எதிர்நீச்சல் சீரியலில் இனி குணசேகரனுக்கு நிலைமை இது தானா? நிஜ குடும்பத்தினர் உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உண்மையை இந்த சீரியல் உருவாக காரணமாக இருந்த நிஜ குடும்பம் உடைத்திருக்கின்றனர்.

அதாவது எதிர்நீச்சல் சீரியல் கதை நிஜ குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சில விஷயங்களை பற்றி அவர்கள் பிரபல செய்தி சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

 Is this whats going to happen in ethirneechal serial?

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் சில வருடங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீரியல்களை விடவும் இந்த சீரியலின் கதைத்துவம் மற்றும் நடிகர்களின் நடிப்பு அவர்களின் வசனம் போன்றவை ரசிகர்களுக்கு கவர்ந்திருக்கும் வகையில் தற்போது இந்த சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருக்கிறது.

அதாவது இந்த சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து கடந்த வாரம் காலமானார். அவருடைய திடீர் மறைவால் ரசிகர்கள் தொடர்ச்சியாக இந்த சீரியலை எங்களால் பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே எபிசோட்டில் குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்த கிளிப்ஸ் நேற்று எபிசோடில் ஒளிபரப்பானது இது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் இந்த சீரியல் உருவாவதற்கு காரணமாக இருந்த சுரண்டை பிரியா பிரதர்ஸ் முதல் முறையாக சில youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அந்த வீடியோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றது. அதில் எதிர்நீச்சல் சீரியல் உருவாவதற்கு முக்கிய காரணமே எங்களுடைய குடும்ப கதை தான் என்று அவர்கள் பேட்டியில் பேசி இருக்கின்றனர். ஏற்கனவே இதுகுறித்து இயக்குனர் திருச்செல்வம் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

அத்தோடு தான் அந்த நிஜ குடும்பத்தை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன் என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த சுரண்டை பிரியா பிரதர்ஸ் குடும்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் வருவது போன்று தான் நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அதில் அண்ணன் பேச்சை தான் மிச்சம் இருக்க மூன்று பேரும் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். ஆரம்ப காலகட்டத்தில் இவர்களுடைய அப்பா இறந்த பிறகு அண்ணன் தான் பல வேலைகளை செய்து கஷ்டப்பட்டு முன்னேறி இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தாராம்.

ஆனால் பல வருடங்களுக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் இப்போது வரும் 40% பிரச்சனை போலவே இவர்களுடைய வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த வீட்டில் நான்காவது தம்பியின் பெயரில் ஆரம்பத்தில் அதிகமான சொத்துகளை தன்னுடைய அண்ணன் வாங்கி கொடுத்து விட்டாராம். ஆனால் இப்போது அவர் பலருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு அண்ணனை எதிர்த்து தனியாக போய்விட்டார் என்று இந்த வீட்டின் மூன்றாவது தம்பி பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதுபோல மொத்த சொத்துக்களையும் நான்கு பங்காக பிரிக்க வேண்டும் என்று மூத்த அண்ணன் சொல்ல அதற்கு நான்காவது தம்பி சரிவரவில்லை. அதனால் வீட்டில் சின்ன பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசி இருந்தனர். அதுபோல பேட்டியின் இடையில் மூத்த அண்ணன் நான் இப்போது எல்லோரோடும் சேர்ந்து கிடையாது. என்னுடைய மகன் வீட்டில் தான் இருக்கிறேன் தனியாக பிரிந்து விட்டேன் என்று சொல்லி இருந்தார்.

இதனால் இது போல தான் இனி எதிர்நீச்சல் சீரியலில் கதை நகருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தை முதல்முறையாக தர்ஷன் சந்தித்திருக்கிறார். அதுபோல இன்று வெளியான ப்ரோமோவில் நான் அப்பா பணத்தில் காலேஜ் பீஸ் கட்ட மாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.

அதுபோல ஈஸ்வரிக்கு அதிகமாக சப்போட்டும் செய்து கொண்டிருக்கிறார். இதுபோலத்தான் இனி கதை பயணிக்க போகிறதா? அல்லது தர்ஷன் மனம் மாறி தந்தை பக்கம் சேர்ந்து கொள்ள அதற்குப் பிறகு குணசேகரன் தன்னுடைய மகனோடு வேறு வீட்டில் தனியாக தங்கப் போகிறாரா? என்று கேள்விகள் வருகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+