திடீரென சோசியல் மீடியாவில் இருந்து விலகும் பிரியங்கா நல்கரி.. உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை "பிரியங்கா நல்கரி" தான், இன்ஸ்டாகிராமில் இருந்து விலகப்போவதாக திடீரென்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு சில வார்த்தைகளை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை பிரியங்கா நல்கிரி, "ஜீ தமிழ்" சேனலில் ஒளிபரப்பாகி வரும் "நளதமயந்தி" என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தான் இணையத்தில் இனி எந்த சோசியல் மீடியா அக்கவுண்டில் இருக்கப் போவதில்லை என்று இவர் முடிவு எடுத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் கிடைத்திருந்த நிலையில் இவருக்கு அதிகமான வரவேற்பும் கிடைத்துவிட்டது.
முதல் சீரியலிலே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் இவரே கதாநாயகியாக மக்கள் மனதில் பதிந்திருந்தார். அதை தொடர்ந்து அந்த சீரியல் முடிவடைந்ததும் அடுத்ததாக இவர் என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அப்போது இவர் ஜீ தமிழில், "சீதாராமன்" என்று சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அந்த சீரியல் தொடங்கி சில மாதங்களில் சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார். அந்த நேரத்தில் ஏற்கனவே இவர் காதலித்து வந்த நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு ராகுல் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று பேட்டியில் பிரியங்கா நல்கரி கூறியிருந்தார்.
ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த பிரியங்கா நல்கரி ரசிகர் ஒருவர் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? உங்கள் கணவரை விட்டு பிரிந்து விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில்களை கொடுத்திருந்தார்.
அதுபோல தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார். இப்படியான நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நான் நாளை மதியம் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போகிறேன். எனக்காக ஒரு சிலர் ப்ரோமோஷனுக்காக சாரீஸ், ஜுவல்ஸ் என சிலவற்றை அனுப்பி இருக்கிறீர்கள். அவர்கள் எனக்கு டிஎம் செய்யுங்கள். அதை நான் ரிட்டன் பண்ணி விடுவேன். அதுபோல நான் இனி நெகட்டிவ் விஷயத்தில் இருந்து தள்ளி இருக்கப் போகிறேன்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக அடிக்கடி ரசிகர்களிடம் லைவில் பேசிக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி ஏன் இந்த முடிவெடுத்தார் என்று ரசிகர்கள் அதிகமானோர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் அவர் அவருடைய கணவரோடு ஏற்பட்ட பிரச்சனையால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications