“மனிதாபிமான கொலை” ஸ்ரேயா கோஷலுக்கு இளையராஜா இப்படி செய்யலாமா..? காட்டமாக பேசிய ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் இளையராஜாவை பற்றி விமர்சித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் ஸ்ரேயா கோஷல் இடம் இளையராஜா நடந்து கொண்டது தவறு என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.
மேடையில் ஸ்ரேயா கோஷல் பாடிக் கொண்டிருக்கும் போது இளையராஜா கொடுத்த கமெண்டுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கி, பிறகு பத்து ஆண்டுகளுக்கு மேலாக சன் டிவி, விஜய் டிவி, மக்கள் தொலைக்காட்சி என பல டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் ரிவ்யூ கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு எதிராகவும் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றிய பேசிக் கொண்டிருக்கும்போது இசை அமைப்பாளர் இளையராஜா பற்றி காட்டமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் பேசுகையில், ஸ்ரேயா கோஷல் ஒரு முறை மேடையில் பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் "காணாத ஒன்றை தேடுதே என்று பாடுவதற்கு" பதிலாக "தோடுதே" என்று பாடினார். அப்போது மேடையில் இருந்த இளையராஜா மைக்ல ஒன்னு சொல்லி அந்த பாடகியை எப்படி அவமானப்படுத்தினாங்க, தெரியுமா? திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஸ்ரேயா கோசலை இளையராஜா விமர்சிக்கிறார்.
அப்போது கீழே இருந்த ஆடியன்ஸ் எல்லோரும் கைதட்டுறாங்க. ஏன்னா எல்லாமே அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்க. எல்லாருமே ராஜா சாரோட ஆடியன்ஸ். இப்ப அவருதானே ஹீரோவா இருக்காரு. அதனால அவரு பேசுனதும் கைத்தட்டி பாராட்டுறாங்க. இது எவ்வளவு பெரிய "மனிதாபிமான கொலை". ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி. ஹிந்தி பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறார். அப்போ அப்படிப்பட்டவங்க "காணாத ஒன்றை தேடுதே" என்பதற்கு பதிலாக தோடுதே என்று பாடினால் அது யாருடைய தப்பு..?

மேடையில் மொழி தெரியாதவங்கள பாட விட்டு தமிழ்ல ஜோக் சொல்லி கிண்டல் பண்றது சரியா? அந்த பொண்ணுக்கும் நீங்க பேசுறது புரியணுமில்ல. நீங்க இங்கிலீஷ்ல சொல்லுங்க. அவங்க தப்பா பாடுறாங்க திருத்திக்கணும் என்று அவங்களுக்கு சொல்லிக் கொடுங்க. அப்படி நீங்க திருத்தவே இல்லையே. மொழி தெரியாத ஒருத்தங்க தமிழ்ல பேசி கிண்டல் பண்ற அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார் இசை அமைப்பாளர் இளையராஜா. பலருடைய மனசில் இருந்து அவர் அப்போது இறங்கி விட்டார் என்று காட்டமாக ஜேம்ஸ் வசந்தன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications