Jai Hanuman Serial: அண்ணலும் நோக்கினான்.. அவளும்... ஐயோ இங்கு நோக்கவில்லையே!
சென்னை: அவதார புருஷர் ஸ்ரீராமன், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்து காண்பித்தவர். அவரின் வாழ்வில் சோதனைகளும், வேதனைகளும் சூழ்ந்து வந்தன.
அன்னை சீதா தேவி, அனுமன் மட்டுமே அவருக்கு கிடைத்த வரம். இவர்களில் சீதாவை மிஞ்சும் அளவுக்கு ராமன் மீது பக்தி கொண்ட அனுமன் இருவரும் தன் நெஞ்சில் குடிகொண்டு இருப்பதை தனது நெஞ்சை பிளந்து காண்பித்த காட்சி, பக்திக்கு உதாரணம்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று காதலித்து மணந்தவர்கள் போல, அன்யோன்யம் தம்பதியானதில் ராமன் சீதாராமன் என்று அழைக்கும் அளவுக்கு பதிவிரதையாக வாழ்ந்து காண்பித்த சீதை இன்று அக்னி பரீட்சைக்கு தயாராகி இருக்கிறாளே...

மாண்டான் ராவணன்
சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் யுத்தத்தில் தீவிர சிவ பக்தரான ராவணனை, ஸ்ரீ ராமன் அம்பு எய்து கொன்று விடுகிறார். ராவணன் இறக்கும் தருவாயில் கிடக்க, என்னதான் ராவணன் சீதையை கடத்தி இருந்தாலும், சிறந்த ஆட்சியாளர். தம்பி லட்சுமணா நீயும் நாளை அரசாள போகிறாய். அவரிடம் அரசாளும் திறனை கேட்டு கற்றுக்கொள் என்று கூறுகிறாரே ராமர்.

சொல்ல மாட்டேன் கேட்கமாட்டேன்
பெண்ணாசை கொண்டு நம் தாயார் அண்ணியை கடத்தி சென்ற ராவணனிடம் நான் அரச தர்மத்தை கற்பதா மாட்டேன் அணணா என்று லட்சுமணன் சொல்ல, ராவணன் கூட, தலையைத் திருப்பிக் கொண்டு, நானும் சொல்லித் தர மாட்டேன் என்பது போல் பாவனை காண்பிக்கிறார். ராமன் ராவணனின் , சிவ பக்தி, இலங்கையை அவர் கட்டிக் காத்து இருக்கும் திறன் என்று அத்தனை பெருமைகளையும் எடுத்துக் கூற.ராவணன் வியந்து சம்மதிக்கிறார்.லட்சுமணனும் பாடம் கேட்கிறார். இந்த காட்சி அருமையாக இருந்தது.

நோக்கவில்லை சீதையை
சீதையை மீட்டு கொண்டுவந்த பின்னர்,சுவாமி என்று சீதா ராமனை நோக்கிய போதும், ராமன் சீதையை நோக்கவில்லை. பேசவில்லை. புரிந்து கொண்ட சீதை புரிகிறது சுவாமி, நான் இன்னும் புனிதமானவளாக தங்களின் சீதா தேவியாக மட்டுமே இருக்கிறேன் என்று சீதை கூறியபோதும் நோக்கவில்லை.

சீதைக்கு புரிந்தது
சீதைக்கு ராமனின் மனத்தில் ஓட்டம் புரிகிறது. உலகில் புனிதமானது அக்னி மட்டுமே.அந்த அக்னியில் இறங்கி என்னை நிரூபிக்கிறேன். தம்பி லட்சுமணா அக்னியை மூட்டுங்கள் என்று கட்டளை இடுகிறார். துடிதுடித்து போகிறார் அனுமன். பிரபு தாயின் முடிவை மாற்றுங்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கண்ணீர் விட்டு கெஞ்சுகிறார். லட்சுமணனும் அண்ணா தடுத்து நிறுத்துங்கள் என்று கூறுகிறார்.

ராஜா இப்படித்தான்
லட்சுமணா ஒரு நாட்டின் அரசர் எப்படி வாழ வேண்டுமோ அப்படித்தான் மக்களுக்கு உதாரணமாக வாழ வேண்டும். அரசருக்கு நம்பிக்கை மட்டுமே இருக்க கூடாது. எதற்கும் சாட்சி என்று ஒன்று இருக்க வேண்டும். அதை வைத்துதான் நீதியை உணர்த்த முடியும்.எனவே நாளை அரசாளும் நான் ஒரு அரசனாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய கடமைப்பட்டு உள்ளேன். நீ அக்னிக்கு ஏற்பாடு செய் என்று கூறுகிறார் ராமன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications