“ஜெயிலர்” படத்தில் எதிர்நீச்சல் குணசேகரனின் “அந்த” பாட்டு.. தியேட்டரில் குபீர் சிரிப்பலை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தியேட்டரில் அமோகமான வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து இருந்தார். அவர் நடித்த ஒரு காட்சிக்கு தியேட்டரில் அமோகமான சிரிப்பலை எழுந்தது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சில வருடங்களுக்கு பிறகு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் சமீபத்தில் வெளியான ஜெயலர் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தனர். அதில் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் நடிகர் மாரிமுத்துவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு குணசேகரனின் கெத்தான வசனங்களும் அவருடைய வித்தியாசமான நடிப்பையும் பார்த்து பழகியவர்களுக்கு ஜெயிலர் திரைப்படத்தில் மாரிமுத்துவின் நடிப்பு அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
கஞ்சி போட்டபோட்ட வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் விரைப்பாக இருக்கும் மாரிமுத்து ஜெயிலர் திரைப்படத்தில் கருப்பு சட்டையில் கருப்பு வேஷ்டியில் வலம் வருகிறார். கூடவே தோளில் ஒரு துண்டும் போட்டு இருக்கிறார். அது எதற்கு என்று தெரியவில்லை. ஆனால் எதிர்நீச்சல் குணசேகரன் போலவே அதே குங்குமமும் திருநீரும் வைத்து பட்டை போட்டு இருக்கிறார்.

அதுபோல படத்தின் ஆரம்பத்தில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வில்லன் வர்மா பக்கத்தில் கெத்தாக அமர்ந்திருப்பார். பிறகு இடைவேளைக்கு பிறகு தான் இவருடைய காட்சிகள் அதிகமாக இருக்கிறது. ரஜினிகாந்த் தன்னுடைய மகனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோவிலில் இருக்கும் கிரீடத்தை திருடுவதற்காக கிளம்பி போகும்போது வில்லன் வர்மாவின் ஆட்களில் இரண்டு பேர் அனுப்பி வைக்கிறார். அப்போது அதில் ஒருவராக மாரிமுத்துவும் இருக்கிறார்
வர்மா தினமும் போன் செய்து அங்கே ஜெயிலர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருமுறை நடிகை காம்னா அதாவது தமன்னா பற்றி அங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வர்மா போன் செய்து "டேய் என்னடா நடக்குது அங்க" என்று விசாரிக்கிறார்.
அதற்கு மாரிமுத்துவுடன் அனுப்பி வைக்கப்பட்ட வில்லன் போனை எடுத்து, "இங்க காம்னா இருக்கு வர்மா, அதான் அடடா மழைடா அட மழைடா" என்று சொல்ல, "நாயே போனை அண்ணன் கிட்ட குடுடா" என்று வர்மா அதாவது வில்லன் மிரட்டுகிறார். உடனே போனை வாங்கிய மாரிமுத்து "என்னடா சொன்னா வர்மா கிட்ட" என்று அந்த வில்லனிடம் கேட்க, அவர் "அடடா மழைடா காம்னா" என்று சொன்னேன் என்று சொல்ல, லூசு என்று திட்டிக்கொண்டு "வர்மா, தஞ்சாவூர் ஜில்லாக்காரி காம்னா" என்று மாரிமுத்து சொல்ல தியேட்டரில் இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அனைவருமே வாய் விட்டு சிரித்து விடுகிறார்கள்.
மாரிமுத்துவின் முக எக்ஸ்பிரஷனை பார்த்த ரசிகர்கள் காம்னாவை பற்றி ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் "தஞ்சாவூர் ஜில்லாக்காரி" என்று மாரிமுத்து பாட்டு பாடியது யாராலும் எதிர்பார்க்காமல் திடீர் சிரிப்பலை எழுந்து விட்டது. தற்போது இது குறித்த மீம்ஸ்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications