பிரபல நடிகர் "ரகுவரன்” இப்படிப்பட்டவரா? கமல்ஹாசனா இப்படி செய்தார்? வெளியான அதிர்ச்சி ரகசியம்
சென்னை: நடிகர் ரகுவரன் வில்லனாகவும் கதாநாயகனாகவும் மிரட்டி இருந்தாலும் அவருடைய திடீர் மரணம் பலரையும் வேதனையில் ஆழ்த்தி விட்டது.
இப்போதும் யாரடி நீ மோகினி திரைப்படத்தை பார்க்கும் போது இவருடைய ரசிகர்கள் கண்கலங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு அந்த திரைப்படமே அவருக்கு கடைசி திரைப்படமாக அமைந்திருந்தது.
அந்த திரைப்படத்தில் இறந்து போவது போன்று நடித்து, நிஜத்திலும் இறந்து போன ரகுவரன் நடிப்பில் "ராட்சசன்" என்று தான் கூற வேண்டும்.
எங்கே தன்னுடன் இணைந்து நடித்தால் நடிப்பில் தன்னை மிஞ்சி விடுவாரோ என்று கமலஹாசனே எண்ணி கடைசி வரை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்காத ஒரு நடிகர் ரகுவரன்.
வில்லன் நடிகர் என்றால் கட்டு மஸ்தான உடல்,முறுக்கு மீசை, மிரட்டும் பார்வை, கரடு முரடான குரல் போன்றவையே தமிழ் சினிமாவின் வில்லன்களுக்கான தகுதி என்று இருந்த சமயத்தில் அப்படியே இந்த தகுதிகளுக்கு எதிர்மறையாக ஒல்லியான தேகம், மீசை இல்லா முகம், ஆங்கிலோ இந்தியன் போன்ற குரல், இவற்றை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக உயர்ந்த ரகுவரனை பற்றி பிரபல சினிமா விமர்சகர் பல தகவல்களை கூறியுள்ள வீடியோ பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த ரகுவரன் அந்த பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த நண்பர்களுடன் இணைந்து 'ஏழாவது கண்' என்ற படத்தை எடுத்து அதில் கதாநாயகனாக அறிமுகமானார். படம் வெற்றி பெறாவிட்டாலும் ஒரு தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் அவருடைய முதல் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு பல சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தாலும் ரகுவரன் பெரிய அளவில் சினிமா ரசிகர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. அந்த காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே டிவி சேனலாக இருந்தபோது மெகா சீரியல்கள் வருவதற்கு முன்பு 'வீக்லி சீரியல்' என்று நாடகங்களை எடுத்து 13 வாரங்கள் ஒளிபரப்பி வந்திருக்கிறார்கள்.
அப்போது ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரு சீரியலில் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 'ஒரு மனிதனின் கதை' என்ற நாடகத்தில் ரகுவரன் நடித்துள்ளார்.
குடியினால் பாதிக்கப்படும் குடும்பத்தின் நிலை குறித்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நாடகத்தில் குடிகார கணவனாக ரகுவரன் நடித்து வந்துள்ளார்.தூர்தர்ஷன் மட்டுமே டிவி சேனலாக இருந்த காரணத்தால் டிவியில் ஒளிபரப்பான இந்த நாடகத்தை அனைவரும் கட்டாயமாக பார்க்க நேர்ந்தது.
அப்பொழுதுதான் அந்த நாடகத்தில் குடிகார கணவனாக தத்ரூபமாக நடித்திருந்த ரகுவரன் நடிப்பு பற்றிய பேச்சு பட்டி தொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்தது. யாருடா.. இவன்..!! அப்படியே அசல் குடிகாரன மாதிரியே நடிச்சிருக்கானே... என்று வியந்து பேசிக் கொண்டனர்.அந்த நாடகத்தின் மூலம் பிரபலமான ரகுவரன் அதே ஏவிஎம் தயாரிப்பில் 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் விசுவின் மகனாக நடிப்பில் முத்திரை பதித்திருப்பார்.
அந்தப் படத்தில் தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்திய பின்பு இயக்குனர் பாசில் இயக்கத்தில் 'பூவிழி வாசலிலே'என்ற படத்தில் வில்லன் நடிகராக களம் இறங்கினார்.அந்தப் படத்தில் அந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பண்ண முடியாது என்று சொல்லும் அளவிற்கு, கையில் ஒரு ஸ்டிக்குடன் செம ஸ்டைலிஷ் வில்லனாக பட்டையை கிளப்பி இருப்பார்.
படத்தின் நாயகன் சத்யராஜுக்கு ஈக்குவலாக ரகுவரனின் வில்லன் கதாபாத்திரமும் அந்த நேரத்தில் பேசப்பட்டது.வில்லன் நடிகராக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரகுவரன் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அடுத்தடுத்த படங்களில் பெரும்பாலும் மிஸ்டர் பாரத், சிவா, ஊர் காவலன், மனிதன் போன்ற படங்களில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து முழு நேர வில்லன் நடிகராக மாறினார்.
இடையிடையே அவ்வப்போது சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார் இருந்தாலும் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது தனக்கு இணையான வில்லன் படத்தில் இருந்தால்தான் இந்த கதைக்கு நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினியே ரகுவரனை வில்லனாக தேர்வு செய்யும் அளவிற்கு வில்லன் நடிகராகவே தமிழ் சினிமா ரசிகர்களோடு ஒன்றிப்போய்விட்டார்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications