா என்று கேட்ட கேள்விக்குத்தான் அவர் அந்த மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+