திருமணத்திற்கு பிறகு சினிமா.. முதல் படமே பெயரை மாற்றியது! "சௌகார்” ஜானகிக்கு பின்னால் இப்படி ஒரு கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு ஒரு நடிகையின் பெயர் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்திருப்பது சாதாரண விஷயம். சோசியல் மீடியாவின் பயன்பாடு அந்த அளவிற்கு இருக்கிறது. ஆனால் ஒரு திரைப்படம் ஒருவருடைய பெயரையே மாற்றி, அந்த பெயர்தான் காலம் கடந்து அவருடைய அடையாளமாக மாறுவது என்பது சினிமாவில் அரிதாக நடக்கும் விஷயம். அப்படி ஒரு தனித்துவமான கதையை கொண்டவர்தான் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி.

94 வயதான சௌகார் ஜானகி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய நீண்ட திரை பயணத்தையும், அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான கதைகளையும் பலரும் மீண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Sowcar Janaki

சௌகார் ஜானகியின் ஆரம்ப காலம்

இன்றைய காலகட்டத்தில் திருமணம், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் தாண்டி ஒருவர் தனது கனவை நோக்கி பயணிப்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் பல வருஷங்களுக்கு முன்பு குறிப்பாக 1950 களுக்கு முன்பாக திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் சினிமாவுக்குள் நுழைந்து கதாநாயகியை மாறுவது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் அது சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

அவர் தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் நடிப்பு உலகில் அடி எடுத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 18 தானாம். குடும்ப வாழ்க்கையை தொடங்கிய பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் பெண் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு வருவது மட்டுமல்லாமல், கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறியது சௌகார் ஜானகியின் பயணத்தில் மிக முக்கியமான அம்சம்.

சௌகார் ஜானகி பெயர் காரணம்

அவரது முதல் படம் தெலுங்கில் உருவான Shavukaru. 1950ல் வெளியான இந்த படத்தில் அப்போது வளர்ந்து வந்த நடிகராக இருந்த என் டி இராமராவுடன் சௌகார் ஜானகி நடித்தார். இதுதான் அவருடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கம். அந்த முதல் படம் அவருக்கு சினிமா வாய்ப்பு மட்டும் கொடுக்கவில்லை அவருடைய பெயரையே மாற்றிவிட்டது. படத்தின் பெயரான சௌகார் என்பது பிறகு பின்னர் ஜானகியின் பெயருக்கு முன்னாள் வந்து சேர்ந்தது. ரசிகர்களும் திரையுலகினரும் அவரை சௌகார் ஜானகி என்று அழைக்க ஆரம்பித்தனர்.

சௌகார் என்ற பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்ததாக சௌகார் ஜானகி தனது பழைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்த காலத்தில் ஏற்கனவே விஎன் ஜானகி பிரபலமாக இருந்தார். குறிப்பாக எம்ஜிஆர் உடன் தொடர்புடைய ஜானகி அப்போது கதாநாயகியாக பிரபலமானவர். அதனால் இரண்டு ஜானகிகளையும் குழப்ப வேண்டாம் என்று அவருடைய பெயருக்கு முன்னால் சௌகார் என்று அடையாளம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

முதல் படத்திற்கு பிறகு ஜானகிக்கு திரும்பி பார்க்க வேண்டிய நிலையே ஏற்படவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பலமொழிகளின் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் வளையாபதி மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். காலம் மாற மாற அவருடைய கேரக்டரும் மாறின.

ஒரு காலத்தில் கதாநாயகியாக சினிமாவில் நடித்த அவர் பிறகு அம்மா, மனைவி, மாமியார், பாட்டி என பல்வேறு கேரக்டரில் நடித்தார். 2002 ஆம் ஆண்டு அவருடைய நீண்ட கால கலைப் பணியை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் அவருக்கு வழங்கியது. இன்று அவர் 94-வது வயதில் காலமாகி இருந்தாலும் அவருடைய நடிப்பு அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+